சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

புரவி பாய்ச்சலில் அமமுக.. விரட்டும் அதிமுக.. நடுவில் பாயும் திமுக.. அனல் பறக்கும் பெரியகுளம்

பெரியகுளம் இடைத்தேர்தலில் அதிமுக, அமமுக இடையே பலத்த போட்டி எழுந்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Periya Kulam Consituency: பெரியகுளம் களநிலவரம்..யாருக்கு வாய்ப்பு கிடைக்கும்?- வீடியோ

    சென்னை: தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே அரசியல் களம் சூடாகியது பெரியகுளம் தொகுதியில்தான். இதற்கு காரணம் அதிமுக ஓபிஎஸ் மற்றும் அமமுக தினகரனும்தான்!

    பெரியகுளம் பகுதியில் பல்லாயிரம் ஏக்கர் கணக்கில் மா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அதனால் பெரியகுளத்தை மாம்பழம் நகரம் என்றும் கூட சொல்வார்கள். இருந்தாலும் விவசாயம்தான் பிரதானம்!

    பொதுத்தொகுதியாக இருந்த பெரியகுளம் சட்டப்பேரவை தொகுதியானது, கடந்த 2008-ல் தொகுதி மறுசீரமைப்பின்படி தனி தொகுதியாக அறிவிக்கப்பட்டது.

    புலிப் பாய்ச்சலில் வசந்தகுமார்... கன்னியாகுமரி இவர் புலிப் பாய்ச்சலில் வசந்தகுமார்... கன்னியாகுமரி இவர் "கை"வசமாக் கூடுமாம்.. பரபரக்கும் தேர்தல் களம்

    அமமுக

    அமமுக

    கடந்த தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் டாக்டர் கதிர்காமு. தகுதி நீக்கம் மூலம் பதவியிழந்து தற்போது நடைபெறும் இடைத்தேர்தலில் அமமுக சார்பில் திரும்பவும் போட்டியிடுகிறார் கதிர்காமு.

    சாதகங்கள்

    சாதகங்கள்

    டிடிவி தினகரன் பெரியகுளம் எம்பியாக இருந்தபோது செய்த பணிகளை மக்கள் மறக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் தேர்தல் பணியாற்றி வருகிறார் டாக்டர் கதிர்காமு. இப்போதைக்கு ஒரே சீரான நிலையில் இருந்து வரும் நிலையில், இவர் வாங்கும் ஓட்டு யாருக்கு சாதக பாதகமாய் அமையயும் என்பதுதான் இடியாப்ப சிக்கலே!

    மயில்வேல்

    மயில்வேல்

    அதிமுக சார்பில் களமிறக்கப்பட்டுள்ளவர் மயில்வேல். தேனி அல்லி நகரத்தை சேர்ந்தவர். பந்தல் போடும் தொழில் செய்கிறார். புதுமுகமாக இருந்தாலும் இவருக்கு சீட் தர காரணம், இவர் ஆதிதிராவிடர் (பறையர்) சமூகத்தை சேர்ந்தவர். இந்த தொகுதியில் இந்த இன மக்கள் ஓரளவுக்கு இருக்கிறார்கள். அதாவது வெற்றி தோல்வியை நிர்ணயிக்க கூடிய அளவில் இந்த சமூக மக்கள் முக்கிய பங்கை வகிக்கிறார்கள். சாதீய ரீதியிலான ஓட்டுக்களை கவர களமிறக்கப்பட்டுள்ளார்.

    அதிருப்தி

    அதிருப்தி

    இதுவரை அதிமுக 7 முறை வென்றிருக்கிறது. மேலும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரும் பெரியகுளம் என்பது கூடுதல் பிளஸ்! ஆனால் அதிமுக-பாஜக மீதான அதிருப்தி இவருக்கு மைனஸ் என்றாலும் ஒரு சாதாரண அடிப்படை தொண்டனுக்கு சீட் கொடுப்பது அதிமுகவில் மட்டுமே நடக்கும் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளதாக பேசப்பட்டு வருகிறது.

    சரவணகுமார்

    சரவணகுமார்

    திமுக வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளவரோ சரவணகுமார். இங்கு திமுக 5 முறை வெற்றி பெற்றிருக்கிறது. அப்போது திமுக செய்த சாதனைகளை எல்லாம் இப்போது மக்களிடம் எடுத்து கூறி ஓட்டு வருகிறார். மேலும் அதிமுக இரண்டாக பிரிந்து கிடப்பது திமுகவிற்கு பலத்தை தந்துள்ளது.

    வெறுப்பு

    வெறுப்பு

    இதைத்தவிர மத்திய, மாநில ஆட்சியாளர்களின் மீது பொதுமக்கள் வைத்திருக்கும் வெறுப்பு இவையெல்லாம் திமுகவுக்கு சாதகமாகிறது. மேலும் இந்த தொகுதியில் சிபிஎம்-விசிக கட்சிகளுக்கு ஓரளவு ஆதரவு உள்ளதும் இவருக்கு பலம் தருகிறது.

    தினகரன்

    தினகரன்

    சொந்த ஊரில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று ஓபிஎஸ்-ஸும், சொந்த தொகுதியில் வைத்தே தோற்கடிக்க வேண்டும் என்று டிடிவி தினகரனும் கங்கணம் கட்டி கொண்டு செயல்பட்டு வருகிறார்கள். அதனால் யாருக்கு வெற்றி வாய்ப்பு என்பது அமமுக வாங்கும் ஓட்டுக்களை வைத்துதான் கணிக்கப்படும் என்பதே பெரியகுளம் தொகுதியின் கள நிலவரம் ஆகும்!

    English summary
    O Panneerselvam's native Place is Periya Kulam. That is why there is a strong competition between the ADMK, DMK and AMMK.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X