பாஜக கூட்டணிக்கு அதிமுக ஜெயக்குமார் எதிர்ப்பு?புத்தாண்டு வாழ்த்து செய்தியில் எடப்பாடி போட்டோ காணோம்!
சென்னை: பாஜக கூட்டணிக்கு எதிராக மிக கடுமையாக பேசி வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கடந்த சில நாட்களாக மவுனமாக இருந்து வந்தார். இந்த நிலையில் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளை இன்று தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி படத்தை தவிர்த்துள்ளது சர்ச்சையாக வெடித்துள்ளது.
அதிமுக- பாஜக இடையேயான கூட்டணி 2 ஆண்டுகளுக்கு முன்னர் முறிந்த போது, ஊடகங்களுக்கு நாள்தோறும் பேட்டி கொடுத்தவர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். அப்போது பாஜகவை மிக கடுமையாக விமர்சித்தார் ஜெயக்குமார்.

பாஜகவுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை; இப்போதும் எப்போதும் கூட்டணி இல்லை என்றெல்லாம் ஜெயக்குமார் வசனத்தை அள்ளிவிட்டார். தமிழ்நாடு பாஜகவின் முன்னாள் தலைவரான அண்ணாமலையையும் மிக கடுமையாக விமர்சித்தார் ஜெயக்குமார்.
இந்த நிலையில் சென்னையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து, அதிமுக- பாஜக கூட்டணியை உறுதி செய்து அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து ஜெயக்குமார் கடந்த சில நாட்களாகவே கனத்த மவுனம் காத்து வருகிறார். ஊடகங்களும் மாஜி அமைச்சர் ஜெயக்குமார்? எங்கே என கேள்வி கேட்டு வந்தன..
அத்துடன் ஜெயக்குமாரின் பாஜகவுக்கு எதிரான வீடியோ பேட்டிகள் சமூக வலைதளங்களில் அதிதீவிரமாக பகிரப்பட்டும் வந்தன. ஜெயக்குமார் தமது சமூக வலைதளப் பக்கங்களிலும் கடந்த சில நாட்களாக எதுவும் பதிவிடாமல் இருந்தார்.
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...💐💐💐💐 pic.twitter.com/EZYLc3Wlit
— DJayakumar (@djayakumaroffcl) April 13, 2025
இந்த நிலையில் சற்று முன்னர் ஜெயக்குமார் தமது எக்ஸ் பக்கத்தில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த புத்தாண்டு வாழ்த்துக்கான படத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி படம் இடம் பெறவில்லை. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படம் ம்ட்டுமே இடம் பெற்றுள்ளது.
மேலும் அம்மாவின் குருகுல மாணவனாய் அவர் வழியில் நின்று எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் என்றும் தெரிவித்துள்ளார்.
அதிமுக- பாஜக கூட்டணி அறிவிப்புக்கு பின்னர் முதல் முறையாக சோசியல் மீடியாவில் ஜெயக்குமார் தலைகாட்டியதால், நெட்டிசன்கள் ரவுண்டு கட்டிவிட்டனர். கடந்த 4 நாட்களாக எங்க சார் போனீங்க என சரமாரியாக கேள்வி கேட்டு பதிவுகளை போட்டும் வருகின்றனர். ஒரு சிலர், எங்கசார் எடப்பாடியார் படம் மிஸ்ஸிங் என கவனமாகவும் கேள்வி கேட்டு வருவதால் ஜெயக்குமார் எக்ஸ் பக்கம் பரபரப்பாக இருக்கிறது.
-
ஒரே நாளில் 13 லட்சம் உறுப்பினர்கள்.. குவியும் ஆதரவு.. நன்றி தெரிவித்த அண்ணாமலை! -
பனையூரில் பின்வாசல் வழியாக நுழைய முயன்ற அதிமுகவினர்! ஒரே தள்ளுமுள்ளு! விஜய் ஆபீஸில் என்ன நடக்கிறது -
இசக்கி சுப்பையா டூ கடம்பூர் ராஜு.. இதுவரை எத்தனை அதிமுக மாஜி அமைச்சர்கள் தவெகவில் ஐக்கியம்! லிஸ்ட் -
விஜய் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றல.. எல்லாம் போச்சு.. அப்செட்டில் இருக்கும் அதிமுக புள்ளிகள்! -
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
பாஜக மட்டுமில்லை.. அண்ணாமலையால் தவெக - திமுக - அதிமுக - நாம் தமிழருக்கு விழும் பெரிய அடி -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
இது ட்ரெய்லர் தான்.. அதிமுகவுக்கு தவெக எழுதப்போகும் கிளைமாக்ஸ்.. அருண்ராஜ் அதிரடி -
சல்லி சல்லியாய் நொறுங்கும் எடப்பாடி கனவு.. அதிமுக இனி அவ்வளவு தான்? தவெகவுக்கு தாவ தயாரான தலைகள்! -
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
சோனம் வாங்சுக் மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும்! கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தல்!












Click it and Unblock the Notifications