சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திமுக அரசை கண்டித்து இன்று அதிமுக கண்டன போராட்டம்- தமிழகம் முழுக்க நிர்வாகிகள் ரெடி.. என்ன காரணம்?

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாடு அரசை கண்டித்து இன்று அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது. மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது.

தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை என்று குற்றஞ்சாட்டி இந்த ஆர்ப்பாட்டம் நடக்கிறது. அதிமுக நிர்வாகிகள் பெரிய அளவில் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.

அதிமுக கட்சியின் நிர்வாக மாவட்டங்கள் 75லும் மாவட்ட செயலாளர்கள் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது.

மாஜி அமைச்சரின் நிழல் Vs அதிமுக பெண் பிரமுகர்! மேயர் தேர்தல் சடுகுடு! பின்னணி என்ன? மாஜி அமைச்சரின் நிழல் Vs அதிமுக பெண் பிரமுகர்! மேயர் தேர்தல் சடுகுடு! பின்னணி என்ன?

அதிமுக போராட்டம்

அதிமுக போராட்டம்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரின் அழைப்பின் பெயரில் இந்த போராட்டம் நடக்க உள்ளது. தமிழ்நாட்டில் தேர்தல் நேரத்தில் திமுக அளித்த குடும்ப தலைவிக்கு ரூபாய் 1000 திட்ட வாக்குறுதி, பெட்ரோல், டீசல் விலையில் ரூபாய் 5 குறைப்பு, நீட் ரத்து போன்ற வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று போராட்டம் நடக்கிறது.

பொங்கல்

பொங்கல்

அதேபோல் பொங்கல் பரிசுத்தொகையை அறிவிக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை குறைக்க வேண்டும் உள்ளிட்ட இன்னும் பல முக்கிய கோரிக்கைகளை வைத்தும் போராட்டம் நடக்க உள்ளது. அந்தந்த மாவட்டங்களில் இருக்கும் பேருந்து நிலையங்கள், அரசு அலுவலகங்கள், ஆட்சியர் அலுவலகங்கள் முன் போராட்டம் நடக்க உள்ளது.

சென்னை

சென்னை

சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டமாக இந்த போராட்டம் நடக்க உள்ளது. சென்னையில் பல்வேறு முன்னாள் அதிமுக எம்பிக்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னின்று நடத்த உள்ளனர். அதேபோல் கொங்கு மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் பெரிய அளவில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோவையில் அதிமுகவிற்கு அதிக அளவில் எம்எல்ஏக்கள் உள்ளனர்.

போராட்டம்

போராட்டம்

இவர்கள் எல்லோரும் தங்கள் தங்கள் தொகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலர் ரெய்டுகளில் சிக்கி உள்ள நிலையில் அரசுக்கு எதிராக புதிய அஸ்திரத்தை அதிமுக கையில் எடுத்து உள்ளது.

English summary
AIADMK to protest against DMK government in Tamilnadu today for not fulfilling election promises.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X