அமித்ஷா நாளை வருகை!தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தூக்கியடிக்கப்பட்டு புதிய தலைவர் இன்று இரவு அறிவிப்பு?
சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை தமிழ்நாடு வருகை தருகிறார். தமிழ்நாட்டில் பாஜகவின் மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார் அமித்ஷா. முன்னதாக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று இரவுக்குள் மாற்றப்பட்டு புதிய தலைவர் அறிவிக்கப்படக் கூடும் என்கின்றன பாஜக வட்டாரங்கள்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை மாற்ற வேண்டும் என்பது அதிமுகவின் கூட்டணிக்கான நிபந்தனையாக கூறப்படுகிறது. டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இதனை வலியுறுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகின.

இதனையடுத்து டெல்லி சென்று திரும்பிய அண்ணாமலை, தாம் தமிழக பாஜக தலைவர் பதவியில் நீடிக்கப் போவது இல்லை என தெளிவுபடுத்தினார். மேலும் புதிய பாஜக தலைவருக்கான போட்டியிலும் தாம் இல்லவே இல்லை எனவும் திட்டவட்டமாக தெரிவித்தார் அண்ணாமலை.
இதனால் தமிழ்நாடு பாஜகவின் புதிய தலைவராக நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் மற்றும் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோரில் ஒருவர் அறிவிக்கப்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகின. தமிழக பாஜகவின் புதிய தலைவர் குறித்த அறிவிப்பு ஏப்ரல் 9-ந் தேதி வெளியாகும் எனவும் கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை தமிழ்நாடு வருகை தருகிறார். தமிழ்நாட்டில் பாஜகவின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை நடத்த இருக்கிறார்.
அமித்ஷாவின் தமிழகம் வருகைக்கு முன்னதாக இன்று இரவே தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை நீக்கப்பட்டு புதிய தலைவர் யார் என்ற அறிவிப்பு வெளியாகக் கூடும் என்கின்றன பாஜக வட்டாரங்கள்.
-
ரஜினி படத்தை எந்த அமைப்பும் பயன்படுத்தக் கூடாது.. ரசிகர் மன்றம் அதிரடி.. அண்ணாமலைக்கு வைத்த செக்? -
பூட்டி கிடக்கும் பனையூர் கட்சி ஆபீஸ்! தவெகவில் இணைய காத்துக் கிடக்கும் விஜயதாரணி டூ பாலகங்கா வரை! -
கமலாலயம் டூ பனையூர்.. பாஜகவுக்கு அடுத்த அடி! தவெகவில் ஐக்கியமான முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி -
வேலைக்காகாத பாஜக மாடல்.. “கழக” பாணியைக் கையிலெடுக்கும் அண்ணாமலை! வேற லெவலாகும் வீ தி லீடர்! -
”ஆபரேசன் கமலாலயம்” அண்ணாமலையால் ஆட்டம் காணும் பாஜக! பேராசிரியருக்கு பெரிய லக்! அமித் ஷாவின் ப்ளான்? -
ஓரம்கட்டப்படும் நயினார்.. தமிழக பாஜக தலைவர் ரேஸில் முந்தும் ராம சீனிவாசன்? அடுத்தது என்ன? -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
சலசலப்புகளுக்கு இனி இடமில்லை.. அமித்ஷாவை சந்தித்த தமிழக பாஜக உயர்மட்டக்குழு.. அடுத்தது என்ன? -
பாஜகவை விட்டு விலகுகிறேன்.. 39 ஆண்டு பயணத்திற்கு முற்றுப்புள்ளி.. காரணம் இதுதான்! நடிகர் பாண்டி ரவி ஆதங்கம் -
“வெறும் காகிதத்தில் மட்டுமே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா?”.. முதல்வர் விஜய்க்கு பாஜக கேள்வி! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications