Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதிரடியாக ரீசார்ஜ் பிளான்கள் ரேட்டை உயர்த்திய ஏர்டெல்.. எந்த பிளான் இனி எவ்வளவு? முழு விவரம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜியோ நிறுவனத்தை தொடர்ந்து ஏர்டெல் நிறுவனமும் கட்டண உயர்வை அறிவித்துள்ளது. எந்த பிளான் எவ்வளவு உயர்ந்துள்ளது என்பதை இங்கு விரிவாகப் பார்க்கலாம்.

லோக்சபா தேர்தல் முடிந்த கையோடு இந்திய டெலிகாம் நிறுவனங்கள், ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தும் என தகவல் வெளியாகி வந்தது. இந்த சூழலில் நேற்று ஜியோ நிறுவனம் கட்டணத்தை உயர்த்துவதாக அறிவித்தது. இந்நிலையில், இன்று ஏர்டெல் நிறுவனமும் கட்டண உயர்வு குறித்து அறிவித்துள்ளது.

Airtel recharge mobile

ஜியோ ரீசார்ஜ் கட்டணம் உயர்வு: சுமார் 47 கோடி மொபைல் சப்ஸ்கிரைபர்களுடன் இந்திய டெலிகாம் துறையில் முதலிடத்தில் உள்ள ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், அதன் ரீசார்ஜ் கட்டணத்தை 12 முதல் 27 சதவீதம் வரை உயர்த்தி உள்ளது. சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு ரீசார்ஜ் கட்டணத்தை ஜியோ உயர்த்தி உள்ளது.

அதன்படி தினசரி 1 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் அழைப்புகள் 28 நாட்கள் வேலிடிட்டி பேக் கொண்ட கட்டணம் ரூ.209-லிருந்து ரூ.249 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், தினசரி 2ஜிபி டேட்டா கொண்ட பேக் ரூ.349 (28 நாட்கள்) மற்றும் அதற்கும் மேலான தொகை கொண்ட பேக்குகளை ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அன்லிமிடெட் 5ஜி நெட்வொர்க் சேவை வழங்கப்படும் என ஜியோ தற்போது அறிவித்துள்ளது.

ஏர்டெல் ரீசார்ஜ் கட்டணம் உயர்வு: ஏர்டெல் நிறுவனம் 10 முதல் 21 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி ஏர்டெல் நிறுவனத்தின் பேசிக் ரீசார்ஜ் பேக் ஆன 2 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் அழைப்புகள் 28 நாட்கள் வேலிடிட்டி பேக் கட்டணம் ரூ.179-லிருந்து ரூ.199 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

எந்தெந்த பேக் எவ்வளவு உயர்வு?: அதே போல தினசரி 1 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் அழைப்புகள் 28 நாட்கள் வேலிடிட்டி பேக்குக்கான கட்டணம் ரூ.265-லிருந்து ரூ.299 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தினசரி 1.5 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் அழைப்புகள் 28 நாட்கள் வேலிடிட்டி பேக்குக்கான கட்டணம் ரூ.299-லிருந்து ரூ.359 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

தினசரி 2.5 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் அழைப்புகள் 28 நாட்கள் வேலிடிட்டி பேக்குக்கான கட்டணம் ரூ.359-லிருந்து ரூ.409 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தினசரி 3 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் அழைப்புகள் 28 நாட்கள் வேலிடிட்டி பேக்குக்கான கட்டணம் ரூ399-லிருந்து ரூபாய் 449 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

அதிரடி கட்டண உயர்வு: தினசரி 1.5 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் அழைப்புகள் 56 நாட்கள் வேலிடிட்டி பேக்குக்கான கட்டணம் ரூ.479-லிருந்து ரூ.579 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தினசரி 2 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் அழைப்புகள் 56 நாட்கள் வேலிடிட்டி பேக்குக்கான கட்டணம் ரூ.549-லிருந்து ரூ.649 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

தினசரி 1.5 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் அழைப்புகள் 3 மாதங்களுக்கு (84 நாட்கள்) வேலிடிட்டி பேக்குக்கான கட்டணம் ரூ.719-லிருந்து ரூ.839 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தினசரி 2 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் அழைப்புகள் 3 மாதங்களுக்கு (84 நாட்கள்) வேலிடிட்டி பேக்குக்கான கட்டணம் ரூ.839-லிருந்து ரூ.979 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

ஆண்டு பிளான்: அதேபோல, ஒரு ஆண்டு முழுவதும் 2 ஜிபி டேட்டா வழங்கும் ரூபாய் 2999 திட்டம், ரூபாய் 3,599 பிளானாக மாற்றப்பட்டுள்ளது. மேலும் டேட்டா ஆட்- ஆன் பேக்குகளும் விலை உயர்த்தப்பட்டுள்ளன. 1 ஜிபி வழங்கும் 19 ரூபாய் பேக் 22 ரூபாய்க்கும், 2 ஜிபி வழங்கும் 29 ரூபாய் பேக் 33 ரூபாய்க்கும், 4 ஜிபி வழங்கும் 65 ரூபாய் பிளான் 77 ரூபாய் ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

போஸ்ட்பெய்டு கட்டண உயர்வு: போஸ்ட்பெய்ட் பிளான் கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளன. அதன்படி, 399 ரூபாய் மாத கட்டணம் செலுத்தும் போஸ்ட்பெய்ட் பிளான் 449 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 499 ரூபாய் மாத கட்டணம் செலுத்தும் போஸ்ட்பெய்ட் பிளான் 549 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 599 ரூபாய் மாத கட்டணம் செலுத்தும் போஸ்ட்பெய்ட் பிளான் 699 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Airtel recharge mobile

999 மாத கட்டணம் செலுத்தும் போஸ்ட்பெய்ட் பிளான் 1199 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண மாற்றம் அனைத்தும் வரும் ஜூலை 3 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

ஜியோவை தொடர்ந்து: தொலைத்தொடர்பு சேவையில் இந்தியாவின் முன்னணி நிறுவனமாக இருக்கும் ரிலையன்ஸ் ஜியோ, 4ஜி சேவைக்குள் அடியெடுத்து வைத்தபோது அதிரடி சலுகைகளை வழங்கியது. ஜியோவால் தங்கள் கட்டணத்தையும் குறைக்கும் நிலைக்கு மற்ற ஆப்பரேட்டர்களும் தள்ளப்பட்டனர். ஆனால், தற்போது விலை அதிகரிப்பிலும் மற்ற நிறுவனங்களுக்கு முன்னோடியாக மாறியுள்ளது ஜியோ.

மொபைல் போன் சேவைகளுக்கான 10-வது அலைக்கற்றை ஏலம் அண்மையில் நிறைவடைந்த நிலையில் ரீசார்ஜ் கட்டணத்தை ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. வோடபோன் ஐடியா நிறுவனமும் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+