சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆஹா.. "அசோக் நகர் பார்ட்டி" கடைசியில் ராயப்பேட்டைக்கே ஷிப்ட் ஆகுதே.. அதிர போகும் அதிமுக!!

அமமுகவுக்கு புது ஆபீஸ் ராயப்பேட்டையில் திறக்கப்பட உள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: அமமுக சார்பாக புது ஆபீஸ் திறக்க போகிறார்கள்.. இது விஷயம் இல்லை.. அவர்கள் எங்கே தங்களது ஆபீஸை திறக்க போகிறார்கள் என்பதுதான் பாயிண்ட்.. அங்கே ஏன் ஆபீஸ் பார்த்து குடிபோறாங்க? என்ன காரணமா இருக்கும்?

இதற்கு முன்பு அசோக் நகரில்தான் அமமுக அலுவலகம் செயல்பட்டு வந்தது.. ஆனால் அந்த கட்டிடம் இசக்கி சுப்பையாவின் சொந்த கட்டிடம்.. பசை உள்ள பார்ட்டி அவர்.

அமமுகவில் அவர் இருந்தபோது, கட்சி சம்பந்தப்பட்ட மொத்த விஷயத்தையும் முன்னின்று கவனித்து கொள்வார்.. பணத்தை தண்ணீராக செலவு செய்வார்.

அலுவலகம்

அலுவலகம்

ஆனால் தினகரன் மீதான அதிருப்தியில் கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்துவிட்டார்.. இதனால் அமமுகவுக்கு என்று தனியாக ஒரு ஆபீஸ் இல்லாமல் இருந்தது.. முன்பு மாதிரி என்றார் பரவாயில்லை, இப்போ கட்சியை ரிஜிஸ்தர் செய்துவிடவும், அலுவலகம் என்பது கட்டாயமாகிவிட்டது. அதன்படி, ராயப்பேட்டையில் புதிதாக ஒரு ஆபீஸ் திறக்கப்பட்ட உள்ளது.

பொதுச்செயலாளர்

பொதுச்செயலாளர்

இது சம்பந்தமான திறப்பு விழாவுக்கும் இன்விடேஷன் தயாராகிவிட்டது.. அனைவரும் திறப்பு விழாவிற்கு வருகை தருமாறு அமமுக சார்பில் ஒரு அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், "அமமுக புதிய அலுவலகம் சென்னை ராயப்பேட்டையில் வருகிற 12.3.2020 வியாழக்கிழமை காலை 9 மணி அளவில் இதன் திறப்பு விழா சிறப்பாக நடைபெற உள்ளது. கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கழக புதிய அலுவலகத்தை திறந்து வைக்க உள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக ஆபீஸ்

அதிமுக ஆபீஸ்

எல்லாம் சரி.. ராயப்பேட்டையில் ஆபீஸ் எங்கேன்னு தெரியுமா.. அப்படியே அதிமுக ஆபீஸ்-க்கு கொஞ்சம் பக்கத்திலேதான்.. சென்னையில இருக்கிற எல்லா ஏரியாவையும் விட்டுவிட்டு தினகரன் ஏன் ராயப்பேட்டையை தேர்ந்தெடுத்தார்? அப்படியே தேர்ந்தெடுத்தாலும் ஏன் அதிமுக ஆபீஸை ஒட்டின மாதிரியே ஏன் இருக்க வேண்டும்?

அதிரடி பிளான்கள்?

அதிரடி பிளான்கள்?

அதிமுகவின் அடி மடியிலேயே தினகரன் கை வைக்க போகிறாரா? அதிமுகவுக்கு சளைத்தது அமமுக இல்லை என சொல்ல போகிறாரா? அல்லது புத்தம் புது அதிரடி பிளான்களுடன் புது ஆபீஸுக்குள் நுழைய போகிறாரா? அல்லது தலைமை கழக ஆபீசுக்கு இவ்வளவு பக்கத்துல வந்துட்டோம், இன்னும் கொஞ்ச தூரம்தான், மொத்தமும் தங்கள் வசம் என சொல்ல வருகிறாரா? அல்லது பக்கத்துல வந்துட்டோம், சித்தி வந்ததும் நாம் எல்லாரும் கூடிய சீக்கிரம் ஒன்றாகிவிடுவோம் என்று சொல்ல வருகிறாரா? என தெரியவில்லை.

வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள்

ஆனால் இவ்வளவு பெரிய இந்த சென்னை மாநகரத்திலேயே, பரந்து விரிந்த ராயப்பேட்டை ஏரியாவிலே.. அதிமுகவுக்கு பக்கத்துலயே இடம்பார்த்து குடிபோவதை பார்த்தால், எங்கியோ உதைக்கிற மாதிரியே இருக்கு.. இதையேதான் அதிமுக தரப்பில் பலரும் யோசித்து வருகிறார்களாம்.. எப்படியோ புது அலுவலகத்தில் உற்சாகத்துடன் நுழைய உள்ள அமமுகவுக்கு நம்முடைய வாழ்த்துக்கள்!

English summary
ammks new head office royapettah chennai and The inauguration of this office will be held on the 12th
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X