சென்னையில் இது போன்ற ஒரு மழையை நான் பார்த்ததேதில்லை! வீடியோ வெளியிட்டு அன்புமணி கவலை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் இது போன்ற ஒரு வானிலை சூழலை நான் இதற்கு முன்பு பார்த்ததே இல்லை என்றும் இது காலநிலை மாற்றத்தின் தாக்கம்தான் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஒரு வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

சென்னையில் நேற்று இரவு மிக கனமழை பெய்தது. அப்போது தொடர்ந்து இடியும் மின்னலுமாக இருந்தது. ஒரே இரவில் சென்னையில் 36 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

Anbumani Ramadoss

2023 ஆம் ஆண்டுக்கு பிறகு தற்போதுதான் அதிக மழை பெய்துள்ளது என வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். இந்த நிலையில் இந்த மழையை வீடியோவாக எடுத்த அன்புமணி ஒரு எச்சரிக்கையை விடுத்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: இது போன்ற ஒரு வானிலை நிகழ்வை நான் இதற்கு முன்பு பார்த்ததே இல்லை. நாம் நேற்று பார்த்த நிகழ்வு பருவமழை மாற்றம் உண்மை என்பதை உணர்த்துகிறது. அதன் தாக்கங்களை நாம் இனியும் உதாசீனப்படுத்த முடியாது என்பதற்காக கடும் எச்சரிக்கையாகும்.

பருவமழை மாற்றமும், எல் நினோ போன்ற கால நிலை நிகழ்வுகளும் வானிலை அமைப்பை பாதித்து வருகிறது. இதனால் நாம் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். அறிவியல் பூர்வமாக எச்சரிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

மேலும் தீவிர வானிலை நிகழ்வுகளை எதிர்கொள்ள நாம் தயார் நிலையில் இருக்க வேண்டும். நேற்று இரவு இந்த வீடியோவை நான் பதிவு செய்த போது இயற்கை நமக்கு ஏதோ ஒரு எச்சரிக்கையை விடுத்துக் கொண்டிருப்பதாக உணர்ந்தேன்.

நாம் அதை கவனமாகக் கேட்க வேண்டும். பொறுமையுடன் செயல்பட வேண்டும். நம் பூமியையும் மக்களையும் காப்பாற்ற வேண்டும். இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தொடங்கி ஆங்காங்கே பெய்து வருகிறது. கடந்த 2 தினங்களாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்கிறது. இந்த மழை குளிர்ச்சியை கொடுத்துள்ளது.

இந்த நிலையில் சென்னையில் காலை வேளைகளில் லேசான வெயில் இருந்தாலும் மாலை 5 மணிக்கெல்லாம் இருட்டிக் கொண்டு மழை பெய்யத் தொடங்குகிறது. நேற்றும் அதே போல்தான் காலையில் வெயில் இருந்தது. மாலையில் கருமேகங்கள் சூழத் தொடங்கி மழை கொட்டத் தொடங்கியது.

அதிலும் வடசென்னை என்பதை போல் அங்குதான் கொட்டித் தீர்த்தது. சென்னையில் கடந்த 24 மணிநேரத்தில் பாரிமுனையில் 36 செ.மீ., கத்திவாக்கத்தில் 34.4 செ.மீ., மீனம்பாக்கத்தில் 29 செ.மீ., சென்னை சென்ட்ரலில் 27 செ.மீ., சாத்தாங்காட்டில் 26 செ.மீ, திருவொற்றியூரில் 22 செ.மீ., எண்ணூரில் 21 செ.மீ., கார்கில் நகர் 19 செ.மீ., சைதாப்பேட்டை 17 செ.மீ., வடபழனி 16 செ.மீ., நுங்கம்பாக்கம் 15 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

மேகவெடிப்பின் காரணமாக சென்னையில் கனமழை கொட்டித் தீர்த்ததாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியிருந்தார். ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே வடசென்னையில் 100 மி.மீ அளவுக்கு மேகவெடிப்பு மழை பெய்துள்ளது என கூறியிருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+