பாஜக 23, பாமக 23, தேமுதிக 6.. பியூஷ் கோயலிடம் ஒப்புக்கொண்ட எடப்பாடி.. அதிமுக - பாஜக மெகா டீல்?
சென்னை: பாஜகவிற்கு 23 தொகுதிகள் ஒதுக்க அதிமுக ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடன் நடந்த சந்திப்பில் எடப்பாடி பழனிசாமி ஒப்புகொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிமுக 170 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுக சார்பில் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். அது போல் பியூஷ் கோயலுடன் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். எம்ஆர்சி நகருக்கு வந்த பியூஷ் கோயலை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வேலுமணியும் தங்கமணியும் வரவேற்றனர்.

பியூஷ் கோயல் வருகை
தமிழ்நாடு தேர்தல் பொறுப்பாளராக கடந்த செப்டம்பரில் நியமிக்கப்பட்ட மக்களவை உறுப்பினர் பையந்த் பாண்டாவிற்குப் பதிலாக பியூஷ் கோயல் இப்பொறுப்பை ஏற்றார். இப்படிப்பட்ட நிலையில்தான் எடப்பாடி உடன் அவர் இன்று சந்திப்பை நடத்தினார். கடந்த டிசம்பர் 14 அன்று டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, பா.ஜ.கவின் தமிழ்நாடு தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்ததை தொடர்ந்து இந்தப் புதிய நியமனம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மொத்தம் 234 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், மதிமுக, விசிக, சிபிஐ, சிபிஎம், ஐயுஎம்எல், மமக, த.வா.க, ஏடிபி, ஏஐஎஃப்.பி மற்றும் எம்.வி.கே.இணைந்து மொத்தம் 159 இடங்களைக் கைப்பற்றின. தி.மு.க மட்டும் 126 இடங்களைப் பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது.
அதே தேர்தலில், பா.ஜ.க. போட்டியிட்ட 20 தொகுதிகளில் நான்கு இடங்களை வென்றது. அ.தி.மு.க.வுடனான கூட்டணியும், வேட்பாளர்களின் தொகுதி familiarity-யும் 2001-க்குப் பிறகு பாஜக மீண்டும் மாநில சட்டசபையில் காலடி பதிக்க உதவின. 2024 மக்களவைத் தேர்தலில் எந்தக் கட்சியுடனும் கூட்டணி இல்லாமல் கூட, பா.ஜ.க. தனது வாக்கு சதவீதத்தை இரு இலக்க எண்ணாக அதிகரிக்க முடிந்தது.
பாஜகவின் வளர்ச்சி
பியூஷ் கோயலை மாநில தேர்தல் பொறுப்பாளராக நியமித்ததற்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன. 2026 சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து அ.தி.மு.க.விடம் இருந்து 65 தொகுதிகளை பா.ஜ.க. கோரலாம் என்று நயினார் நாகேந்திரன் ஒரு பட்டியலை சமர்ப்பித்து இருந்தார் மத்திய அமைச்சர் என்ற அனுபவம் மட்டுமல்லாமல், கோயல் பல்வேறு மாநிலங்களில் கட்சியின் தேர்தல் முயற்சிகளை ஒருங்கிணைப்பதில் முக்கியப் பங்காற்றியுள்ளார். முக்கியமாக தமிழ்நாட்டில் தொடர்ந்து பல அரசியல் நகர்வுகளை மேற்கொண்டுள்ளார்.
பா.ஜ.கவின் மூத்த தலைவர் ஒருவர் நம்மிடம் தெரிவித்த தகவலில், "பாஜக அதிக இடங்களில் போட்டியிடவுள்ளது. இதன் பின்னணியில்தான் பியூஷ் கோயல் மாநிலத்தின் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஏனெனில், 2019 மக்களவைத் தேர்தலில், இவரால்தான் பா.ஜ.க. சுமார் ஐந்து தொகுதிகளில் போட்டியிட முடிந்தது. இவருக்கு அ.தி.மு.க. தலைமைடன் நல்லுறவு இருப்பதாகக் கூறப்படுகிறது" என்றார். திராவிடக் கட்சிகளின் ஆதிக்கம் நிறைந்த மாநிலத்தில் வலுவான கூட்டணியை அமைப்பதற்கு முக்கியமான தொகுதிப் பங்கீட்டு ஏற்பாட்டில் கோயல் முக்கியப் பங்காற்றியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மத்திய பா.ஜ.க. தலைமைக்கும் மாநிலப் பிரிவுக்கும் இடையே ஒருமித்த வியூகத்தை உறுதிப்படுத்தும் விதமாக அவர் திறம்பட ஒருங்கிணைத்தார். அரசியல் ஆலோசகர்கள் இது தொடர்பாக கூறுகையில், பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணி மிக அவசியம். அதை உடையாமல் பார்த்துக்கொள்ள கோயல் அவசியம். எடப்பாடி பழனிசாமி கூட்டணியின் முகமாக இருக்கும் நிலையில், பல விதங்களில் இது ஆந்திரப் பிரதேச மாடலை போலவே இருக்க போகிறது. அங்கு சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி மூத்த பங்காளியாகவும், பா.ஜ.க. இளைய பங்காளியாகவும் இருந்தது.. அதே மாடலை தமிழ்நாட்டில் செயல்படுத்த பியூஸ் கோயல் காய்களை நகர்த்துவார்.
பியூஸ் கோயல் டாஸ்க் என்ன?
இன்று பாஜகவிற்கு 23 தொகுதிகள் ஒதுக்க அதிமுக ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடன் நடந்த சந்திப்பில் எடப்பாடி பழனிசாமி ஒப்புகொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிமுக 170 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் தேமுதிகவுக்கு 6 தொகுதிகளில், பாமகவிற்கு 23 தொகுதிகள், தினகரன் திரும்பி வந்தால் அமமுகவிற்கு 3 தொகுதிகள் வழங்க எடப்பாடி ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த சந்திப்பில் கூட்டணி சுமூகமாக இருக்கும் வகையில் ஆலோசனைகள் செய்யப்பட்டதாகவும், கூட்டணிக்குள் புதிய கட்சிகளை இணைப்பது பற்றியும் இவர்கள் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications