கள்ளக்குறிச்சி கலவரம்! பேஸ்புக்கில் பதிவிட்ட அதிமுக ஐடி விங் நிர்வாகிகள் கைது! கொதித்தெழுந்த அதிமுக!
சென்னை : கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண சம்பவம் தொடர்பாக முகநூலில் பதிவிட்டு வதந்தி பரப்பும் வகையில் செயல்பட்டதாக பெரம்பலூர் மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப அணியை சேர்ந்த சூர்யா மற்றும் தீபக் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளகுறிச்சி மாவட்டம் சின்னசேலம் கன்னியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்த மாணவி ஶ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் மாணவியின் மரணத்திற்கு நீதிகேட்டு நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது.
பள்ளிவாகனங்கள், உடமைகளுக்கு தீவைக்கப்பட்டு கற்கள்வீசி தாக்குதல் நடைபெற்றது. தனியார் பள்ளிமீது தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை திங்கள்கிழமை ஒரு நாள் தனியார் பள்ளிகள் இயங்காது என்று தமிழ்நாடு தனியார் பள்ளி தாளாளர் நலச்சங்கம் அறிவித்துள்ளது.

டிஜிபி சைலேந்திரபாபு
இதுகுறித்து பேசிய தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபு,"கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார் செயலாளர் சாந்தி முதல்வர் சிவசங்கரன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாணவி மரணம் தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது" என கூறியுள்ளார்.

உள்துறைச் செயலாளர்
மேலும் இந்த இந்த விவகாரத்தில் அனைத்து சந்தேகங்களையும் கலைய அரசு உறுதியாக உள்ளது. பொதுமக்கள் வன்முறையில் ஈடுபட வேண்டாம், வதந்திகளை நம்ப வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம் என உள்துறைச் செயலாளர் கூறினார். இந்நிலையில் இச்சம்பவத்திற்கு முன்னதாக சமூக வலைதளங்களில் ஆட்களை திரட்டியவர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் கண்காணித்து வந்தனர்.

அதிமுக நிர்வாகிகள் கைது
இந்நிலையில், கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண சம்பவம் தொடர்பாக முகநூலில் பதிவிட்டு வதந்தி பரப்பும் வகையில் செயல்பட்டதாக பெரம்பலூர் மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப அணியை சேர்ந்த சூர்யா மற்றும் தீபக் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக தவறான தகவல்களை பரப்பியதாக தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Recommended Video

அதிமுக கடும் கண்டனம்
இதனிடையே போலீசார் நடவடிக்கைக்கு அதிமுக கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது. அதிமுக ஐ.டி.விங்கை சேர்ந்தவர்கள் கைதுக்கு அதிமுகவின் ஐ.டி.விங் செயலாளரான சிங்கை ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள பதிவில்,"கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக முகநூலில் பதிவிட்ட பெரம்பலூர் மாவட்ட IT Wing தீபக், சூர்யா இருவரையும் காவல்துறையினர் கைது செய்தது @mkstalin அவர்களின் கோழைத்தனத்தை காட்டுகிறது முதலில் சட்டம் ஒழுங்கை காப்பாற்றுங்கள்!! அஞ்சமாட்டோம் அஞ்சமாட்டோம்!! அடக்குமுறைக்கு அஞ்சமாட்டோம்!!" என பதிவிட்டுள்ளார்.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications