முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அப்போலோவில் சிகிச்சை.. எந்த தவறும் இல்லை! எய்ம்ஸ் கொடுத்த அறிக்கை!
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவருக்கு அளித்த சிகிச்சையில் தவறு இல்லை என ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் எய்ம்ஸ் மருத்துவக் குழு அறிக்கை அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Recommended Video
கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் இரண்டாவது முறையாக முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா சிறிது கால இடைவெளியிலேயே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார்.
தொடர்ந்து சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நீண்ட கால சிகிச்சைக்குப் பிறகு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

ஜெயலலிதா மரணம்
இந்த நிலையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் அமைத்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. இதையடுத்து சென்னை அப்போலோ மருத்துவமனை டாக்டர்கள் செவிலியர்கள் சசிகலா ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்ட ஜெயலிதாவுக்கு நெருக்கமானவர்கள் என இதுவரை 15 க்கும் மேற்பட்டோர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

ஆறுமுகசாமி ஆணையம்
தற்போது வரை விசாரணை நிறைவடைந்து அறிக்கை தாக்கல் செய்யப்படாமல் இருக்கும் நிலையில் பலமுறை ஆணையத்தின் விசாரணை காலம் நீட்டிக்கப்பட்டது. தற்போதைய சூழ்நிலையில் விசாரணை ஆணையத்தின் விசாரணை காலம் முடிவடைந்துள்ள நிலையில் மேலும் 3 வார காலத்திற்கு விசாரணையை நீட்டிக்க வேண்டுமென ஆறுமுகசாமி ஆணையம் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

எய்ம்ஸ் மருத்துவ குழு
இதனிடையே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து மருத்துவக் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என எய்ம்ஸ் இயக்குனரகுத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது. இந்த குழுவினர் அப்பல்லோ மருத்துவமனை மற்றும் மருத்துவ நிபுணர்களிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில் இதன் இறுதி அறிக்கை ஆகஸ்ட் மாதம் தாக்கல் செய்யப்பட இருப்பதாக மருத்துவ குழு ஏற்கனவே தெரிவித்திருந்தது.

எந்த தவறும் இல்லை
இந்த நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அடுத்த சிகிச்சையில் எந்த தவறும் இல்லை என எய்ம்ஸ் மருத்துவ குழு ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் மூன்று பக்க விசாரணை அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. எய்ம்ஸ் மருத்துவ குழு மருத்துவர் சந்தீப் சேத் தலைமையிலான ஏழு பேர் கொண்ட எய்ம்ஸ் மருத்துவக் குழு இந்த அறிக்கை அளித்துள்ளதாகவும் அதில் ஜெயலலிதாவுக்கு உரிய சிகிச்சைகள் வழங்கப்பட்டன. அவருக்கு தைராய்டு, நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு அதிகரிப்பு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எந்த தவறும் இல்லை என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
-
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்!












Click it and Unblock the Notifications