உள்ளாட்சி தேர்தல் வெற்றியால் களைகட்டிய அண்ணா அறிவாலயம் - வெறிச்சோடிய அதிமுக அலுவலகம்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றுள்ளதால் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். அண்ணா அறிவாலயத்தில் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன.
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலில் 21 மாநகராட்சிகளையும் கொத்தாக அள்ளியுள்ளது திமுக. நகராட்சிகள், பேரூராட்சிகளிலும் திமுகவின் கொடி பறப்பதால் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். திமுக தலைமை அலுவலகமாக அண்ணா அறிவாலயத்தில் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. முதல்வரும் திமுக தலைவருமான மு.க ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். அதே நேரத்தில் அதிமுக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் யாருமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு 19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. 11 ஆண்டுகளுக்கு பிறகு தேர்தல் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் அமைதியாக நடந்து முடிந்தது. தேர்தலில் ஒட்டுமொத்தமாக 60.70 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. மாநகராட்சிகளில் 52.22 சதவீதம், நகராட்சிகளில் 68.22 சதவீதம், பேரூராட்சிகளில் 74.68 சதவீதம் வாக்குகள் பதிவானது.

21 மாநகராட்சிகளிலும் அதிக வார்டுகளை வென்ற திமுக வெற்றியைத் தன்வசப்படுத்தியது. 138 நகராட்சிகளில் 130 நகராட்சிகளில் முன்னிலை வகித்தது. அதிமுக. 6 நகராட்சிகளில் மட்டுமே முன்னிலை பெற்று இருந்தது. 489 பேரூராட்சிகளில் 400க்கும் மேற்பட்ட பேரூராட்சிகளை திமுக கைப்பற்றி தன் வசப்படுத்தியது.
மொத்தத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. 90 சதவீத வெற்றிகளை ருசித்துள்ளது. குறிப்பாக மாநகராட்சியில் மட்டுமின்றி நகராட்சி, பேரூராட்சிகளிலும் அதிக வார்டுகளை திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளதால் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
லட்டுகள், இனிப்பு பலகாரங்களைக் கொடுத்து உற்சாகமாக நடனமாடினர். திமுக தலைமை அலுவலகமான சென்னையில் திமுக தொண்டர்கள் காலை முதலே குவிந்தனர். முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு ஏராளமானோர் சால்வைகள் அணிவித்து வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். அதே நேரத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்துள்ளதால் ராயபுரத்தில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் வெறிச்சோடி காணப்படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications