இரவில் பீச்சில் பெண்ணுடன் உல்லாசம்.. காலையில் கொலை.. உடல் மீது மண் போட்டு மூடி சென்ற கொடுமை
மெரினா பீச்சில் பெண் அடித்து கொலை செய்தது தொடர்பாக விசாரணை நடக்கிறது.
சென்னை: மெரினா பீச்சில் பெண் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இப்படி கொடூரமாக அடித்ததும் இல்லாமல் அந்த பெண்ணின் உடல் மீது மணல் போட்டு மூடிச்சென்ற கொலையாளியை போலீசார் தேடி வருகிறார்கள்.

மூக்கில் ரத்தம்
மெரினா பீச் நீச்சல் குளம் அருகே இன்று காலை வாக்கிங் சென்ற நபர்கள் மணலில் பெண்ணின் உடல் இருப்பதையும், அந்த சடலம் மீது மணல் கொட்டப்பட்டு அரைகுரையாக மூடப்பட்டு இருந்ததையும் பார்த்தார்கள். எனினும் அருகில் சென்று பார்த்தபோது அந்த பெண்ணின் மூக்கில் ரத்தம் வழிந்து கொண்டு இருந்தது. உடலெங்கும் காயங்கள்... குறிப்பாக முகம்தான் அதிகமாக தாக்கப்பட்டு இருக்கிறது. காயங்களிலிருந்து ரத்தம் வந்து கொண்டே இருந்தது.

யார் என தெரியவில்லை
அதிர்ச்சி அடைந்து பொதுமக்கள் உடனடியாக அண்ணாசதுக்கம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீசார் சடலத்தை உடலை கைப்பற்றி விசாரணையில் ஈடுபட்டனர். உயிரிழந்ததாக கூறப்படும் பெண்ணுக்கு 35 வயது இருக்கும் என கூறப்படுகிறது. ஆனால் அவர் யார்? என்ன? என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை.

விட்டு சென்ற செருப்புகள்
அந்த பெண்ணின் அருகில் பெண்ணின் செருப்பும், ஒரு ஆணின் செருப்பும் ஜோடியாக கிடந்தன. கூடவே மதுபாட்டில்களும் அந்த பெண்ணின் செல்போனும் இருந்தது. அந்த செல்போனில் பதிவாகி இருந்த நம்பர்களை கொண்டு விசாரணை நடைபெறுகிறது.

மண் போட்டு மூட முயற்சி
உல்லாசமாக இருக்க பீச்சுக்கு அந்த பெண்ணை யாரேனும் தனியாக அழைத்து வந்திருக்கலாம் என்றும் ஒன்றாக மது அருந்திய இருவருக்குள் தகராறு ஏற்பட்டு அதனால் அந்த பெண்ணை நபர் கொலை செய்திருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். தாக்கப்பட்ட பெண் இறந்துவிடவும் பதட்டத்தில் அரைகுறை மண்ணை போட்டு மூடியதுடன், தனது செருப்பையும் அங்கேயே விட்டு கொலையாளி தப்பி சென்றிருக்கலாம் என்றும் போலீசார் யூகிக்கின்றனர்.

தனிப்படை அமைப்பு
பெண்ணை அடித்து கொலை செய்தவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மெரினா பீச்சில் பெண்ணை அடித்து கொன்ற சம்பவம் அந்த பகுதியில் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications