தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தப்படுமா? அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில்
சென்னை: சி.பி.எஸ்.சி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக இன்னும் ஓரிரு தினங்களில் அறிவிப்பு வெளியாகும், அதை பொருத்தே தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது தொடர்பாக முடிவெடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக, 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் ஆல் பாஸ் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில்தான் 12ம் வகுப்பு, மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பொதுத் தேர்வு
இது தொடர்பாக அன்பில் மகேஷ் பொய்யாமொழி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இதுபற்றி நிருபர்களிடம் அவர் கூறியதாவது: சி.பி.எஸ்.சி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக இன்னும் ஓரிரு தினங்களில் அறிவிப்பு வெளியாகும், அதை பொருத்தே தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது தொடர்பாக முடிவெடுக்கப்படும்.

கல்விக் கட்டணம்
கல்விக்கட்டணம் தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்வதற்கான அமைக்கப்பட்ட கமிட்டி, கல்விக்கட்டணம் தொடர்பாக மட்டுமில்லாமல், தனியார் பள்ளிகளில் வரும் புகார்கள் குறிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளக்கூடிய வகையில் வலுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஆன்லைன் வகுப்புகள்
ஆன்லைன் வகுப்புகள் தொடங்குவதற்கு முன்பாகவே பாடப்புத்தகம் விநியோகம் செய்வது தொடர்பாக ஓரிரு தினங்களில் ஆலோசித்து முடிவு செய்யப்படும்.

தனியாருக்கு ஈடாக
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை தனியார் பள்ளிகளுக்கு இணையாக கட்டமைப்புகளை மேம்படுத்தி விளம்பரப்படுத்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
ரூ.140 சரக்கு பாட்டிலில் அரசுக்கு மட்டும் இவ்வளவு லாபமா? தலை சுற்ற வைக்கும் டாஸ்மாக் வரி கணக்கு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்?












Click it and Unblock the Notifications