Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையில் மாடு முட்டி படுகாயமடைந்த முதியவர் மரணம்.. தொடரும் சம்பவங்களால் பீதியில் மக்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் அருகே மாடு முட்டி தள்ளியதில் கீழே விழுந்து படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த முதியவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தெருக்களில் சுற்றி திரியும் மாடுகள் பொதுமக்களை தாக்கும் சம்பவங்கள் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் அருகே உள்ள மாதா கோயில் தெருவில் கடந்த 18ஆம் தேதி 6.30 மணியளவில் சுந்தரம் என்ற முதியவர் ஒருவர் நடந்து சென்றார். அப்போது அந்த பகுதியில் 3க்கும் மேற்பட்ட மாடுகள் நின்று கொண்டிருந்தன. அதில் ஒரு மாடு திடீரென முதியவரை முட்டி தூக்கி வீசியது.

An old man died after being hit by a cow in Tiruvallikeni, Chennai

இதில் கீழே விழுந்த முதில் பலத்த காயமடைந்தார். அதிர்ச்சியில் அந்த முதியவர் மயக்கமடைந்தார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் தகவலின் பேரில் காயமடைந்த சுந்தரம் ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அரசு ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கடந்த 10 நாட்களாக முதியவர் சுந்தரத்திற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று காலையில் அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னையில் மாடுகள் சாலையில் சுற்றி திரிவாதை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. கூடுதல் அபராதம் விதித்தும் உரிமையாளர்கள் அச்சமின்றி மாடுகளை சாலையில் விடுகின்றனர்.

கடந்த செப்டம்பர் மாதம் 14ஆம் தேதி இரவு இதே பகுதியில் சாலையில் சுற்றித்திரிந்த மாடு, ஆறு பேரை முட்டியது. இதுகுறித்து வழக்குப்பதிந்த ஐஸ் ஹவுஸ் காவல்நிலையத்தார், மாட்டின் உரிமையாளர் கிஷோர் மீது வழக்கு பதிந்தனர். அந்த மாட்டை பறிமுதல் செய்த மாநகராட்சி ஊழியர்கள், மாட்டின் உரிமையாளருக்கு அபராதம் விதித்தனர். இந்த சம்பவம் நடந்த 35 நாட்களில் மீண்டும் அதே பகுதியில் முதியவரை மாடு முட்டியுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாத சென்னை அரும்பாக்கத்தில் தன் அம்மா உடன் நடந்து சென்ற சிறுமியை மாடு ஒன்று முட்டி தாக்கியது. ஒருமுறை அல்லது இருமுறை அல்ல..பலமுறை முட்டி காயப்படுத்தி தள்ளியது. அதன் அருகில் யாரையும் மாடு நெருங்கக்கூட விடவில்லை. ஒரு கட்டத்தில் அக்கம் பக்கத்தினர் அனைவரும் ஒன்று சேர்ந்து மாட்டினை பிரம்பால் மாட்டை அடித்து துரத்திவிட்டார்கள். அதன்பிறகே சிறுமியை மீட்க முடிந்தது. அந்த சிறுமி படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

சமீபத்தில் ஆவடியை அடுத்த பட்டாபிரான் சோராஞ்சேரி பகுதியில் வீட்டு வாசாலில் நின்று குழந்தைக்கு உணவு ஊட்டிக்கொண்டிருந்த பெண்ணை பசுமாடு முட்டியது. இதனால், அதிர்ச்சியடைந்த அப்பெண் தன் குழந்தையை தூக்கிக்கொண்டு அருகில் உள்ள மற்றொரு வீட்டிற்குள் ஓடி தப்பினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது.

திருவல்லிக்கேணியில் கடந்த 10 நாட்களில் 3 பேரை மாடுகள் முட்டி காயப்படுத்தியுள்ள சம்பவம் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 19ஆம் தேதி குப்பைகளை கொட்டச்சென்ற செல்வி என்ற பெண்ணை மாடு முட்டி இழுத்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

திருவல்லிக்கேணி டி.பி.கோவில் தெருவைச் சேர்ந்தவர் கஸ்தூரி ரங்கன் புதன்கிழமை இரவு அந்த பகுதி வழியாக சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த மாடு ஒன்று திடீரென கஸ்தூரி ரங்கனை முட்டி தூக்கி வீசியது. இதில் அவரது தலையின் பின்பக்கம் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. அங்கிருந்தவர்கள் மாட்டை விரட்டிவிட்டு, கஸ்தூரி ரங்கனை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

கால்நடைகள் சாலைகளில் சுற்றித்திரிந்தால் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஏற்கனவே தெரிவித்துள்ளார். அதனை யாருமே சீரியஸ் ஆக எடுத்துக்கொள்வதில்லை பல மாடுகள் சாலைகளில் மேய்ந்து கொண்டிருக்கின்றன. திருவல்லிகேணியில் இருந்து மயிலாப்பூருக்கு மாடுகள் வந்து கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே காவல்துறையுடன் இணைந்து மாநகராட்சி மேற்கொண்ட ஆய்வில், பூக்கடை பகுதியில் 120 மாடுகள், பழைய வண்ணாரப் பேட்டையில் 3, புளியந்தோப்பில் 48, அண்ணாநகரில் 269, கொளத்தூரில் 12, கோயம்பேட்டில் 513, திருவல்லிக்கேணி, மயிலாப்பூர்பகுதியில் 367, கீழ்ப்பாக்கத்தில் 95, அடையாறில் 177, தியாகராயநகரில் 145 என மாநகரம் முழுவதும் 1,986 மாடுகள் சாலையில்சுற்றித் திரிவதாகக் கண்டறிந் திருக்கிறோம் என்று டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

மாடுகளைப் பிடிக்கச் சென்றால், மாநகராட்சி பணியாளர்களை மிரட்டுகின்றனர். இனிவரும் காலங்களில் மாடுகளால் பொதுமக்களின் உயிருக்கு பாதிப்பு ஏற்பட்டால், அந்த பிரிவின் கீழும், அரசு அலுவலரை பணி செய்ய விடாமல்தடுத்ததற்காகவும் காவல்நிலை யத்தில் வழக்குப்பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மாடுகளுக்கு அகத்திக் கீரை போன்றவற்றை கொடுக்கும் தன்னார்வலர்கள், உண்மையில் நல்ல காரியம் செய்வதாக இருந்தால், அந்த மாடுகளை தத்தெடுத்து பராமரிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+