சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆஹா கத்தரி வெயில் தொடங்க போகிறது.. அனல் பறக்க போகும் மீம்ஸ்கள்.. வெயிலில் எது ஃபிரையாக போகுதோ!

Google Oneindia Tamil News

சென்னை: அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயில் மே 4-ஆம் தேதி தொடங்கி 29-ஆம் தேதி வரை நீடிக்கிறது.

பொதுவாக அக்னி நட்சத்திரம் அல்லது கத்தரி வெயிலானது ஆண்டுதோறும் 21 முதல் 28 நாட்கள் வரை இருக்கும் . அந்த வகையில் இந்த ஆண்டு மே 4-ஆம் தேதி கத்தரி தொடங்கி 29-ஆம் தேதி வரை மொத்தம் 26 நாட்கள் நீடிக்கிறது.

இந்த வெயில் தொடங்கும் போது முதல் 7 அல்லது 8 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாகும். 21ஆவது நாளில் வெயில் உக்கிரமாக இருக்கும். அதைத் தொடர்ந்து படிப்படியாக தாக்கம் குறையும். இந்த நாட்களில் வெப்பநிலை 100 முதல் 110 டிகிரி வரை இருக்கும்.

 30-ஆம் தேதி முதல் 4 நாட்களுக்கு வெளுக்கும் மழை.. குளுகுளு கூலாகிறது சென்னை!- நார்வே வானிலை மையம் 30-ஆம் தேதி முதல் 4 நாட்களுக்கு வெளுக்கும் மழை.. குளுகுளு கூலாகிறது சென்னை!- நார்வே வானிலை மையம்

பயம்

பயம்

இந்த ஆண்டு கத்தரி தொடங்காத போதே வெயில் மண்டையை பிளக்கிறது. இதில் கத்தரி தொடங்கினால் எப்படி இருக்கும் என இப்போதே மக்களுக்கு பயம் வந்துவிட்டது.

மீம்ஸ்கள்

மீம்ஸ்கள்

தற்போது அடிக்கும் வெயிலுக்கு எப்போது மழை வரும் என வானிலை அறிவிப்புகளை ஆராய தொடங்கிவிட்டனர். இதில் கத்தரி வந்தால் அவ்வளவுதான். மக்கள் கூட பரவாயில்லை. மீம்ஸ் கிரியேட்டர்கள் படு பிஸியாக இருப்பார்கள்.

கருப்பு

கருப்பு

வழக்கமாக காலையில் வெள்ளையாக போனவர்கள் வீட்டுக்கு வரும் போது பிரெண்ட்ஸ் படத்தில் கரி தூள் கொட்டி கொள்ளும் வடிவேல் முகம் இருப்பதாக மீம்ஸ் போடுவர். இன்னொன்று முட்டையை சாலையில் ஊற்றி ஆம்லெட் செய்வது, சப்பாத்தி சுடுவது என மீம்ஸ்கள் பறக்கும்.

எது ஃபிரை

எது ஃபிரை

இன்னும் சொல்லபோனால் கிரில் சிக்கனை ஜன்னல் வழியாக வெயிலில் காட்டி பொரித்தால் பொரிவதாக மீம்ஸ் தயாரிப்பர். இந்த ஆண்டு எதை ஃபிரை செய்ய போகிறார்களோ என தெரியும். ஒருவேளை ஒரு குறும்பாட்டை வெயிலில் தனலில் காட்டி வேக வைப்பது போல் இருக்குமோ என்னவோ தெரியவில்லை. என்னதான் டைம்பாஸுக்கு இந்த ரவுசுகள் இருந்தாலும் வெயிலின் தாக்கத்தை குறைக்க முடியாதே

English summary
Agni Nakshathiram starts on May to May 29. It remains for 26 days.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X