அதிமுக எம்எல்ஏ-க்கள் ராஜினாமா.. சபாநாயகர் நடவடிக்கை செல்லும்.. சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக எம்எல்ஏ-க்கள் 6 பேரின் ராஜினாமாவை ஏற்று சபாநாயகர் நடவடிக்கை செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. தகுதி நீக்க நடவடிக்கை பற்றி சபாநாயகர் 2 மாதங்களில் முடிவெடுக்க வேண்டும் என்று கூறியுள்ள உயர்நீதிமன்றம், அதிமுக எம்எல்ஏ-க்கள் 6 பேர் ராஜினாமா செய்தது செல்லும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

சட்டசபைத் தேர்தலில் அதிமுக 47 தொகுதிகளில் மட்டுமே வென்று 3வது இடத்திற்கு தள்ளப்பட்டது. இதனால் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அதிருப்தி அணி உருவாகியது. எடப்பாடி பழனிசாமி உத்தரவையும் மீறி அதிமுக எம்எல்ஏ-க்கள் 25 பேர் தவெக அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்களித்தனர். இதன்பின் அதிமுக எம்எல்ஏ-க்களுக்கு எதிராக தகுதி நீக்க கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி புகார் கொடுத்தார்.

AIADMK Madras High Court TVK

இதனிடையே அதிமுக எம்எல்ஏ-க்கள் மரகதம் குமரவேல், சத்தியபாமா, ஜெயக்குமார், இசக்கி சுப்பையா, விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் தங்களின் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நேராக தவெகவில் ஐக்கியமாகினர். தகுதி நீக்க நடவடிக்கை நிலுவையில் இருக்கும் போது ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றது தவறு என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக சார்பாக வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களுடம் முடிவடைந்துவிட்ட சூழலில் அக்டோபர் 9ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் நீதிபதி திடீரென விடுப்பில் சென்றுவிட்டதால், இன்று தீர்ப்பு அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அதிமுக எம்எல்ஏ-க்கள் 6 பேரின் ராஜினாமாவை ஏற்று சபாநாயகர் நடவடிக்கை செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

தகுதி நீக்க நடவடிக்கை பற்றி சபாநாயகர் 2 மாதங்களில் முடிவெடுக்க வேண்டும் என்று வழிகாட்டுதல் வழங்கியுள்ள உயர்நீதிமன்றம், அதிமுக எம்எல்ஏ-க்கள் 6 பேர் ராஜினாமா செய்தது செல்லும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+