சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

துரைமுருகன் கூறிய கருத்து வேதனை தருகிறது... வைகோ வருத்தம்

Google Oneindia Tamil News

Recommended Video

    புதுக்கோட்டையில் வைகோ பத்திரிகையாளர்கள் சந்திப்பு

    புதுக்கோட்டை: கூட்டணி குறித்து தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் கூறிய கருத்து ம.தி.முக.வினருக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

    தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் கடந்த சில நாட்களுக்கு முன்பு அளித்த பேட்டியில், தி.மு.க.வுடன் உள்ள கூட்டணி கட்சிகள் குறித்து கருத்து தெரிவித்திருந்தார். இப்போது தி.மு.க.வுடன் உள்ள கட்சிகள் கடைசி நேரத்தில் விலகலாம். தி.மு.க.வை இதுவரை எதிர்த்து வருபவர்கள் கடைசி நேரத்தில் உள்ளே வரலாம் என்றும், ம.தி.மு.க. மற்றும் விடுதலை சிறுத்தைகள் போன்ற கட்சிகள் தி.மு.க.வுடன் நட்புடன் உள்ளனர் என்றும் அதில் தெரிவித்திருந்தார்.

    aiadmk ministers should be cautious in vaiko fame, says Tamilisai

    இந்தநிலையில், புதுக்கோட்டையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியதாவது: கூட்டணி குறித்து தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் கூறிய கருத்து ம.தி.முக.வினருக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தான் முடிவு கூற வேண்டும். நாங்கள் கூட்டணியில் இருக்கிறோமா என்பதற்கு அவர் தான் பதில் கூற வேண்டும்.

    இந்தியாவை பாரதிய ஜனதாவும், ஆர்.எஸ்.எஸ்.சும் ரத்த களரியாக்கப் பார்க்கிறது. வரும் பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா பிரதமர் வேட்பாளராக நிதின் கட்காரியை அறிவிக்க உள்ளது.

    கஜா புயல் பாதிப்பால் ஏராளமான விவசாயிகள், மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இதுவரை மத்திய அரசு வெறும் 4 சதவிதம் மட்டுமே நிவாரணம் வழங்கியுள்ளது. பட்டேல் சிலையை அமைக்க 3 ஆயிரம் கோடி செலவு செய்துள்ளனர். ஆனால் விவசாயிகளுக்கு கொடுக்க தயங்குகிறார்கள். மத்திய அரசு தூக்கி எறியப்படவேண்டிய அரசு, கஜா புயலால் இறந்தவர்களுக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்.

    aiadmk ministers should be cautious in vaiko fame, says Tamilisai

    விவசாயத்தை பற்றி தமிழக முதல்-அமைச்சருக்கு ஒன்று தெரியாது. எட்டு வழிச்சாலைக்கு ரூ.50 ஆயிரம் அறிவித்து விட்டு, புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரத்திற்கு ரூ.1100 அறிவித்தால் நியாயமா?. ஒரு ஏக்கர் வாழை மரத்திற்கு ரூ.45 ஆயிரம் கொடுக்க வேண்டும். தென்னை மரத்திற்கு ரூ.50 ஆயிரமும், மரத்தை அகற்ற ரூ.2 ஆயிரமும் வழங்க வேண்டும். ஒரு ஏக்கர் நெல்லுக்கு ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும். புயலில் வீடு இழந்தவர்களுக்கு அரசு ரூ.3 லட்சத்தில் வீடு கட்டி கொடுக்க வேண்டும். தேக்கு மரத்திற்கு ரூ.75 ஆயிரம் கொடுக்க வேண்டும். மீட்பு பணியில் உயிரை கொடுத்து பணியாற்றி கொண்டிருக்கும் மின்சார ஊழியர்களுக்கும், மாவட்ட கலெக்டர்களுக்கும் மற்றும் அரசு துறை அதிகாரிகளுக்கும் நான் தலை வணங்குகிறேன்.

    புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு நாங்கள் தனி அறிக்கையை தயாரித்து வருகின்றோம். நான் யாரையும் குறை சொல்லவும், விமர்சனம் செய்யவும் வரவில்லை. தமிழகத்திற்கு புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ரூ.25 ஆயிரம் கோடி மத்திய அரசு நிதி வழங்க வேண்டும். அப்படி வழங்கவில்லை என்றால் பிரதமர் மோடியை தமிழகத்திற்குள் அனுமதிக்க மாட்டோம். தமிழகத்திற்குள் எந்த பகுதிக்கு பிரதமர் மோடி வந்தாலும் நாங்கள் கருப்பு கொடி காட்டுவோம். தற்போது புயல் பாதித்த பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு இருக்கும் மத்திய குழு ஒரு அயோக்கிய குழு. தமிழக அரசிற்கு முதுகெலும்பு போய் 2 ஆண்டுகள் ஆகிறது என்றும் கூறினார்.

    English summary
    aiadmk ministers should be cautious in vaiko's fame, Tamil Nadu bjp leader Tamilisai Soundararjan tweet
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X