சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் நாளை கூட்டம்..ஓபிஎஸ்,இபிஎஸ் பெயரில்லாமல் கடிதம் மூலம் அழைப்பு

அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நாளை காலை 10 மணிக்கு நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நாளை காலை 10 மணிக்கு நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி பெயரில்லாமல் தலைமை நிலைய செயலாளர் என பெயர் பொறிக்கப்பட்ட கடிதம் வாயிலாக அதிமுக நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

AIADMK executives consult tomorrow call for meeting without OPS, EPS name

அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. இரட்டைத்தலைமை வேண்டாம் என்று எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். அதை ஏற்கும் மனநிலையில் ஓ.பன்னீர் செல்வம் தயாராக இல்லை.

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் மோதல் முற்றியது. கூட்டத்தில் இருந்து பாதியில் கோபத்தோடு வெளியேறிய ஓ.பன்னீர் செல்வம் மீது தண்ணீர் பாட்டில் வீசப்பட்டது. இதையடுத்து மீண்டும் பொதுக்குழு கூட்டம் ஜூலை 11ம் தேதி நடைபெறும் என்று எடப்பாடி அணியினர் அறிவித்தனர்.

நான் அப்படி சொல்லல! பாண்டவர்கள், கவுரவர்கள் யார்? திரெளபதி சர்ச்சைக்கு ராம் கோபால் வர்மா விளக்கம் நான் அப்படி சொல்லல! பாண்டவர்கள், கவுரவர்கள் யார்? திரெளபதி சர்ச்சைக்கு ராம் கோபால் வர்மா விளக்கம்

இரு தினங்களுக்கு முன்பு டெல்லி சென்ற ஓ.பன்னீர் செல்வம் இன்று சென்னை திரும்பினார். அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தை எப்படி சமாளிப்பது என்பது குறித்து தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதைதொடர்ந்து அதிமுகவில் ஆதரவாளர்களை திரட்ட, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் செய்ய ஓ.பன்னீர்செல்வம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது

அதிமுக தொண்டர்கள் தன்பக்கம் இருப்பதாக நம்பும் ஓ.பன்னீர் செல்வம் நீதி கேட்டு நெடும்பயணம் செல்லப்போகிறார். ஏற்கனவே தர்மயுத்தம் நடத்தியவர் என்பதால் அவர் சுற்றுப்பயணம் செல்வார் என்ற நம்பிக்கை அவரது ஆதரவாளர்களிடையே எழுந்துள்ளது.

இன்றைய தினம் மதுரை வந்த ஓ.பன்னீர் செல்வத்திற்கு அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொண்டர்கள் தனது பக்கம் இருப்பதாக கூறினார் ஓ.பன்னீர் செல்வம். தனக்கு எதிராக சதிவலை பின்னப்பட்டுள்ளதாகவும் அவர்களை அடையாளம் கண்டு தொண்டர்கள் தண்டிப்பார்கள் என்றும் கூறியுள்ளார் ஓ.பன்னீர் செல்வம்.

அதிமுகவை கைப்பற்ற புது வியூகம் வகுத்துள்ளதாகவும் நாளைய தினம் சென்னை திரும்பும் ஓ.பன்னீர் செல்வம் செவ்வாய்கிழமையன்று ராயப்பேட்டையில் தலைமை அலுவலகத்திற்கு செல்வார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் ஓ.பன்னீர்செல்வம் சுற்றுப்பயணம் செய்யவுள்ளதால் இதை எப்படி சமாளிப்பது என்று எடப்பாடி பழனிசாமி அணியினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே சசிகலாவும் திடீரென அரசியல் சுற்றுப்பயணம் கிளம்பி விட்டார். அதிமுகவை காக்கும் பொறுப்பு தனக்கு உள்ளது என்றும் எங்களுடைய பிரச்சினைகளை நாங்களே பேசி தீர்த்துக்கொள்வோம் என்றும் கூறி வருகிறார்.

ஓ.பன்னீர் செல்வம் சொந்த ஊருக்கு சென்றுள்ள சூழ்நிலையில் நாளைய தினம் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நாளை காலை 10 மணிக்கு நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி பெயரில்லாமல் தலைமை நிலைய செயலாளர் என பெயர் பொறிக்கப்பட்ட கடிதம் வாயிலாக அதிமுக நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

English summary
An announcement has been made that the AIADMK executive council meeting will be held tomorrow at 10 am. O. Panneer Selvam, Edappadi Palanichamy The AIADMK executives have been summoned in a letter bearing the name of the Chief Secretary without anonymity.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X