நீங்க இங்க கொட்டுனா! குப்பைகளுடன் லாரியில் வந்து நான் கேரளாவில் கொட்டுவேன்! பாஜக அண்ணாமலை வார்னிங்!
சென்னை: தமிழக எல்லையோர மாவட்டங்களில் கேரள மாநில அரசு குப்பைக் கொட்டுவதை தடுக்காவிட்டால் நான் குப்பை லாரியுடன் கேரளாவுக்கு சென்று , அங்கு எல்லா குப்பைகளையும் கொட்டுவோம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: காவிரி நீர் உள்ளிட்ட தமிழகத்தின் உரிமைகளை தனது கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு விட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கும் முதலமைச்சர் திரு
@mkstalin அவர்கள், கேரள மாநிலத்தின் எல்லையோர மாவட்டங்களான கன்னியாகுமரி, தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களை, கேரள கம்யூனிஸ்ட் அரசின் குப்பைக் கிடங்காக மாற்றவும் அனுமதித்திருக்கிறார்.

கேரள கம்யூனிஸ்ட் அரசுடன் திமுக அரசு உறவாடிக் கொண்டிருக்கும் அதே வேளையில், கேரள மாநிலத்தின் பயோமெடிக்கல், பிளாஸ்டிக் மற்றும் இறைச்சிக் கழிவுகளின் குப்பைக் கிடங்காக நமது தென்மாவட்டங்கள் மாற்றப்பட்டிருக்கின்றன. தினம் தினம் லாரிகளில் கொண்டு வந்து கொட்டப்படும் இந்தக் கழிவுகளைத் தடுத்து நிறுத்த வேண்டிய சோதனைச் சாவடிகள், வெறும் வசூல் மையங்களாக மட்டுமே மாறிவிட்டன.
ஒருபுறம் தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து கேரள மாநிலத்துக்குச் சட்டவிரோதமாக கனிமங்கள் கடத்தப்படுவதைக் கண்டும் காணாததுபோல் இருக்கும் திமுக அரசு, மறுபுறம் தமிழகத்தை குப்பை கொட்டும் இடமாகப் பயன்படுத்திக்கொள்ள சுதந்திரமான அனுமதி அளித்துள்ளது. அதிகாரிகளிடமும், முதலமைச்சர் தனிப்பிரிவுக்கும் பலமுறை புகார் அளித்தும், இதனைத் தடுத்து நிறுத்த எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. முழுக்க முழுக்க திமுக அரசுக்குத் தெரிந்தே இவை நடைபெறுகின்றன.
உடனடியாக, கேரள மாநிலத்தின் குப்பைக் கிடங்காக தமிழக எல்லையோர மாவட்டங்கள் மாற்றப்படுவதைத் திமுக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். இனியும் இதே போன்ற நிகழ்வுகள் தொடர்ந்தால், வரும் 2025 ஜனவரி முதல் வாரத்தில், பொதுமக்களைத் திரட்டி, இந்த உயிரியல் மருத்துவக் கழிவுகள் மற்றும் குப்பைகளை லாரிகளில் ஏற்றிச் சென்று, கேரளாவில் கொண்டு கொட்டுவோம். முதல் லாரியில் நானும் செல்வேன் என்பதைத் திமுக அரசுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அண்ணாமலை எச்சரித்துள்ளார்.
தமிழக எல்லையோர மாவட்டங்களில் கேரள அரசு மருத்துவக் கழிவுகள், இறைச்சிக் கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்டவைகளை கொட்டுவதால் தமிழகம் சுகாதார சீர்கேடு அடைந்துள்ளதாக குற்றம்சாட்டப்படுகிறது. பல முறை கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு குப்பைக் கொட்டும் லாரிகள் வந்தால் அவற்றை அந்த பகுதி மக்கள் சிறைபிடிக்கிறார்கள். எனினும் நள்ளிரவு நேரம், அதிகாலை வேளைகளில் இது போன்ற அக்கிரமம் நடந்து கொண்டுதான் வருகிறது.
இதனால் தமிழகத்திற்கு சுகாதார சீர்கேடு எழுவதுடன் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது. நம் மாநிலத்தை குப்பையாக்கிவிட்டு அவர்கள் மாநிலத்தை சுகாதாரத்துடன் வைத்திருப்பது எந்த வகையில் நியாயம் என பல முறை கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. இது போன்ற குப்பைகள் நீர் நிலைகளில் கொட்டப்படுவதால் அப்பகுதியில் நிலத்தடி நீர் மாசுப்படுகிறது. மேலும் பிளாஸ்டிக் கழிவுகளால் மண் வளமும் பாதிக்கப்படுகிறது.
எல்லாவற்றுக்கும் மேல் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்படும் மனித உறுப்பு கழிவுகளும் தமிழக எல்லையில் கொட்டப்படுவதால் அப்பகுதியில் காற்றை சுவாசிக்கும் மக்களுக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்படுகின்றன. மேலும் துர்நாற்றம் வீசுகிறது. அதை உண்ண நாய் உள்ளிட்ட விலங்குகள் வந்து சண்டையிட்டு வருகின்றன. இதனால் தமிழக மாவட்டங்களுக்கு பெரும் துயரமாக இது நீடித்து வருகிறது. இதற்கு விடிவுக்காலம் பிறப்பது எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது.

-
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
மியூசிக்கிற்கு தடை.. பெண்களுக்கு ஹிஜாப் கட்டாயம்.. தாலிபான்கள் போல் ரூல்ஸ் போட்ட கேரளா ஜிம் -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
ரூ.5.07 லட்சம் கோடி கடனில் கேரளா அரசு.. வெள்ளை அறிக்கையில் ‘திடுக்'.. தமிழகத்தை விட குறைவு தான் -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்!












Click it and Unblock the Notifications