ஈரோடு கிழக்கு தேர்தலை சந்திக்க தகுதி இல்லை.. நீங்க பேசலாமா? அண்ணாமலையை சாடிய கே.எஸ். அழகிரி
தேர்தலை நேரில் சந்திக்க தகுதி இல்லாதவர்களுக்கு எதை பற்றியும் பேச அருகதை இல்லை என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி விமர்சித்துள்ளார்.
சென்னை: அண்ணாமலை மிரட்டி பார்க்கும் அளவுக்கு அமைச்சர் எ.வ.வேலு செயல் திறன் இல்லாதவரா? ஒரு இடைத்தேர்தலில் வெற்றி பெற வியூகம் அமைக்க அவருக்கு தெரியாதா? தேர்தலை நேரில் சந்திக்க தகுதி இல்லாதவர்களுக்கு எதை பற்றியும் பேச அருகதை இல்லை என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி கடுமையாக சாடியுள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக சென்னையில் இருந்து இன்று ஈரோடு புறப்பட்டு சென்றார். முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கே.எஸ் அழகிரி கூறியதாவது:-
ஈரோடு கிழக்கு தொகுதியில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எங்களுக்கு எதிரிகளே இல்லை. இந்த தேர்தலில் ஈவிகேஸ் இளங்கோவன் மகத்தான வெற்றியை அடைவார். இதில் எந்த சந்தேகமும் இல்லை. ஈரோடு கிழக்கு தொகுதியில் பணப்புழக்கம் என்று பாரதிய ஜனதா கட்சி சொல்கிறது. அண்ணாமலை ஏதோ ரகசியத்தை கண்டுபிடித்ததை போல அமைச்சர் எவ வேலுவிற்கு சவால் விடுக்கிறார்.
பிறர் மீது குற்றம் சாட்டுவதற்கு முன்பாக தாங்கள் செய்த குற்றங்களை நினைக்க வேண்டும். கோவா மாநிலத்தில் என்ன நடைபெற்றது. வடகிழக்கு மாநிலங்களில் என்ன நடைபெற்றது. மகராஷ்டிராவில் தேர்ந்தேடுக்கப்பட்ட அரசாங்கத்தை எப்படி கவிழ்த்தீர்கள். இவை எல்லாமே பணத்தின் மூலம்தானே நடத்தப்பட்டது. முதலில் மகாராஷ்டிராவிலும், வட கிழக்கு மாநிலங்களிலும் என்ன நடந்தது என்பதற்கு பதில் சொல்லி விட்டு ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரட்டும்.
அண்ணாமலை மிரட்டி பார்க்கும் அளவிற்கு அமைச்சர் எ.வ.வேலு செயல் திறன் இல்லாதவரா? ஒரு இடைத்தேர்தலில் எப்படி வெற்றி பெற வேண்டும் என்ற வியூகம் அமைக்க எவ வேலுவிற்கு தெரியாதா? தேர்தலை சந்திக்க தகுதி இல்லாதவர்களுக்கு எதைப் பற்றியும் பேச அருகதை இல்லை. பிரதமர் மோடியை பற்றிய ஆதராங்களுடன் வீடியோ வெளியாகி இருக்கிறது. அதற்கு பாரதிய ஜனதா தரப்பிலோ.. மோடியோ எந்த பதிலும் சொல்லாமல் இருக்கிறார்கள். அந்த வீடியோவில் புகார் கூறப்பட்டு இருப்பது பிரதமரைப்பற்றி. எனவே மத்திய அரசோ மோடியோ இதற்கு பதில் சொல்ல வேண்டும். அது அவர்களின் கடமையாகும்" என்று தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications