எம்ஜிஆர் தேசிய தலைவரா? திராவிட தலைவரா? தமிழிசை சௌந்தரராஜன் சொன்ன ‘அடடே’ பதில்!
சென்னை : நல்ல நோக்கத்திற்காக எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட கட்சி அதிமுக, அதிமுக ஒன்றுபட வேண்டும் என்பது எனது தனிப்பட்ட விருப்பம் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். அதிமுகவில் ஓபிஎஸ் ஈபிஎஸ் இடையே கடந்த 7 மாதங்களாக மோதல் நிகழ்ந்து வரும் நிலையில் தமிழிசை சௌந்தரராஜன் இதனைத் தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 106வது பிறந்தநாள் விழா தமிழ்நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை அண்ணா சாலையில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, அதிமுக விவகாரம் தொடர்பாக தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.

எம்ஜிஆர் பிறந்த நாள்
1977ஆம் ஆண்டு முதல் தான் இறக்கும் வரை தமிழ்நாட்டில் தொடர்ந்து மூன்று முறை முதலமைச்சராக இருந்தவர் எம்ஜிஆர். முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 106வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது உருவச் சிலைக்கு தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

திருமணத்தை நடத்தி வைத்தவர்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன், "நான் மரியாதையுடன் பார்க்கக்கூடிய தலைவர் எம்ஜிஆர். கட்சி எல்லைகள் யாவற்றையும் கடந்து அவர் மீது எனக்கு தனிப்பட்ட மரியாதை உள்ளது. காமராஜர் கொண்டு வந்த மதிய உணவு திட்டத்தை விரிவுபடுத்தியவர் எம்ஜிஆர். மாணவர்களுக்கு அவர் படிப்புடன் சத்துணவும் கொடுத்தார். அவர் ஒரு சிறந்த ஆட்சியாளர்.

தேசியம் + திராவிடம்
எங்களது திருமணத்தை நடத்தி வைத்தவர் என்பதால் நன்றி உணர்வோடு அவருக்கு மரியாதை செலுத்தினேன்" எனத் தெவித்தார். எம்ஜிஆர் தேசிய தலைவரா? திராவிட தலைவரா? என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, தேசியம் போற்றிய திராவிட தலைவர் எம்.ஜி.ஆர் என்று தமிழிசை சௌந்தரராஜன் பதில் அளித்தார்.

ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்
தொடர்ந்து பேசிய தமிழிசை சௌந்தரராஜன், "அதிமுக துண்டு துண்டாகப் பிரிந்துள்ளது குறித்து ஆளுநராக என்னால் அரசியல் கருத்து கூற முடியாது. கட்சித் தலைவராக இருந்தால் தான் பதில் சொல்ல முடியும். எம்ஜிஆர் நல்ல கனவோடு கட்சியை நடத்தி வந்தார். அனைவரும் ஒற்றுமையாக ஒன்றிணைந்து பணியாற்றினால் சிறப்பாக இருக்கும் என்பதே என்னுடைய தனிப்பட்ட கருத்து" எனத் தெரிவித்துள்ளார்.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications