கிரேட் எஸ்கேப்.. இடைத் தேர்தலை வைத்து எடப்பாடி போடும் கணக்கு! கடைசியில் சிக்கப் போவது ‘இவர்’ தானா?
சென்னை : அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்ற தீர்ப்பு இன்னும் சில நாட்களுக்குள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தீர்ப்பு எப்படி வந்தாலும் அதற்கு பிறகு வர இருக்கும் இடைத்தேர்தலை தனக்கு கிடைத்த துருப்புச் சீட்டாக பயன்படுத்திக் கொள்ள எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டு இருக்கிறார் என்கின்றனர் அவர் தரப்பு ஆதரவாளர்கள்.
கிட்டத்தட்ட ஒன்பது மாதங்களுக்கும் மேலாக அதிமுகவில் ஒற்றை தலைமை தொடர்பாக பல்வேறு விவகாரங்களை எடப்பாடி பழனிச்சாமியும் ஓ.பன்னீர்செல்வமும் அடுத்தடுத்து சமாளித்து வந்திருக்கின்றனர்.
தற்போது உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தீர்ப்பு எப்படி வந்தாலும் அதற்குப் பிறகும் அதிமுகவில் நிகழும் சிக்கல்கள் தொடரும் என்கின்றனர் அரசியல் நிபுணர்கள்.

அதிமுக விவகாரம்
பொதுக்குழு செல்லுமா செல்லாதா என்பதுதான் தற்போது நீதிமன்றத்தில் இருக்கும் வழக்கின் முக்கிய அம்சம். அது எப்படி இருந்தாலும் அடுத்ததாக தேர்தல் ஆணையத்தில் இரு தரப்பும் நிச்சயமாக மல்லுக்கட்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. மேலும் பாஜக தலைமையின் ஆதரவு யாருக்கு இருக்கிறது என்பதும் பேசுபொருளாக இருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா என்பது கூட உறுதியாக தெரியவில்லை.

எடப்பாடி பழனிச்சாமி
இப்படி தொடர்ந்து குழப்பமான சூழலில் இருக்கும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு முக்கியமான ஒரு சவால் காத்திருக்கிறது. அது தமிழக சட்டசபைக்கு நடக்கவிருக்கும் திமுக ஆட்சிக் காலத்தில் வரும் முதல் இடைத்தேர்தல். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈரோடு கிழக்கு தொகுதி உறுப்பினர் திருமகன் ஈவேரா திடீரென உயிரிழந்தார். இதனால் அந்த தொகுதிக்கு ஆறு மாதங்களில் இடைத்தேர்தல் நடத்த வேண்டி இருக்கிறது. பொதுவாக இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சியை வெற்றி பெறும் என்றாலும் அதிமுகவை பொறுத்தவரை இந்த தேர்தலானது மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

ஈரோடு இடைத் தேர்தல்
காரணம் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்த இடைத்தேர்தல் இருக்கும் என்கின்றனர் அரசியல் நிபுணர்கள். திமுகவை பொருத்தவரை அந்தக் கட்சி கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி அது. அதேபோல் அதிமுகவில் அந்த தொகுதி ஜிகே வாசனின் தமாகவுக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது. திமுகவை பொருத்தவரை காங்கிரசுக்கு அந்த தொகுதியை ஒதுக்குமா அல்லது தேர்தலில் பலத்தை நிரூபிக்கும் வகையில் அந்தக் கட்சியே களமிறங்குமா என்பது ஒருபுறம் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

தேர்தல் வியூகம்
மேலும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி என்பதால் காங்கிரஸ் அதனை கேட்டு பெரும் எனவும் சில தகவல்கள் உலாவுகின்றன. இது ஒரு புறம் இருக்க எடப்பாடி பழனிச்சாமி இந்த தேர்தலை முன்னிறுத்தி பல்வேறு வியூகங்களை வகுத்திருப்பதாக சொல்கின்றனர் சேலம் தரப்பு நிர்வாகிகள். அந்த வகையில் தேர்தலில் போட்டியிடலாம் அல்லது தாமாகவுக்கு ஒதுக்கிவிடலாம் என இரு திட்டங்களை வைத்திருப்பதாக சொல்கின்றனர். தேர்தலில் அதிமுக போட்டியிட்டால் இரட்டை இலை சின்னம் கிடைக்குமா என்பதும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.

சின்னம் முடக்கம்
நிச்சயம் ஓ.பன்னீர்செல்வம் விட்டு தர மாட்டார் என்பதை எடப்பாடி பழனிச்சாமி உணர்ந்திருக்கிறார். ஒருவேளை எடப்பாடி பழனிச்சாமி தரப்பு போட்டியிட்டாலும் தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் முறையீடு செய்தால் சின்னம் முடக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. இதனால் இரு தரப்பும் வேறு வேறு சின்னங்களில் நின்றால் எப்படியும் தங்கள் தரப்புக்கு அதிக வாக்குகள் கிடைக்கும் இதனால் தனது பலத்தை நிரூபிக்க ஒரு வாய்ப்பாக இருக்கும் என கருதுகிறார். இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டால் அதற்கு பாஜக காரணம் என அக்கட்சி கூட்டணியில் இருந்து விலகி விடவும் வாய்ப்பாக கருதுகிறார்.

ஓபிஎஸ் என்ன முடிவு?
இதனால் நாடாளுமன்ற தேர்தலில் தான் நினைத்த கூட்டணியை அமைக்க முடியும் என நினைப்பதாகவும் கூறப்படுகிறது. அப்படி இல்லை என்று திமுக காங்கிரசுக்கு அந்த தொகுதியை ஒதுக்கினால் தாமாகவுக்கு அந்த தொகுதியை வழங்கிவிட எடப்பாடி பழனிச்சாமி முடிவு செய்து இருக்கிறார் எனவும் மற்றொரு தகவல் உலாவுகிறது. எது எப்படி எனினும் தேர்தலில் பலத்தை நிரூபிக்க இரு கூட்டணிகளுமே தீவிரம் காட்டும். மேலும் விவகாரத்தில் ஓபிஎஸ் என்ன முடிவெடுப்பார் என்பதும் எடப்பாடி தரப்பின் யோசனையாக இருக்கிறது.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications