ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த எதிர்பாராத தோல்விக்கான உண்மையான காரணங்களை கண்டறிய, 19 களஆய்வுக் குழுக்களை அக்கட்சியின் தலைமை நியமித்தது.. அந்த குழுவினர் தமிழகம் முழுவதும் தீவிரப் பரிசீலனை நடத்தினார்கள்.. வேட்பாளர் தேர்வு, உட்கட்சிப் பூசல்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் ஒத்துழைப்பின்மை குறித்து அடிமட்டத் தொண்டர்கள் எழுப்பிய புகார்கள் அனைத்தும் தொகுதி வாரியான விரிவான ரிப்போர்ட் தயார் செய்யப்பட்டன. அந்த ரிப்போர்ட்டை கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்துள்ளனர்.. இதுதான் தற்போது பலரது கவனத்தையும் பெற்றுள்ளது...!!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக பெரும்பான்மை இடங்களை இழந்து ஆட்சியைப் பறிகொடுத்திருப்பது, தமிழக அரசியல் களத்தில் ஒரு முக்கிய திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.

DMK alliance MK Stalin Alwarpet report DMK election strategy Tamil Nadu politics DMK cadres coalition politics DMK organizational changes

திமுக ஷாக் தோல்வி

எந்தவொரு அரசியல் பேரியக்கமும் தங்களின் தோல்விக்கான காரணங்களை வெறும் மேலோட்டமான கணக்கீடுகளாகப் பார்க்காமல், ஆழமான சுயபரிசோதனைக்கு உட்படுத்துவதே அதன் முதிர்ச்சியைக் காட்டும். அந்த வகையில், திமுக தலைவர் ஸ்டாலின் கடந்த மாதம் 14ம் தேதி அமைத்த 36 நிர்வாகிகளைக் கொண்ட 19 களஆய்வுக் குழுக்கள், கட்சியின் அடிமட்ட எதார்த்தத்தை தலைமைக்கு கொண்டு சேர்க்கும் ஒரு முக்கிய முயற்சியாக மாறியுள்ளன.

நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், இளைஞரணிப் பொறுப்பாளர்கள் எனப் பரவலான பிரதிநிதித்துவத்துடன் அமைக்கப்பட்ட இந்த குழுக்கள், தமிழகத்தின் ஒட்டுமொத்த தொகுதிகளுக்கும் நேரடியாகவே சென்று ஏகப்பட்ட தரவுகளை சேகரித்தார்கள்.. அந்த தரவுகள்தான், அந்த கட்சியின் எதிர்கால உத்திகளை தீர்மானிக்கும் ஆவணமாக இப்போது மாறியிருக்கின்றன.


ஸ்டாலின் கையில் ரிப்போர்ட்

இந்த குழுவினர், தங்களது ரிப்போர்ட்களை ஸ்டாலினிடம் சமர்ப்பித்துள்ளார்கள்.. அதில், தொகுதி வாரியான அறிக்கைகள், கட்சியின் உட்கட்டமைப்பில் உள்ள பலவீனங்கள், தேர்தல் உத்திகளில் ஏற்பட்ட தவறுகள் போன்றவை அனைத்துமே புட்டு புட்டு மிக துல்லியமாக வெளிப்படுத்தியிருக்கிறதாம்..

முக்கியமாக, வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்த பல தொகுதிகளில், மக்களிடமும் தொண்டர்களிடமும் செல்வாக்கு பெற்றிருந்த எம்எல்ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்காமல், புதுமுகங்களை களம் இறக்கியதுதான், மிக முதன்மையான தவறாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

திமுக தோல்விக்கு இதுதான் காரணம்

அதேபோல, நிறைய தொகுதிகளில் தகுந்த காரணங்களின்றி வேட்பாளர்களை மாற்றியது, கட்சியின் உட்கட்சிப் பூசல்களை தேர்தல் அறிவிப்புக்கு முன்பே தீர்க்காமல் விட்டுவிட்டது, தேர்தல் களத்தில் வாக்குச் சாவடி ஏஜெண்ட்கள், உள்ளூர் நிர்வாகிகளின் செயல்பாட்டைப் பெருமளவில் முடக்கியது போன்றவை அனைத்துமே திமுகவுக்கு மைனஸாகிவிட்டது என்பதையும் அந்த அறிக்கை உறுதிப்படுத்தியிருக்கிறதாம்.

அதைவிட முக்கியமாக, கூட்டணி கட்சிகள் குறித்த கீழ்மட்ட தொண்டர்களின் அதிருப்தியும் அந்த ரிப்போர்ட்டில் எதிரொலிக்கிறதாம்.. பல தொகுதிகளில் கூட்டணி கட்சிகளின் போதிய ஒத்துழைப்பு இல்லாமல் இருந்ததும், தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட குளறுபடிகளும் திமுகவின் தோல்விக்கு வழிவகுத்துள்ளதாக நிர்வாகிகள் தலைமைக்குத் தெரிவித்துள்ளார்கள்.

அத்துடன், இனிமேல் வரும் தேர்தல்களில் திமுக தனித்துப் போட்டியிட வேண்டும் என்ற வலுவான கோரிக்கை தொண்டர்கள் தரப்பில் இருந்து எழுந்துள்ளது.

இனிமேல் தனித்து போட்டி

கூட்டணி தர்மம் என்பது தேர்தல் வெற்றிக்கான தற்காலிகக் கருவியாக இருக்கலாமே தவிர, அது கட்சியின் சொந்த வாக்கு வங்கியையும் தொண்டர்களின் எழுச்சியையும் பலவீனப்படுத்தக் கூடாது என்பதே, குழுவினர் தந்துள்ள ரிப்போர்ட்டின் சாராம்சமாகும்.. ஒரு தொகுதி கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கப்படும் முன்பு, அங்கு அவர்களின் உண்மையான பலம் என்ன என்பதை அடிமட்ட அளவில் ஆராய்ந்தே முடிவு செய்ய வேண்டும் என்ற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

நிர்வாக ரீதியாக கட்சியை பலப்படுத்த, இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்ற புதிய உத்தியைக் குழுவினர் பரிந்துரைத்துள்ளார்களாம்.. இது கட்சியின் மீதான தலைமையின் கட்டுப்பாட்டை இறுக்கவும், உள்ளூர் முரண்பாடுகளை உடனுக்குடன் களையவும் உதவும் முக்கிய நகர்வாக கருதப்படுகிறது.

ஆழ்வார்பேட்டை இல்லத்தில் இந்த அறிக்கைகளைப் பெற்றுக்கொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா, மூத்த அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களுடன் உடனடியாக ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.. இனி திமுக தலைமை எடுக்கப்போகும் அடுத்தகட்ட அதிரடி முடிவுகளே, அக்கட்சியின் அடுத்த அரசியல் பயணத்தைத் தீர்மானிக்கும்.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+