40 ஆண்டுகளில் இல்லாத இபிஎப் வட்டி குறைப்பு.. ஊழியர்களைப் பாதிக்கும்.. டிடிவி தினகரன் கண்டனம்..!
சென்னை : தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான (EPF) வட்டி வீதம் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது எனவும், கோடிக்கணக்கான ஊழியர்களைப் பாதிக்கும் இந்த முடிவினை இதற்கான வாரியம் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பிஎப் என அழைக்கப்படும் தொழிலாளா் வருங்கால வைப்பு நிதிக்கு 2021-222 ஆம் நிதியாண்டுக்கு வழங்கப்படும் வட்டியை 8.1 சதவீதம் குறைத்து வழங்குவதற்கு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு முடிவு செய்துள்ளது.
அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்ற இபிஎப்ஓவின் மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் தலைமையில் நடைபெற்ற மத்திய அறங்காவலர் குழு கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டது.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி
கடந்த 2 ஆண்டுகளாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மீதான வட்டி 8.50 சதவீதமாக நீடித்த நிலையில், தற்போது 8.1 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. மத்திய தொழிலாளர் அமைச்சகத்தின் வட்டிக் குறைப்பு முடிவுக்கு மத்திய நிதியமைச்சகம் ஒப்புதல் அளித்ததும், இந்த வட்டி விகிதம் நடைமுறைக்கு வரும்.

வட்டி குறைப்பு
இது கடந்த 40 ஆண்டுகளுக்கு முந்தைய வட்டி விகித அளவுக்குக் குறைவாகும். 1977-78ஆம் ஆண்டில் வருங்கால வைப்பு நிதிக்கு 8 சதவீத வட்டி வழங்கப்பட்டது. அதே நிலைக்கு தற்போது வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.

கடும் கண்டனம்
மத்திய அரசின் இந்த முடிவு தொழிலாளர்கள் வெகுவாக பாதிக்கும் என புகார் எழுந்துள்ள நிலையில் கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது. தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட பல மாநிலங்களின் முதலமைச்சர்கள், அரசியல் கட்சிகள், தொழிலாளர் அமைப்புகள் இதற்கு எதிராக தங்களது கடும் எதிர்ப்பினை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் வட்டி குறைப்பு அறிவிப்புக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

டிடிவி தினகரன் வலியுறுத்தல்
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், " தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான (EPF) வட்டி வீதம் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது. கோடிக்கணக்கான ஊழியர்களைப் பாதிக்கும் இந்த முடிவினை இதற்கான வாரியம் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்" என கூறியுள்ளார்.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா?












Click it and Unblock the Notifications