காலையில் கிழிப்பு... மாலையில் மாற்றம்... அதிமுக அலுவலகத்தில் ஓ பன்னீர் செல்வம் படத்துடன் புதிய பேனர்
சென்னை: சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று தலைமை நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்ற நிலையில் ஓ பன்னீர் செல்வத்தின் படம் இருந்த பேனர் கிழிக்கப்பட்டது. இந்நிலையில் மாலையில் ஓ பன்னீர் செல்வம் படத்துடன் புதிய பேனர் வைக்கப்பட்டுள்ளது.
அதிமுகவில் உள்கட்சி பூசல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் இடையே கடுமையான வார்த்தைப்போர் நீடித்து வருகிறது.
அதிமுகவில் ஒற்றை தலைமையாக எடப்பாடி பழனிச்சாமியை கொண்டு வர முயற்சிகள் நடக்கிறது. இதற்கு ஓ பன்னீர் செல்வம் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.

கழக நிர்வாகிகள் கூட்டம்
இதனால் ஓ பன்னீர் செல்வம் பொதுக்குழுவில் அவமானப்படுத்தப்பட்டார். இந்நிலையில் தனது செல்வாக்கை மீண்டும் நிலைநாட்டும் வகையில் ஓ பன்னீர் செல்வம் நேற்று மதுரையில் இருந்து தேனிக்கு சாலை மார்க்கமாக சென்றார். அவருக்கு ஆதரவாளர்கள் வரவேற்பு அளித்தனர். இதற்கிடையே தான் சென்னையில் அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் நடக்கும் என எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் இருந்து அறிவிப்பு வெளியானது.

சென்னையில் நடந்த கூட்டம்
அதன்படி அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் இன்று காலை 10 மணிக்குத் தொடங்கி நடைபெற்றது. இதில் தலைமை கழக நிர்வாகிகள் பங்கேற்றனர். கட்சியின் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமை வகித்தார். எடப்பாடி பழனிச்சாமி, ஜெயக்குமார் உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதிமுக ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதாக, எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கூறிவரும் நிலையில், இடைக்கால பொதுசெயலாளராக எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிகாரம் அளிக்க இந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்றும் தகவல் வெளியாகின. மேலும் ஓ பன்னீர் செல்வத்தின் பதவியை பறித்து அவரை கட்சியில் நீக்க நடவடிக்கை எடுக்கப்படலாம் எனவும் கூறப்பட்டது. இருப்பினும் கூட்டத்தில் எடுத்த முடிவுகள் பற்றிய எந்த தகவலையும் நிர்வாகிகள் கூறவில்லை.

பேனரில் ஓ பன்னீர் செல்வம் படம் கிழிப்பு
இந்நிலையில், கூட்டம் நடைபெறும் ராயப்பேட்டை அலுவலத்திற்கு இன்று எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் திரண்டிருந்தனர். அவர்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பினர். மேலும் அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்த பேனரில் ஓ பன்னீர் செல்வத்தின் படத்தை அவர்கள் கிழித்தனர். நேற்று ஓ பன்னீர் செல்வத்தின் பிரசார வாகனத்தில் இருந்த எடப்பாடி பழனிச்சாமியின் படம் கிழிக்கப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அவரது ஆதரவாளர்கள் இந்த செயலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
Recommended Video

புதிய பேனர் வைப்பு
இந்நிலையில் இன்று மாலை மீண்டும் கட்சி அலுவலகத்தில் புதிய பேனர் வைக்கப்பட்டது. இதில் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் படங்கள், சிலைகள் இருப்பதோடு, ஒருபுறம் ஓ பன்னீர் செல்வத்தின் படமும், இன்னொரு பக்கத்தில் எடப்பாடி பழனிச்சாமியின் படமும் உள்ளது. இந்த பேனரில் கழக மகளிர் அணி என எழுதப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
"தாமரை சின்னத்தில் தமாகா 1 சீட் கூட ஜெயிக்காது”.. ஜி.கே.வாசன் முடிவுக்கு எதிராக கொதித்த நிர்வாகிகள்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்.. எடப்பாடி முதல் 23 பேர் களமிறங்கும் தொகுதிகள் அறிவிப்பு -
மொத்தம் 23 வேட்பாளர்கள்.. இந்த 3 பேரை கவனிச்சிங்களா! அதிமுகவில் தொகுதி மாறியவர்கள்! காரணம் இதுதான்! -
ஆக்டிவ் மோடில் ஸ்டாலின்.. கையில் எடுத்த பிரச்சார ஆயுதம்.. 2021 தேர்தலில் திமுக போட்ட பக்கா ஸ்கெட்ச் -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
அவிநாசி, ஊட்டி, நாகர்கோவில்! அதிமுக கோட்டைகளை பாஜகவுக்கு தாரை வார்ப்பதா? கொந்தளிக்கும் நிர்வாகிகள் -
கூட்டுறவு கடன் தள்ளுபடி! எடப்பாடி எடுத்த ஸ்மார்ட் முடிவு! வாக்குறுதிக்கு பின்.. இவ்வளவு பிளானிங்கா! -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
அதிமுக கூட்டணியில் வெளியேறும் பூவை ஜெகன்மூர்த்தி? அதிமுகவால் மனவேதனை.. இன்று முக்கிய முடிவு -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
செக் வைத்த எடப்பாடி பழனிசாமி! அண்ணாமலை அப்செட்? தமிழக பாஜக வேட்பாளர் தேர்வு கூட்டத்தில் மிஸ்ஸிங்!












Click it and Unblock the Notifications