அதிமுகவுக்குள் 3 குரல்கள்.. எடப்பாடி பழனிசாமியை ஒவ்வொரு பக்கம் இழுக்கும் சிவி சண்முகம், தங்கமணி!
சென்னை: தவெகவுக்கு ஆதரவளிப்பது தொடர்பாக அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் மத்தியில் 3 வகையான குரல்கள் எழுந்துள்ளன. தவெக அமைச்சரவையில் இடம்பெறலாம் என்று சிவி சண்முகம் தரப்பும், வெளியில் இருந்து ஆதரவு கொடுப்போம் என்று தங்கமணி தரப்பும், ஆதரவே கொடுக்க வேண்டாம் என்று ஓ.எஸ்.மணியன் தரப்பு தெரிவித்திருக்கிறது. இதனால் எடப்பாடி பழனிசாமி என்ன முடிவு செய்வார் என்ற கேள்வி எழுந்துள்ளன.
தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் பல்வேறு அதிரடி காட்சிகளை அரங்கேற்ற தொடங்கி இருக்கிறது. இந்த தேர்தலில் தவெக 108 தொகுதிகளிலும், திமுக 73 தொகுதிகளிலும், அதிமுக 53 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றதால், ஆட்சி அமைக்க முயற்சித்து வருகிறது. ஏற்கனவே தேசிய கட்சியான காங்கிரஸ் உடன் தவெக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

ஆனால் அதிமுக போன்ற பெரிய கட்சி ஆதரவு கொடுத்தால், விஜய்யால் 5 ஆண்டுகள் நிலையான ஆட்சியை கொடுக்க முடியும் என்று கருதுகிறது. இதனால் செங்கோட்டையன் மூலமாக அதிமுகவிடம் ஆதரவு கோரி இருக்கிறது. குறிப்பாக சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி ஆகியோரிடம் செங்கோட்டையன் பேசியதாக தெரிகிறது. இதனால் அதிமுக எம்எல்ஏ-க்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
இன்று நடக்கவிருந்த அதிமுக எம்எல்ஏ கூட்டம் ரத்தானதற்கு இதுவும் ஒரு காரணம். இந்த நிலையில் தவெகவுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக அதிமுக முக்கிய நிர்வாகிகள் மத்தியில் 3 குரல்கள் எழுந்துள்ளன. சிவி சண்முகம் தரப்பு தவெகவின் அமைச்சரவையில் இடம்பெறலாம் என்று ஆர்வமாக ஆலோசனை நடத்தி வருகிறது. இவரும் எஸ்பி வேலுமணியும் சந்திப்பு நடத்தி இருக்கின்றனர்.
இன்னொரு பக்கம் முன்னாள் அமைச்சர் தங்கமணி தரப்பில் அமைச்சரவையில் இடம்பெற வேண்டாம்.. ஆனால் தவெகவுக்கு ஓராண்டுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்போம் என்று ஆலோசித்திருக்கிறது. ஆனால் ஓ.எஸ்.மணியன் தரப்போ தவெகவுக்கு ஆதரவு கொடுக்க வேண்டாம் என்ற நிலைப்பாட்டில் இருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், க்ரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்திருக்கிறார். இதனால் அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு, எடப்பாடி பழனிசாமி முக்கிய முடிவை எடுப்பார் என்று தெரிகிறது. திமுக எதிர்ப்பே அதிமுகவுக்கு பிரதானம் என்பதால், எடப்பாடி பழனிசாமி முடிவு தவெகவுக்கு சாதகமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கபப்டுகிறது.
-
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications