எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.. யாருடன் கூட்டணி.. அதிமுக இன்று அறிவிப்பு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் லோக்சபா தேர்தல் கூட்டணி குறித்து முக்கிய விவாதங்கள் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிமுகவிற்கும் பாஜகவிற்கும் இடையேயான கூட்டணி உறவில் சிக்கல்கள் நீடிக்கிறது. கூட்டணி முறிந்து விட்டது என்று அதிமுகவின் ஜெயக்குமார் பகிரங்கமாக ஊடகங்களுக்கு அறிவித்தார். அதிமுக நிர்வாகிகள் பலரும் பொதுக்கூட்டம் போட்டு அண்ணாமலையை வசைபாடினர். ஆனால் அதைப்பற்றி எடப்பாடி பழனிச்சாமி எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. அதே நேரத்தில் பாஜக கூட்டணி பற்றி எதுவுமே பேச வேண்டாம் என்று எடப்பாடி பழனிச்சாமி வாய்மொழி உத்தரவு பிறப்பித்ததாக தகவல் வெளியானது.

AIADMK district secretaries meeting held today under the leadership of Edappadi Palanisamy

அதே நேரத்தில் செல்லூர் ராஜூவே அதிமுக பாஜக கூட்டணி இடையே பிரச்சினை இல்லை என்று சொன்னார். எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக வேண்டும் என்றும் மோடி பிரதமர் ஆக மீண்டும் வர வேண்டும் என்று சொன்னார் செல்லூர் ராஜூ. பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலையோ, அதிமுக பாஜக இடையே பிரச்சினை இருப்பதாக தெரியவில்லை என்று சொன்னார். அண்ணாமலைக்கும் அதிமுக நிர்வாகிகளுக்கும் இடையே பிரச்சினை இருக்கலாம் என்றும் சொன்னார்.

இந்த கூட்டணி கலவரங்களைப் பார்த்து ஓ.பன்னீர் செல்வம் கோஷ்டியினரோ, இது நாடகம் என்று சொல்லி வருகின்றனர். திமுக உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளோ, விளையாட்டு செய்திகள் என்று சொல்கின்றனர். லோக்சபா தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் கூட்டணியை முடிவு செய்ய வேண்டும்.

யாருடன் கூட்டணி என்று முடிவு செய்தால்தான் தொகுதி பங்கீடு குறித்து விரைவில் பேசி முடிவு செய்ய முடியும். வேட்பாளர்கள் பணிகளை தொடங்க முடியும். திமுக சைலண்டாக பணிகளை தொடங்கி விட்டது. வழக்கமாக அதிமுகதான் தேர்தல் பணிகளை முதலில் தொடங்கும். உட்கட்சி பிரச்சினை, கூட்டணி பிரச்சினை நீடிக்கிறது. அதிமுக பாஜக கூட்டணி நீடிக்கிறதா என்று ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு ஒருநாள் பொறுங்கள் எல்லாம் தெளிவாகும் என்று கூறியுள்ளார்.

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது.

இது குறித்து அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், எம்.ஜி.ஆர். மாளிகையில் நாளை பிற்பகல் தலைமை கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் , கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

மேலும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து விட்டு தமிழகம் திரும்பிய அதிமுக முன்னாள் அமைச்சர்கள், நேற்று சேலத்தில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசிய நிலையில், கூட்டத்தில் கூட்டணி நிலைப்பாடு குறித்து இன்றைய தினம் முக்கிய முடிவு எடுப்பதற்காக அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் இன்று பிற்பகல் 3.45 மணிக்கு இந்த கூட்டம் தொடங்கியது.
இன்றைய மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் லோக்சபா தேர்தல் தொடர்பாக மிக முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+