சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

முதல்வர் கண்ணீருக்கு பின்.. ஆ.ராசாவின் மன்னிப்பு.. கண்துடைப்பு நாடகம் என அதிமுக சாடல்

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயாரை தரம் தாழ்ந்த வகையில் பேசியதற்கு, அரசியல் காரணங்களுக்காக இல்லாமல் தான் மன்னிப்பு தெரிவிப்பதாக திமுக எம்.பி. ராசா தெரிவித்துள்ளார்.

ஆனால், அரசியல் காரணங்களுக்காக தரம் தாழ்ந்த வகையில் விமர்சனம் செய்வதை தொடருவேன் என்று இதன் மூலம் ராசா தெரிவிக்கிறாரா? என்று அதிமுகவினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

AIADMK blasts A Raja for delayed apology to CM

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயாரை தரம் தாழ்ந்த வகையில் அநாகரிகமான வார்தையால் தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் ராசா விமர்சனம் செய்தார். இதற்கு ராசாவை கண்டித்து தமிழகம் முழுவதும் பெண்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை திருவொற்றியூரில் பிரச்சாரம் செய்தபோது, தனது தாயை எப்படி எல்லாம் இழிவாக பேசுகிறார்கள் என்று கண்ணீர் மல்க தெரிவித்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில், ஊட்டியில் பேசிய ராசா "அரசியல் காரணங்களுக்காக அல்லாமல் மன்னிப்பு தெரிவிப்பதில் தயக்கம் இல்லை" என்று கூறினார். இதுகுறித்து அதிமுகவினர் கூறுகையில், ராசாவின் பேச்சிலிருந்து, அரசியல் காரணங்களுக்காக தரம் தாழ்ந்த வகையில் பேசுவதை தொடர்வேன் என்று ராசா இதன் மூலம் தெரிவிக்கிறாரா. பிரச்சாரத்தில் தொடர்ந்து கீழ்த்தரமான பேச்சுகளை தொடர்வேன் என்றும் ராஜா சொல்கிறாரா என்று சமூக வலைதளங்களில் அதிமுகவினர் கேள்வி கேட்கின்றனர்.

ராசாவின் மன்னிப்பு என்பது கண் துடைப்பு நாடகம் என்பதற்கு தி.மு.கவினர் தொடர்ந்து பெண்களுக்கு எதிராக பேசி வருவதே சாட்சி என்றும் அதிமுகவினர் தெரிவிக்கின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X