சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பத்திரகாளி பிள்ளைகளும்.. திரௌபதி பிள்ளைகளும்! நாடார் மாநாட்டில் அன்புமணி! கிளம்பும் யூகங்கள்!

Google Oneindia Tamil News

சென்னை : சென்னையில் நாடார் சுயமரியாதை மாநாட்டில் கலந்து கொண்ட பாமக தலைவர் அன்புமணியின் பேச்சு, தென் மாவட்டங்களிலும், சமூக வலைதளங்களில் பல்வேறு யூகங்களை கிளப்பியிருக்கிறது.

பட்டிவீரன்பட்டி சௌந்திரபாண்டியனின் பிறந்த நாளை ஒட்டி சென்னையில் சுயமரியாதை மாநாடு நடைபெற்றது. இதில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ், அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஆடல், பாடல், வீர விளையாட்டு என களைகட்டிய இந்த விழாவில், சிறந்த நாடார் சங்கங்களுக்கு விருதுகளை வழங்கிய அன்புமணி ராமதாஸ் நாடார் சமுதாயத்தினரை வெகுவாகப் பாராட்டிப் பேசினார். குறிப்பாக உழைப்பால் உயர்ந்தவர்கள் என புகாழாரம் சூட்டினார்.

ஆன்லைன் சூதாட்ட தடை! மகிழ்ச்சி.. முதல் ஆளாய் வந்த பாமக ராமதாஸ்! அப்படியே முதல்வருக்கும் கோரிக்கை! ஆன்லைன் சூதாட்ட தடை! மகிழ்ச்சி.. முதல் ஆளாய் வந்த பாமக ராமதாஸ்! அப்படியே முதல்வருக்கும் கோரிக்கை!

அன்புமணி ராமதாஸ்

அன்புமணி ராமதாஸ்

நிகழ்ச்சியில் பேசிய அன்புமணி," சாதியால் ஏதேனும் ஒரு வகையில் அனைவரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அனைத்து சாதியும் முன்னேற வேண்டும் என்பதே நோக்கம். ஒவ்வொரு சாதிக்கும் ஒரு அடையாளம் உண்டு. ஆனால் சாதி பெயரில் இருக்கும் அடக்குமுறையை ஏற்று கொள்ள முடியாது. ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு வரலாறு உண்டு. வன்னியர், நாடார், மீனவர் போன்ற சமுதாயங்கள் காலங்காலமாக ஒடுக்கப்பட்டு வருகின்றன.

வன்னியர் சங்கம்

வன்னியர் சங்கம்

ஆனால், அனைத்து சமுதாயமும் முன்னேற வேண்டும். மருத்துவர் ராமதாஸ் தலைமையில் வன்னியர் சங்கங்களை இணைக்கும் விதமாக நடைபெற்ற சமூகநீதி போராட்டத்தில் 21 உயிர்கள் இழந்தோம். அதன் பலனாய் 108 பேருக்கு இட ஒதுக்கீட்டில் வேலை வாய்ப்பு கிடைத்தது. நாடார் சமூகத்திற்கு என அரசியல் வரலாறு இல்லை. நாடார் சமுதாயத்திற்கு, கல்வி, வணிகம், ஆன்மீகம் உள்ளிட்டவற்றில் வரலாறு உண்டு. தமிழக அரசோ 10 லட்சம் பேருக்கு தான் அரசு வேலை உண்டு.

நாடார் சமூகம்

நாடார் சமூகம்

ஆனால், நாடார் சமுதாயம் 50 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுத்தது. இப்படிப்பட்ட வரலாறு மறுக்கப்படுகிறது. சத்திரியர்கள் ஒன்று சேர வேண்டும். அதற்கான நேரமும், காலமும் வந்து விட்டது." என பேசினார். சத்திரியர்கள் ஒன்று சேர வேண்டும் வேண்டும் என்ற அன்புமணி ராமதாஸின் பேச்சுதான் தற்போது சமூக வலைதளங்களில் பேசு பொருளாகியிருக்கிறது. குறிப்பாக நிகழ்ச்சியில் பேசிய பாமக பொருளாளர் திலகபாமா," வன்னியர் சமூதாயம் மற்றும் நாடார் சமுதாயம் குறித்து குறிப்பிடும் போது "பத்ரகாளியின் பிள்ளைகளும் மற்றும் திரௌபதியின் பிள்ளைகளும்" என குறிப்பிட்டார். இதனை கூட்டத்தில் இருந்தவர்கள் கைதட்டி ஆர்ப்பரித்து பேசினர்.

தேர்தல் கூட்டணி

தேர்தல் கூட்டணி

கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய நாடார் சங்க நிர்வாகி ஒருவர், நாளையே ஏதாவது கூட்டணி குறித்து பேசுவதாக இருந்தால் தங்களையும் கூட்டிட்டு போங்க என்றதோடு, சிபிஎஸ்சி பாடத்திட்ட விவாகரத்தின் போது தங்களுக்கு ஆதரவாக இருந்த ராமதாஸ் குறித்து நெகிழ்ச்சியுடன் பேசினார். இப்படி இந்த விழாவில் தேர்தல் தொடர்பான மறைமுக பேச்சுகளும், உறுதிமொழிகளும் நிறைந்திருந்தன. இதன் மூலம் அன்புமணி ராமதாஸ் தெற்கிலும் ஒரு சமூதாய கூட்டணியை உருவாக்குவார் என்கின்றனர் பாமகவினர். பல சமூக வலைதள பக்கங்களிலும் இதே பேச்சு நிறைந்திருக்கிறது. சமுதாய கூட்டணி தேர்தல் கூட்டணியாக மாறுமா? என்பதை இன்னும் சில காலங்கள் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.!

English summary
PMK leader Anbumani Ramadoss speech at the Nadar conference in Chennai has sparked various speculation in the southern districts and on social media.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X