சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

'குக்கருக்கு ஓட்டு போடு'... அதகளப்படுத்தும் டிடிவி தினகரன்... அமமுகவின் அட்டகாசமான பிரசார பாடல்

Google Oneindia Tamil News

சென்னை: திமுக மற்றும் அதிமுக கட்சிகளுக்குப் போட்டியாகக் களமிறங்கியுள்ள டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் புதிய பிரசார பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அடுத்த வாரம் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் அதிமுக, திமுக கட்சிகளைத் தவிர அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் ஆகிய கட்சிகளும் களமிறங்குகின்றன.

AMMK propaganda song become viral on the internet

இப்படிப் பல முனை போட்டி ஏற்பட்டுள்ளதால், தேர்தல் களம் கோடை வெயிலுக்குப் போட்டியாகச் சூடாகியுள்ளது. தேர்தலில் மக்களைக் கவர ஒவ்வொரு கட்சியும் பல்வேறு யுக்திகளைக் கடைப்பிடித்து வருகின்றன. அதிமுக வெளியிட்ட 'வெற்றி நடை போடும் தமிழகமே' பாடலும் திமுகவின் 'ஸ்டாலின் தான் வராரு' பாடலும் சினிமா பாடல்களுக்கு இணையாக இணையத்தில் ஹிட் அடித்துள்ளது.

இந்நிலையில் இரண்டு திராவிட கட்சிகளுக்கும் எந்த விதத்திலும் குறைந்தவன் இல்லை என்று அமமுகவும் இப்போது பிரசார பாடலை வெளியிட்டுள்ளது. 'குக்கருக்கு ஓட்டுப் போடு, இனி மகிழ்ச்சியான தமிழ்நாடு' என்று தொடங்கும் அமமுக பாடல் இப்போது இணையத்தில் டிரெண்டிங்கில் உள்ளது.

AMMK propaganda song become viral on the internet

மற்ற கட்சி பாடல்களைப் போல இல்லாமல், சினிமா பாணியில் புரபஷனல் டான்சர்களை களமிறக்கி அதகளப்படுத்து அமமுக. சட்டசபை தேர்தலில் திமுக மற்றும் அதிமுக என இரண்டு திராவிட கட்சிகளுக்கும் மாற்று என்று கூறி தேர்தலை எதிர்கொள்ளும் அமமுக, பிரசார பாடலிலும் சளைத்தவர்கள் இல்லை என்பதைக் கூறும் வகையில் இந்த பாடலை வெளியிட்டுள்ளது. இந்தப் பாடல் தற்போது இணையத்திலும் வைரலாகியுள்ளது.

டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தேமுதிக, எஸ்டிபிஐ, மஜ்லிஸ் கட்சிகளுடன் இணைந்து சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறது. அமமுக இதில் 161 இடங்களில் குக்கர் சின்னத்தில் போட்டியிடுகிறது.

English summary
AMMK releases a new propaganda song, which becomes viral on the internet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X