அந்தப் பேச்சே வேண்டாம்! கட் அன்ட் ரைட் அன்புமணி! மவுனமான பாமக நிர்வாகிகள்!
சென்னை: பாமக பொதுக்குழுவில் அன்புமணி ராமதாஸ் செயல் தலைவராகவோ அல்லது தலைவராகவோ அறிவிக்கப்படலாம் என ஆருடங்கள் கூறப்பட்ட நிலையில் அது போன்ற எந்த நிகழ்வும் நடைபெறவில்லை.
ஜி.கே.மணியிடமே பாமக தலைவர் பதவி இருக்கட்டும் என்பது தான் அன்புமணி ராமதாஸின் விருப்பமாம்.
இதனிடையே பாமக மக்கள் பிரதிநிதியும், மேல்மட்ட நிர்வாகியுமான ஒருவரிடம் அன்புமணிக்கு கட்சியில் வழங்கப்பட வேண்டிய புரோமோஷன் பற்றி நாம் பேசினோம். அப்போது அவர் கூறியதாவது;

சின்ன அய்யா
''சின்ன அய்யாவுக்கு தலைவர் ஆவதற்கான எல்லா திறமையும் தகுதியும் இருக்கிறது. அவரை தலைவராக்க வேண்டும் என தொண்டர்களும், கட்சியில் உள்ள இளைஞர்களும் விரும்புவது உண்மைதான். ஆனால் சின்ன அய்யா அதனை விரும்பவில்லை. ஜி.கே.மணியிடமே பாமக தலைவர் பதவி இருக்கட்டும் என்பது தான் அவர் விருப்பம். அவரிடமுள்ள அந்தப் பதவியை தாம் அடைய வேண்டும் என துளியும் சின்ன அய்யா நினைக்கவில்லை.''

தலைவர் பதவி
''இன்னும் சொல்லப்போனால் பாமக புத்தாண்டு பொதுக்குழுவில் தன்னை தலைவராக்க வேண்டும் என்ற டாபிக்கையே யாரும் பேசக்கூடாது எனச் சொல்லிவிட்டார். அந்தளவுக்கு அவர் நாகரிகமாக நடந்துகொள்கிறார். சின்ன அய்யாவை பொறுத்தவரை எப்போதுமே பதவி ஆசை இல்லாதவர். அதனால் தான் தன்னை தலைவராக்க வேண்டும் என்ற பேச்சையே எடுக்க வேண்டாம் என கறாராக கூறிவிட்டார். அவருடைய சிந்தனை எல்லாம் பாமகவை இன்னும் வலிமைப்படுத்தி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்பது தான்.''

இது தான் உண்மை
''ஊடகங்களில் செய்தி வெளியிடுவது போல், கட்சி தலைவராக வேண்டும் என சின்ன அய்யா எப்போதும் ஆசைப்படவில்லை. தலைவர் பதவி வேண்டாம் என்கிற எந்த அரசியல்வாதியையாவது பார்த்திருப்பீர்களா, அது தான் எங்கள் சின்ன அய்யா. இதை வெறும் புகழ்ச்சிக்காக சொல்லவில்லை, அவருடனேயே பயணிப்பவன் என்ற முறையில் சொல்கிறேன். இது தான் உண்மை.'' என அன்புமணி ராமதாசுக்கு வழங்கப்பட வேண்டிய புரோமோஷன் பற்றி கூறினார் அந்த முக்கியப் பிரமுகர்.

எதிர்பார்ப்பு
பாமக தலைவர் பதவியை அன்புமணி ராமதாஸ் விரும்பாவிட்டாலும் கூட கட்சியில் உள்ள இளசுகள் பலரும், அவருக்கு அடுத்தக் கட்ட புரோமோஷன் வழங்க வேண்டும் என்பதை தான் எதிர்பார்க்கிறார்கள். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு பாமகவில் அமைப்பு ரீதியாக மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
-
விஜய்க்கு எதிராக களமிறங்கும் பாமக.. தேர்தலில் போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? எடப்பாடி அறிவிப்பு -
கீழ்வேளூரில் வடிவேல் ராவணன், அம்பத்தூரில் சேகர்.. பாமகவின் 3 வேட்பாளர்களை அறிவித்த அன்புமணி! -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
திருப்போரூர் அல்லது பாப்பிரெட்டிபட்டி.. செளமியா அன்புமணி களமிறங்கும் தொகுதி எது? -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
சினிமாவில் சிகரெட் தடை டூ ‘மாற்றம் முன்னேற்றம்’ வரை - 2016இல் அன்புமணி செய்த கார்ப்பரேட் பிரச்சாரம் -
பெரம்பூர் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டது விஜய்க்கு சாதகமா? கள நிலவரம் என்ன? டேட்டாவை பாருங்க -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம்












Click it and Unblock the Notifications