சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஏய்...ஏம்ப்பா இப்படி..! வாயை தொறந்தாலே ஜெயில் தான்! என்னங்க நடக்குது இங்க! கொந்தளித்த ஜெயக்குமார்..!

Google Oneindia Tamil News

சென்னை : அரசை பற்றி பேசினாலே ஜெயில் தான் என்ற அவர் ஜனநாயக விரோத ஆட்சி நடந்து வருகிறது எனவும், காவல் துறையை ஏவல் துறையாக மாற்றி தமிழகத்தை தலை குனிய வைக்கும் செயல் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளர்.

சி.பா. ஆதித்தனாரின் 41வது நினைவு நாளையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு மரியாதை செலுத்திய பின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், தமிழை பட்டி தொட்டியிலும் பரவ மகத்தான பணியை செய்தவர் சி.பா.ஆதித்தனார், அவர் மறைந்தாலும் அவர் பணி தொடர்ந்து வருகிறது" என்றார்.

தலைமறைவான ஜெயக்குமார் மகளுக்கு சிக்கல்.. லிஃப்ட் விபத்தில் 'இன்னொரு பலி’.. போலீசார் தீவிர தேடல்! தலைமறைவான ஜெயக்குமார் மகளுக்கு சிக்கல்.. லிஃப்ட் விபத்தில் 'இன்னொரு பலி’.. போலீசார் தீவிர தேடல்!

ராஜ்ய சபா எம்பி வாய்ப்பு

ராஜ்ய சபா எம்பி வாய்ப்பு

தொடர்ந்து , ராஜ்ய சபா உறுப்பினராக நீங்கள் தேர்ந்தெடுக்கபட வாய்ப்புள்ளதாக தகவல் வருகிறது என்ற கேள்விக்கு பதிலளித்த அவர் கட்சி என்ன முடிவு எடுத்தாலும் அதற்கு கட்டுபடுவேன், திமுக போல சர்வாதிகார ஆட்சி, சர்வாதிகார தலைவர் அதிமுகவில் இல்லை என்றார்.

ஊடகங்கள் மீது வழக்கு பதிவு

ஊடகங்கள் மீது வழக்கு பதிவு

ஊடகங்கள் மீது தொடுக்கப்பட்ட ஜனநாயக தாக்குதலே வழக்கு பதிவு என்ற அவர் கருத்து சுதந்திரம் குறித்து எதிர்கட்சியாக இருந்த போது வாய் கிழிய பேசினார் இப்போது எங்கே போனது கருத்து சுதந்திரம் என கேள்வி எழுப்பினார் மேலும் ஜூனியர் விகடன் மீது மட்டுமல்ல இனி யார் மீது வேண்டுமானலும் வழக்கு தொடரப்படும் இது அனைவருக்குமான அச்சுறுத்தல்

பேசினாலே ஜெயில் தான்

பேசினாலே ஜெயில் தான்

அரசை பற்றி பேசினாலே ஜெயில் தான் என்ற அவர் ஜனநாயக விரோத ஆட்சி நடந்து வருகிறது. காவல் துறையை ஏவல் துறையாக மாற்றி தமிழகத்தை தலை குனிய வைக்கும் செயல். பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைத்த பின் பல மாநிலங்கள் குறைத்துள்ளது. வாக்குறுதி கொடுத்துவிட்டு ஏன் குறைக்கவில்லை

தலைநகரா? கொலை நகரா?

தலைநகரா? கொலை நகரா?

ஆட்சிக்கோ, அமைச்சருக்கோ சுயபுத்தி இல்லையா? தோழமை கட்சி ஆட்சி நடக்கும் கேரள அரசு கூட குறைத்திருக்கிறது, வாய் கிழிய பேசும் நீங்கள் ஏன் குறைக்கவில்லை . 20 நாளில் 18 கொலைகள் நடந்துள்ளது. இது தலைநகரா? கொலை நகரா? என கேள்வி எழுப்பிய ஜெயக்குமார், கொலை நகரமாகும் அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது" என பேசினார்.

English summary
AIADMK ex-minister Jayakumar has said that he is in jail for talking about the government and that the anti-democratic regime is going on and that it is an act of turning the police department into an evil department and making Tamil Nadu bow its head.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X