Make in india:இந்திய காரில் பிரிட்டன் பிரதமர்.. ஜெர்மன் காரில் மோடி.. ஒப்பிட்டு விளாசிய ஸ்ரீனிவாசன்
சென்னை: சீனாவில் இருந்து இந்தியாவின் இறக்குமதி தொடர்ந்து அதிகரித்து வருகிறது எனவும், பிரிட்டன் பிரதமர் இந்திய காரில் செல்லும் நிலையில் ஜெர்மன் காரில் பிரதமர் மோடி செல்கிறார். இதுதான் மேக் இன் இந்தியா திட்டமா? என ஆதாரத்தோடு காங்கிரஸ் கட்சியின் பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீனிவாசன் விமர்சனம் செய்துள்ளார்.
மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக ஆட்சி அமைந்தவுடன் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டு அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்காக தற்சார்பு இந்தியா எனும் கனவை நினைவாக்கும் வகையில் ‛மேக் இன் இந்தியா' திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சிகள் விமர்சனம்
இந்த மேக் இன் திட்டம் என்பது விண்வெளி, பாதுகாப்பு உள்பட அனைத்து துறைகளுக்கும் தேவையான பொருட்களை இந்தியாவிலேயே தயாரிக்க வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டது. இத்திட்டம் என்பது மத்திய அரசின் பல துறைகளிலும் தற்போது நடைமுறையில் உள்ளது. இருப்பினும் இந்த திட்டத்தை எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.

வார்த்தை அளவில் மட்டும்
ஜிஎஸ்டி உள்ளிட்ட வரி விதிப்பு முறைகளால் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் முடங்கி உள்ளன. இந்த தொழில்கள் முடங்கிய நிலையில் எப்படி மேக் இன் இந்தியா திட்டம் சாத்தியமாகும். இந்த திட்டம் என்பது இந்தியாவில் வெறும் வார்த்தை அளவில் மட்டுமே உள்ளது. பிற நாடுகளில் இருந்து தொடர்ந்து அதிகளவில் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

எதிர்க்கட்சிகள் விமர்சனம்
இதற்கு மத்தியில் தான் சில நாட்களுக்கு முன்பு ஒரு தகவல் வெளியானது. அதாவது அண்டை நாடான சீனா உடனான வர்த்தகம் என்பது தொடர்ந்து மேம்பட்டு வரகிறது. இந்தியா-சீனா இடையேயான ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகரித்துள்ளது. குறிப்பாக தொலைத்தொடர்பு மற்றும் மின் துறைகள் சார்ந்த பொருட்கள் அதிகளவில் சீனாவில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

சீனாவிடம் இருந்து இறக்குமதி
மேலும் கடந்த 2014-15ல் சீனா இந்தியா இடையேயான வர்த்தக மதிப்பு சுமார் 72 பில்லியன் டாலராக இருந்த நிலையில் தற்போது இது 59 சதவீதம் வரை அதிரித்து 2021-22ல் 115.4 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. தற்போதைய சூழலில் சீனாவுடனான இந்தியாவின் வர்த்தகம் 125 பில்லியன் டாலரைத் தாண்டியுள்ளது. இதில் இறக்குமதி மட்டுமே 100 பில்லியன் டாலரை தொடும் வகையில் உள்ளது. இருப்பினும் முந்தைய ஆண்டுகளை காட்டிலும் சீனாவுக்கான இந்திய பொருட்களின் ஏற்றுமதி அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

மேக் இன் இந்தியாவா?
இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும், பொருளாதார நிபுணருமான ஆனந்த் ஸ்ரீனிவாசன் மத்திய பாஜக அரசின் மேக் இன் இந்தியா திட்டத்தை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுபற்றி அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛செய்தி - சீனாவிடம் இருந்து இந்தியாவின் இறக்குமதி 34,524 மில்லியன் டாலராக அதிகரிப்பு!!! இதுதான் மேக் இன் இந்தியாவா?'' என கேள்வி எழுப்பி உள்ளார்.

பிரதமர் மோடியை விமர்சனம்
மேலும் அதே ட்விட்டில் பிரதமர் நரேந்திர மோடி, பிரிட்டன் பிரதமர் பயன்படுத்தும் கார்களை குறிப்பிட்டு விமர்சனம் செய்துள்ளார். இதுபற்றி அவர், ‛‛இன்னும் புரியிற மாதிரி சொல்றேன்!!! பிரிட்டன் பிரைம் மினிஸ்டர் இந்தியன் பிராண்ட் கார்ல போராரு.. இந்தியன் பிரைம் மினிஸ்டர் ஜெர்மன் பிராண்ட் கார்ல போறாரு'' என ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

விமர்சனத்துக்கான காரணம் என்ன?
அதாவது மேக் இன் இந்தியா திட்டத்தை முன்னெடுத்துள்ள பிரதமர் மோடி mercedes maybach s-650 வகை காரை பயன்படுத்தி வருகிறார். இந்த கார் ஜெர்மன் பிராண்ட்டாகும். அதேபோல் பிரிட்டன் பிரதமர்கள் பொதுவாக ரேஞ்ச் ரோவர் வகை கார்களில் பயணம் செய்வார்கள். இது இந்தியாவின் டாடா மோட்டார் குழுமம் பிரிட்டனில் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை இந்திய பிரதமர் ஜெர்மன் பிராண்ட் காரிலும், பிரிட்டன் பிரதமர் இந்திய பிராண்ட் காரிலும் செல்கிறார்கள் என ஆனந்த் ஸ்ரீனிவாசன் விமர்சனம் செய்துள்ளார்.
-
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி!












Click it and Unblock the Notifications