பெட்ரோல் குண்டு வீச்சால் பதற்றம்.. நாளை சென்னை வரும் ஜனாதிபதி ராஜ்பவனில் தங்குவாரா? அடுத்து என்ன?
சென்னை: தமிழகத்துக்கு 2 நாள் பயணமாக நாளை ஜனாதிபதி திரெளபதி முர்மு வருகை தர உள்ளார். இவர் நாளை சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் தங்க இருக்கும் நிலையில் இன்று பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்டுள்ளது. இதனால் ஜனாதிபதி திரெளபதி முர்மு திட்டமிட்டப்படி நாளை ஆளுநர் மாளிகையில் தங்குவாரா? இல்லாவிட்டால் பாதுகாப்பு காரணங்களால் இடத்தை மாற்றம் செய்வாரா? என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது.
சென்னை கிண்டியில் தமிழக ஆளுநர் மாளிகை உள்ளது. இந்நிலையில் தான் இன்று மாலையில் திடீரென்று ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வெடித்து சிதறியது. மர்மநபர் ஒருவர் ஆளுநர் மாளிகை அருகே பெட்ரோல் குண்டு வீசிவிட்டு சென்றார்.

இதையடுத்து அங்கு கண்காணிப்பில் இருந்த போலீசார விரட்டி சென்று அந்த நபரை மடக்கி பிடித்து கைது செய்தனர். 3 பெட்ரோல் குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் அவர் தேனாம்பேட்டையை சேர்ந்த ரவுடி கருக்கா வினோத் என்பது தெரியவந்தது. இவர் ஏற்கனவே டாஸ்மாக் கடை, தேனாம்பேட்டை போலீஸ் நிலையம் முன்பு பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்தது.
அதோடு கடந்த ஆண்டு சென்னை தி.நகர் பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசியதும் தெரியவந்தது. இந்த வழக்கில் கைதான அவர் ஓராண்டுக்கு பிறகு 2 நாட்களுக்கு முன்பு சிறையில் இருந்து வெளியே வந்த நிலையில் ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் வெடிகுண்டு வீசியது தெரியவந்தது. தற்போது அவரிடம் கிண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடைய தற்போது இன்னொரு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ஜனாதிபதி திரெளபதி முர்மு 2 நாள் பயணமாக நாளை தமிழகம் வருகை தர உள்ளார். நாளை பெங்களூரில் இருந்து சென்னைக்கு வரும் ஜனாதிபதி திரெளபதி முர்மு ஆளுநர் மாளிகையில் தான் ஓய்வெடுக்க உள்ளார். அதன்பிறகு அவர் நாளை மறுநாள் காலையில் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் இயங்கி வரும் கடல்சார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க திட்டமிட்டுள்ளார்.
இத்தகைய சூழலின் தான் சென்னை ஆளுநர் மாளிகை முன்பு இன்று மாலையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. இதனால் திட்டமிட்டப்படி ஜனாதிபதி திரெளபதி முர்மு நாளை ஆளுநர் மாளிகையில் தங்குவாரா? இல்லாவிட்டால் இன்று பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்டதால் பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் தங்கும் இடம் மாற்றம் செய்யப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த விஷயத்தில் ஜனாதிபதி திரெளபதி முர்மு மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரிகள் தான் இறுதி முடிவு எடுக்க உள்ளனர். இதற்கிடையே தான் சென்னை ஆளுநர் மாளிகை முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தடயவியல் நிபுணர்கள் ஆய்வை தொடங்கி உள்ளனர். மேலும் தமிழக டிஜிபி உள்பட உயரதிகாரிகள் தற்போது சம்பவ இடத்துக்கு செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் சென்னை ஆளுநர் மாளிகை பரபரப்பாகவும், பதற்றமாகவும் காணப்படுகிறது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications