சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ராகுகாலம் முடிந்து நல்ல நேரத்தில் தொடங்கிய அதிமுக பொதுக்குழு கூட்டம்- 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்

திமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் இன்று கூடுகிறது: வழிகாட்டுதல் குழுவுக்கு அதிகாரம் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேறுகின்றன.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள சூழ்நிலையில் அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் இன்று நடைபெற்றது. ராகுகாலம் முடிந்து நல்ல நேரத்தில் காலை 11 மணிக்கு கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் அதிமுக எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள், மூத்த தலைவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்த செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் மொத்தம் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Recommended Video

    சென்னை: அதிமுக செயற்குழு-பொதுக்குழு கூட்டம்.. தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து ஆலோசனை..!

    234 இடங்களை கொண்டுள்ள தமிழக சட்டசபையின் ஆயுள்காலம், அடுத்த ஆண்டு மே மாதம் 24ஆம் தேதி முடிவுக்கு வருகிறது.
    கொரோனா காலமாக இருந்தாலும் தேர்தல் ஆணையமும், அரசியல் கட்சியினரும் படு பரபரப்பாக தேர்தல் வேலைகளை ஆரம்பித்து விட்டனர்.

    2021 சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், தமிழகத்தில் அதிமுக, திமுக உள்ளிட்ட பெரும்பான்மையான கட்சிகள் பிரசாரத்தை தொடங்கிவிட்டன. திமுக பிரச்சார வியூகத்தை ஆரம்பித்து விட்டது. கூட்டணி பேச்சுவார்த்தைகள் இறுதி செய்யப்படாமலேயே பிரச்சாரத்தை தொடங்கி விட்டன அரசியல் கட்சிகள்.

    தேர்தல் பரபரப்பு

    தேர்தல் பரபரப்பு

    தமிழகத்தில் சட்டசபைத் தேர்தலுக்காக பணிகளை தேர்தல் ஆணையம் முடுக்கி விட்டுள்ள நிலையில் சட்டசபைத் தேர்தலை சந்திக்க அரசியல் கட்சியினரும் ஆயத்தமாகி வருகின்றனர். ஆளும் கட்சியான அதிமுக ஆட்சியை தக்கவைக்க கனஜோராக களமிறங்கி விட்டது.

    அதிமுக பொதுக்குழு கூட்டம்

    அதிமுக பொதுக்குழு கூட்டம்

    முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் மாநிலம் முழுவதும் சுறுசுறுப்பாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் அதிமுகவின் பொதுக்குழு, செயற்குழு கூட்டம் இன்று கூடியது. அதிமுகவில் 300க்கும் மேற்பட்ட செயற்குழு உறுப்பினர்கள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளனர். பொதுக்குழு கூட்டத்தில் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்றுள்ளனர்.

    ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றம்

    ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றம்

    அதிமுக செயற்குழு, பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமியை ஏற்பதாக ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை உலகப்புகழ் பெற்றதாக உருவாக்கும் அரசுக்கு பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    அரசை பாராட்டி தீர்மானம்

    அரசை பாராட்டி தீர்மானம்

    தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு அரசு வேலையில் 20% இட ஒதுக்கீடு முறைப்படுத்திய முதல்வருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை விமர்சனம் செய்யும் மு.க ஸ்டாலினை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கொரோனா கட்டுப்பாட்டு பணிகள், நீர்மேலாண்மைக்கு விருது பெற்றது, மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித இடஒதுக்கீடு அளித்தது, மாநிலம் முழுவதும் 2000 அம்மா மினிகிளினிக் அமைக்கப்பட்டது உள்ளிட்ட அரசின் பல்வேறு சாதனைகளை பாராட்டி 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    English summary
    AIADMK Executive Committee and General Committee meeting is being held in Chennai today under the chairmanship of E. Madhusudhanan. Key decisions regarding the powers of the Coordinators OPS, EPS and the powers of the Steering Committee to decide on the electoral alliance are to be passed.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X