சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திருவாரூர் தொகுதிக்கு ரூ.20 கோடி?... டிடிவி தினகரன் டார்க்கெட்.. அதிர்ச்சியில் அஇஅதிமுக, திமுக

Google Oneindia Tamil News

Recommended Video

    தினகரன், திருவாரூர் தொகுதி இடைத் தேர்தலுக்காக வைத்துள்ள வியூகங்கள்

    சென்னை:20 ரூபாய் புகழ் டிடிவி தினகரன், திருவாரூர் தொகுதி இடைத் தேர்தலுக்காக வைத்துள்ள வியூகங்கள் அஇஅதிமுக, திமுகவை மிரள வைத்துள்ளதாக தெரிகிறது. தொகுதிக்கு 20 கோடி ரூபாய் வரை களத்தில் இறக்க அவர் திட்டமிட்டுள்ளது அதிமுக மட்டுமல்லாது.. எதிர்க்கட்சிகளின் வயிற்றிலும் புளியை கரைத்துள்ளது.

    இதோ... அதோ என்று எதிர்பார்க்கப்பட்ட 20 தொகுதிகளுக்கான தேர்தலில் அதிரி புதிரியாக திருவாரூர் தேர்தல் அறிவிக்கப்பட.. அஇஅதிமுகவும், திமுகவும் கொஞ்சம் ஜர்க்காயின. ஆனாலும் எதை பற்றியும் கவலைப்படாமல் வேட்பாளர் அறிவிப்பு, உற்சாகமாக தேர்தல் பணி டிடிவி தினகரன் ரவுண்டு கட்ட.. மற்ற கட்சிகளுக்கு தலைசுற்றாத குறை.

    வேட்பாளர் தேர்வில் குழப்ப நிலையில் அஇஅதிமுக இருக்க, திமுக தமது வேட்பாளரை அறிவித்தும் உட்கட்சி பூசல் முன்னாடி வந்து நிற்க.. டிடிவி தினகரனோ.. வேட்பாளரை அறிவித்துவிட்டு தேர்தல் செலவுக்காக டார்க்கெட்டையும் நிர்ணயித்துள்ள தான் ஹைலைட் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

    சர்வ ஜாக்கிரதை தினகரன்

    சர்வ ஜாக்கிரதை தினகரன்

    தஞ்சையில் கிட்டதட்ட 3 நாட்களாக களமிறங்கி இந்த பட்ஜெட்டை அவர் முடிவு செய்துள்ளாராம். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதோடு.. தம் மீது கண் கொத்தி பாம்பாக அனைத்து தரப்பினரும் உள்ளதால் சர்வ ஜாக்கிரதையாக இடைத்தேர்தல் வேளைகளை அவர் கவனித்து வருகிறார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

    பலம் வாய்ந்த தொகுதி

    பலம் வாய்ந்த தொகுதி

    சாதிய ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பலம் வாய்ந்த பகுதியான டெல்டா மாவட்ட புள்ளிகளிடமும் தொடர்ந்து இணைப்பில் இருக்கும் டிடிவி தினகரன்.. இம்முறை ஆர்கே நகரையே தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு வாக்காளர்களுக்கு அள்ளி கொடுக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    மீண்டும் வேறொரு பார்முலா

    மீண்டும் வேறொரு பார்முலா

    அதற்காக தேர்தல் செலவு என 20 கோடி ரூபாய் என்ற பார்முலாவை டிக் செய்து, அதை பெறுவது என்பதற்கான வழிமுறைகளையும் நிர்வாகிகளிடம் பகிர்ந்து கொண்டுள்ளார். ஒன்றியம், நகரம், மாவட்டம் என அனைத்துமட்ட நிர்வாகிகளின் கைகளில் இம்முறை நிச்சயம் பணம் புழங்க வேண்டும் என்பது டிடிவி தினகரனின் ஆன் தி ஸ்பாட் அஜெண்டா என்கின்றனர் அமமுகவினர்.

    நிறைவடைந்த சந்திப்பு

    நிறைவடைந்த சந்திப்பு

    அதனை மெய்ப்பிக்கும் வகையில் சமுதாய ரீதியான தலைவர்களையும், முக்கியஸ்தர்களையும் ஒரு ரவுண்ட் சந்தித்து ஆதரவு திரட்டியுள்ள டிடிவி... கூடவே பொருளாதார வழிகளையும் ஏற்படுத்திக் கொண்டு விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    ரெடியான பட்ஜெட்

    ரெடியான பட்ஜெட்

    சமுதாய ஆதரவு, ஆர்ப்பாட்டமில்லாத சந்திப்பு ஒர்க் அவுட்டாகி விட்டதாகவும், வேண்டியவை கிடைக்க ஆரம்பித்துள்ளதாகவும் கிசுகிசுக்கின்றனர் அமமுகவினர். இடைத்தேர்தல் பட்ஜெட் 20 கோடி ரூபாய் என்பதை சசிகலாவிடம் தெரிவித்து க்ரீன் சிக்னலை பெற்றுவிட்டதாகவும் அவர்கள் கூறுகின்றனர். அந்த நிதியை பெறுவதில் யாருக்கு என்ன டார்கெட், வரவு எப்படி? எங்கிருந்து பெறுவது உள்ளிட்ட சமாச்சாரங்களையும் அவர் முடிவு செய்துவிட்டாராம்.

    டேமேஜை மாற்றலாம்

    டேமேஜை மாற்றலாம்

    கிட்டதட்ட செந்தில்பாலாஜி, கருணாஸ் போன்றவர்களால் டேமேஜ் ஆன அமமுக மற்றும் தமது திட்டத்தை இந்த முறை.. திருவாரூர் என்ற பொன்னான வாய்ப்பின் வழியாக அறுவடை செய்து அரசியல் களத்தை வலுப்பெற்றுக் கொள்ள டிடிவி தினகரன் தயாராக உள்ளதை தான் அவரின் இந்த தேர்தல் கால நடவடிக்கைகள் நமக்கு காட்டுவதாக கூறுகின்றனர் அரசியலை உற்றுநோக்குபவர்கள்.

    விமர்சன வெற்றி

    விமர்சன வெற்றி

    ஆனால்.. இடைத்தேர்தல் வேண்டாம் என்று ஒரே குரலில் எதிர்க்கட்சிகள் வலம் வந்தாலும், வழக்கு, அனைத்துக்கட்சி கூட்டம் என்று எது வந்தாலும் 20 ரூபாய் என்ற விமர்சன வெற்றியை.. 20 கோடி ரூபாய் என்ற மற்றொரு டார்க்கெட்டின் மூலமாக சமன் செய்து..தமது கட்சியின் செல்வாக்கையும், ஆதரவையும் வெளிப்படுத்தி விடலாம் என்று கணக்கிடுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

    திருவாரூர் தேர்தல்

    திருவாரூர் தேர்தல்

    எது.. எப்படியோ... இந்த நிமிடம் வரை திருவாரூர் தேர்தல்... நடக்குமா... நடக்காதா என்ற திக்.. திக்... பரபரப்புடன் இருப்பதோடு... திருப்பத்தை ஏற்படுத்தும் தேர்தலாக அமையும் என்பது அரசியல் திறனாய்வாளர்களின் கருத்து. அது எந்தளவுக்கு மெய்யாகும் என்பதை கூற காத்திருக்கிறது அடுத்து வரவிருக்கும் நாட்கள்.

    English summary
    Ttv Dhinakaran planned to harvest victory in Thiruvarur constituency at any cost. He repeatedly met all their party leaders and cadres.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X