நாங்க இருக்கோம்..ஓபிஎஸ் பக்கம் சாயும் ‘தாமரை’! விரைவில் இடைத்தேர்தல்.. சின்னம் முடக்கம்! பரபர இபிஎஸ்
சென்னை : அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக ஓபிஎஸ் இபிஎஸ் இடையே நாளுக்கு நாள் மோதல் அதிகரித்து வரும் நிலையில் மக்களவைத் தேர்தலுக்குள் இருவரும் ஒன்றிணைய வேண்டும் என பாரதிய ஜனதா விரும்புவதாகவும் அவ்வாறு இணையவில்லை எனில் ஓபிஎஸ் தரப்புக்கு ஆதரவளிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது
நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி ஓ.பன்னீர்செல்வம் இடையேயான மோதல் ஒவ்வொரு நாளும் அடுத்தடுத்து உச்சகட்டத்தை சந்தித்து வருகிறது. ஆனால் தற்போதைக்கு ஒரு முடிவு எட்டப்படுவதாக தெரியவில்லை.
உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு வழங்கிய தீர்ப்புக்குப் பிறகு அதிமுகவில் உற்சாகத்தில் இருந்த எடப்பாடி பழனிசாமி தரப்பு தற்போது கடந்த சில நாட்களாக பின்னடைவை சந்தித்து வருகிறது. அதே நேரத்தில் ஓபிஎஸ் கை ஓங்கி இருக்கிறது.

அதிமுக
அதிமுகவில் அமைப்பு செயலாளராக நியமிக்கப்பட்டு இருந்த மைத்ரேயன் திடீரென ஓபிஎஸ் முகாமுக்கு தாவிய நிலையில் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார். மேலும் சில சீனியர்களும் ஓபிஎஸ் தரப்புக்கு செல்வது குறித்து ஆலோசித்து வருவதாக கிடைத்த தகவலால் கடும் அதிருப்தி அடைந்துள்ள எடப்பாடி பழனிச்சாமி தரப்பு அவர்கள் யார் என்பது குறித்து கண்டறிவதற்கான நடவடிக்கைகளை முடுக்கி விட்டிருக்கிறது. ஒருபுறம் பொது செயலாளர் தேர்தலை நடத்த நடவடிக்கைகளும் மறுபுறம் மக்களவைத் தேர்தலை கருத்தில் கொண்டு முன்னேற்பாடுகளையும் எடப்பாடி தரப்பு செய்து வருகிறது.

எடப்பாடி பழனிசாமி
இதில் பொது செயலாளர் தேர்தலில் நடத்த உச்ச நீதிமன்றம் தற்காலிக தடை விதித்துள்ள நிலையில் பாஜக மேல் இடத்தின் ஆதரவு யாருக்கு என்பது தான் அரசியல் களத்தில் பேசுபொருளாக இருக்கிறது. தற்போது கிடைத்துள்ள தகவல்களின்படி ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு பாஜகவின் ஆதரவு இருப்பதாக தெரிகிறது. டெல்லி தலைமையுடன் நெருக்கத்தில் இருந்த மைத்ரேயன் ஓபிஎஸ் தரப்புக்கு தாவியதற்கு காரணமும் இதுதான் என்கின்றனர் அதிமுகவினர். தேசிய அளவில் 2024 மக்களவைத் தேர்தலை சந்திக்க பாஜக தலைமை தீவிரம் காட்டி வரும் நிலையில் கடந்த தேர்தலை போல இந்த தேர்தலிலும் பாஜக படுதோல்வியை சந்திப்பதை விரும்பவில்லை.

எட்டாக்கனி
தனித்துப் போட்டியிடுவது எட்டாக்கனி என்பதை நன்கு உணர்ந்துள்ள பாஜக தலைமை அதிமுகவை கடந்த காலங்களைப் போல பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்துள்ளது. கடந்த தேர்தலில் ஒரே ஒரு எம்பி மட்டுமே கிடைத்த நிலையில் இந்த முறை கூட்டணியில் குறைந்தது 20 எம்பிக்களையாவது வெற்றி பெற வேண்டும் என தீவிர உழைப்பு காட்டி வருகின்றனர். தற்போது தமிழகத்தில் சொல்லிக் கொள்ளும்படி வேறு கட்சிகள் இல்லாத நிலையில் அதிமுகவை தான் பாஜக பெரிதும் நம்பி இருக்கிறது. ஆனால் உட்கட்சி விவகாரங்கள் காரணமாக அதிமுகவில் குழப்பங்கள் நடைபெறும் நிலையில் அதனை முடிவு கட்ட தேர்தலுக்குள் இரு தரப்பினரையும் சமரசம் செய்ய முனைப்பு காட்டி வருகிறது.

ஓபிஎஸ்க்கு ஆதரவு
ஆனால் எடப்பாடி பழனிச்சாமி இதற்கு ஒப்புக் கொள்ளாத நிலையில் ஓ பன்னீர்செல்வம் இணைப்பு நடவடிக்கைக்கு பச்சை கொடி காட்டி இருக்கிறார் எனவே ஓ பன்னீர்செல்வத்தை வைத்து காய்களை நகர்த்தி வருகிறது பாஜக ஒரு வேளை எடப்பாடி பழனிச்சாமி ஒப்புக்கொள்ளவில்லை என்றால் சின்னத்தை முடக்க திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாகவே பாஜக தலமையையொத்த கருத்துகளை பேசி வரும் ஆடிட்டர் குருமூர்த்தியும் பேசியதாகச் சொல்கின்றனர் ஓபிஎஸ் அணியினர்.
-
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய்












Click it and Unblock the Notifications