இட ஒதுக்கீட்டுக்காக மட்டுமே அதிமுகவுடன் கூட்டணி! திமுகவால் கூட ஜெயிக்க முடியாது! அன்புமணி ஓபன் டாக்!
சென்னை :10.5 சதவிகீதம் இட ஒதுக்கீடு பெற ஒரே காரணத்திற்காக மட்டுமே கடந்த ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி வைத்தோம் எனவும், தமிழ்நாட்டில் தனியாக எந்த ஒரு கட்சியும் போட்டியிட்டு வெற்றி பெற முடியாதுஎன பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராக பொறுப்பேற்ற அன்புமணி ராமதாஸ் சென்னை கிழக்கு கடற்கரை சாலை பாலவாக்கம், ஈஞ்சம்பாக்கம், நீலாங்கரை, பனையூர் கழக கொடியேற்றனார்.
அதேபோல் பழைய மகாபலிபுரம் சாலை சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி, காரப்பாக்கம், கண்ணகிநகர், பெருங்குடி கல்லுக்குட்டை உள்ளிட்ட பகுதியில் கழக கொடியேற்றி நலத்திட்ட உதவிகள் மற்றும் மரக்கன்றுகளை அன்புமணி ராமதாஸ் வழங்கினார்.

அன்புமணி ராமதாஸ்
சோழிங்கநல்லூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அன்புமணி :- 56 ஆண்டு காலம் தமிழ்நாட்டில் இரு கட்சிகளான அதிமுக திமுக ஆட்சி செய்து மக்கள் மனதில் ஒரு தேக்க நிலையை ஏற்படுத்தி உள்ளது. அடுத்தது ஒரு வித்தியாசமான புதுமையான கட்சிக்கு வாய்ப்பு கொடுப்போம் என்று மக்கள் மனதில் ஆழமான கருத்துள்ளது அடுத்தது வித்தியாசமான கட்சியானது பாட்டாளி மக்கள் கட்சி. 2026-ம் ஆண்டில் பாட்டாளி மக்கள் கட்சி தலைமையில் கூட்டணி கட்சியை அமைப்போம்.

பாட்டாளி 2.0
இப்ப இருக்கும் அரசியல் சூழ்நிலையில் ஒரு வெற்றிடம் உள்ளது. அந்த வெற்றிடத்தை பாட்டாளி மக்கள் கட்சி நிச்சயம் நிரப்பும். பாட்டாளி 2.0, பாட்டாளி மாடல் என்ற வித்தியாசமான முறையில் மக்களை சந்திக்க இருக்கிறோம். சின்னசேலம் கள்ளக்குறிச்சியில் 12-ம் வகுப்பு பள்ளி மாணவி மர்மமான முறையில் இருந்துள்ளார். பெண்ணின் பெற்றோர்கள் உறவினர்கள் ஊர்மக்கள் போராட்டம் நடத்தினார்கள் இதற்கு முழு விசாரணை நடக்க வேண்டும் என்று அன்றே நாங்கள் சொல்லியிருந்தோம்.

மிகப்பெரிய கலவரம்
ஆனால் அரசு நடவடிக்கை எடுக்காததால் இன்று மிகப்பெரிய கலவரம் வெடித்துள்ளது இந்த கலவரத்திற்கு காரணம் காவல்துறைதான். நடவடிக்கை எடுத்திருந்தால் பரவாயில்லை ஒருதலை பட்சமாக பள்ளிக்கு சாதகமாக காவல்துறை செயல்பட்டது. இதற்கு சி.பி.சி.ஐ.டி விசாரணை நடத்த வேண்டும் அப்பொழுது தான் அதற்கான தீர்வு கிடைக்கும். இந்தப் பள்ளியில் இது முதல் சம்பவம் இல்லை இதற்கு முன்பு பல மாணவ மாணவிகள் மர்மமான முறையில் இறந்துள்ளனர். தமிழக அரசு சிபிசிஐடி விசாரணை கொண்டுவரவில்லை என்றால் சிபிஐ விசாரணை கொண்டுவர வேண்டும். இது சம்பந்தமாக பாட்டாளி மக்கள் கட்சி மிகப்பெரிய போராட்டம் நடத்தும்

10.5 சதவிகீதம் இட ஒதுக்கீடு
10.5 சதவிகீதம் இட ஒதுக்கீடு பெற ஒரே காரணத்திற்காக மட்டுமே கடந்த ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி வைத்தோம். தமிழ்நாட்டில் தனியாக எந்த ஒரு கட்சியும் போட்டியிட்டு வெற்றி பெற முடியாது. அதிமுக திமுக பாமக எந்த கட்சியாக இருந்தாலும் தனியாக நின்று போட்டியிட்டு வெற்றி பெற முடியாது கூட்டணி ஆட்சிதான் இனிவரும் காலங்களில் வெற்றிபெறும். அந்த அடிப்படையில் ஒருமித்த எண்ணங்களை கொண்ட கட்சிகளை ஒன்று சேர்த்து ஒரே அணியாக அமைத்து வரும் காலங்களில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம்

கஞ்சா விற்பனை
காவல்துறைக்கு தெரியாமல் கஞ்சா விற்பனை செய்ய முடியாது. காவல்துறை கைது செய்தால் அடுத்த 15 நாட்களிலேயே வெளியே வந்து விடுகின்றனர். இவர்கள் மீது குண்டர் சட்டம் போட வேண்டும். கஞ்சா விற்பனை செய்யப்படும் பகுதியில் உள்ள உதவி ஆய்வாளர் ஒருவரை பணி நீக்கம் செய்ய வேண்டும். ஒரே ஒரு உதவியாளர் பணி நீக்கம் செய்தால் அடுத்தது தமிழ்நாட்டில் கஞ்சா விற்பனை தானாக நின்று விடும் அந்த அளவிற்கு கடுமையான நடவடிக்கை எடுத்தால் தான் அடுத்த தலைமுறையை காப்பாற்ற முடியும்" என்றார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications