‘விஞ்ஞான ரீதியிலான ஊழல்’.. அரசு வக்கீல் சொன்னதுமே எதிர்ப்பை காட்டிய அன்பில் மகேஷ் தரப்பு வழக்கறிஞர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஜாமீன் வழக்கு விசாரணையின்போது, அரசு தரப்பு வழக்கறிஞர், "விஞ்ஞான ரீதியிலான ஊழல் இது" என வாதிட்டார். விஞ்ஞான ரீதியிலான ஊழல் என அரசு தரப்பு வழக்கறிஞர் கூறியதற்கு அன்பில் மகேஷ் தரப்பு வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

தனியார் பள்ளிகளுக்கு அரசு அனுமதி, அங்கீகாரம் உள்ளிட்டவற்றை பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடி அளவில் பண மோசடி செய்ததாகக் கூறப்படும் வழக்கில், தனியார் பள்ளிகள் சங்கத்தின் தலைவராக இருந்த அரசகுமார் உள்ளிட்டோர் கைது செய்யட்டனர். இதையடுத்து முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

Anbil Mahesh Bail Hearing

ஏற்கெனவே அன்பில் மகேஷ் தாக்கல் செய்த ஜாமீன் மனு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், அன்பில் மகேஷை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என காவல்துறை தரப்பில் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை கடந்த 2 ஆம் தேதி நீதிபதி சத்தியமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அன்பில் மகேஸுக்கு 3 நாட்கள் போலீஸ் காவல் அளித்து நீதிபதி உத்தரவிட்டிருந்தார். அதன்படி, மூன்று நாள் போலீஸ் காவல் முடிவடைந்ததது.

இந்த நிலையில், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று மீண்டும் வந்தது. அப்போது அன்பில் மகேஷ் தரப்பில், 'காவல்துறை விசாரணைக்கு ஒத்துழைப்பு தருவதால் அன்பில் மகேஷுக்கு ஜாமீன் வழங்க வேண்டும். அவர் எங்கும் தப்பிச் செல்ல மாட்டார். விலைவாசி ஏறுவது போல் அவர் மீதான மோசடி பணத்தை உயர்த்தியுள்ளனர். ரூ.100 கோடி மோசடி என ஆரம்பித்து தற்போது ரூ.400 கோடி, ரூ.600 கோடி, ரூ.800 கோடி மோசடி என்கின்றனர்.

லஞ்ச ஒழிப்புத்துறை இருக்கும்போது குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் மத்திய குற்றப்பிரிவு வழக்குப் பதிவு செய்துள்ளது. புதிய நடைமுறைகளை காவல்துறையினர் அறிமுகம் செய்கின்றனர். செல்வாக்கான நபர் என காவல்துறையினர் கூறினாலும் அன்பில் எங்கும் தப்பிச் செல்ல மாட்டார். ஆதாரங்களை கலைக்கப் போவதில்லை.

அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கு லஞ்சம் தர வேண்டும் என அரசகுமார் பொய் கூறி வசூல் செய்துள்ளார். அவர் வசூலித்த பணத்துக்கு அன்பில் மகேஷ் பொறுப்பாக முடியாது. தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற முறைகேடாக பணம் பெற்ற இந்த வழக்கில் A1 அரசக்குமார் தான். புகார்களின்படி அரசக்குமார் தான் பணம் பெற்று மோசடி செய்ததாக உள்ளது. அன்பில் மகேஷ் கைகள் கறைபடியாதவை. அவர் மீது கூறப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளும் பொய்யான குற்றச்சாட்டுகள்" என வாதிடப்பட்டது.

அதைத்தொடர்ந்து, காவல்துறை தரப்பில், தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன் வாதங்களை முன்வைத்தார். அப்போது, முத்துக்குமாரும் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் மிகவும் நெருக்கமானவர்கள். அரசகுமார், முத்துக்குமாருடன் சேர்ந்து தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தை நடத்தி வந்தனர்.

அங்கீகாரம் கோரும் பள்ளிகளை தேர்ந்தெடுத்து அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக்கூறி பணம் வசூலித்துள்ளனர். ஆரம்பத்தில் முன்னாள் அமைச்சர் தொடர்பு குறித்து பள்ளி உரிமையாளர்களான புகார்தாரர்களுக்கு தெரியாது. அன்பில் மகேஷ் மீதான வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டதல்ல.

முத்துக்குமார் தலைமறைவாக இருந்து வந்தார். அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைதான 2 நாள்களில் முத்துக்குமார் சரணடைந்தார். அவருக்கு அடைக்கலம் கொடுத்தது அன்பில் மகேஷ் தான். தனியார் பள்ளிகளிடம் அன்பில் மகேஷுக்காக பணம் வசூலித்து கொடுத்தது முத்துக்குமார் தான்.

அன்பில் மகேஷ் வீட்டிற்கு சரவணன் என்பவர் பணத்தை எடுத்துச் சென்ற வீடியோ ஆதாரம் உள்ளது. விஞ்ஞான ரீதியிலான ஊழல் இது. அது பல ஆண்டுகளுக்கு முன்பே உள்ளது. அன்பில் மகேஷுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது" என வாதிட்டார். விஞ்ஞான ரீதியிலான ஊழல் என அரசு தரப்பு வழக்கறிஞர் கூறியதற்கு அன்பில் மகேஷ் தரப்பு வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இன்று சுமார் 3 மணி நேரம் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. இரு தரப்பு வாதங்களும் நிறைவுபெற்ற நிலையில், அன்பில் மகேஷ் ஜாமீன் கோரிய மனு மீதான தீர்ப்பை வரும் நவ. 10 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+