கடை போட்டு 2 மாசமாச்சு.. என்ன யாரயுமே காணோம்! பாதி டார்கெட் கூட தாண்டல.. மாத்தி யோசிக்கும் அண்ணாமலை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக பாஜகவில் இருந்து விலகிய முன்னாள் தலைவர் அண்ணாமலை 'வீ த லீடர்ஸ்' அமைப்பை தொடங்கி இருக்கிறார். சீமான் பாணியில் மது ஒழிப்பு மாநாடு, சுற்றுச்சூழல் மாநாடு, ஆறுகளை சுத்தம் செய்வது என பல்வேறு நிகழ்வுகளை நடத்தி வருகிறார். இச்சூழலில் 50 லட்சம் உறுப்பினர்கள் என்ற எண்ணிக்கையை தாண்டினால் தான் கட்சி ஆரம்பிப்பேன் என அண்ணாமலை கூறிய, நிலையில் பல வாரங்களாக 20 லட்சம் என்ற எண்ணிக்கையை கூட இன்னும் தொடவில்லை.

அண்ணாமலையின் அமைப்பில் சேர செல்போன் எண், அடையாள அட்டையைக் கொடுத்து ஆன்லைனில் நிறைய ப்ராசஸ் செய்ய வேண்டும் என சொல்லப்படுகிறது. இதனால் அதிகம் பேர் சேராத நிலையில், மிஸ்டுகால் மூலம் உறுப்பினர்களை சேர்க்கலாமா என்று ஐடியாவில் இருக்கிறாராம்.

தமிழகத்தின் கரூரில் பிறந்து, ஐஐஎம்-ல் படித்து கர்நாடகத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றிய அண்ணாமலை, விருப்ப ஓய்வுக்குப் பிறகு பாஜகவில் இணைந்தார். இணைந்த உடனேயே அவருக்கு தமிழக பாஜகவின் துணைத் தலைவர் பொறுப்பு வழங்கபட்டது.

Annamalai Missed Call Membership

அண்ணாமலை

பின்னர் குறுகிய இடைவெளியிலேயே 2021-ஆம் ஆண்டு தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்றார் அண்ணாமலை. சட்டம்-ஒழுங்கு, ஊழல், அரசு நிர்வாகம் போன்ற பல்வேறு விவகாரங்களில் தொடர்ந்து திமுக அரசுக்கு எதிராக குரல் கொடுத்ததன் மூலம் இளைஞர்கள் மத்தியில் பிரபலமானார். இதற்கிடையே அதிமுகவையும் சேர்த்து அவர் விமர்சிக்க, அதிமுக பாஜக கூட்டணி உடைந்தது. 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையில் புதிய கூட்டணியை உருவாக்கினார் அண்ணாமலை.

2026 சட்டசபை தேர்தல்

ஆனால் அந்த கூட்டணி படுதோல்வியை சந்தித்தது. 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக மீண்டும் அதிமுகவுடன் கூட்டணியை உருவாக்கிய நிலையில் அண்ணாமலை பதவி விலக நேரிட்டது. இதை அடுத்து கட்சி தலைமையுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் புதிய அரசியல் கட்சியை ஆரம்பிக்கப் போகிறார் அண்ணாமலை என்ற பேச்சுகள் எழுந்தன. இதற்கிடையே டெல்லி சென்ற அண்ணாமலை கடந்த ஜூன் 5-ம் தேதி பாஜகவிலிருந்து விலகினார்.

வீ த லீடர்ஸ்

அதே நாளில் "வீ த லீடர்ஸ்" (இது நம்ம இயக்கம்) அமைப்பை தொடங்கிய அவர் உறுப்பினர் சேர்க்கையையும் ஆரம்பித்தார். அந்த அமைப்பு தொடங்கிய முதல் 24 மணி நேரத்திலேயே 13 லட்சத்துக்கும் அதிகமானோர் இணைந்தனர். அதுமட்டுமல்லாமல் கரு.நாகராஜன் உள்ளிட்ட பாஜகவின் முன்னாள் நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பல அடிநிலைத் தொண்டர்களும் அண்ணாமலையுடன் இணைந்தனர்.

50 லட்சம் பேர்

50 லட்சம் உறுப்பினர்கள் இணைந்த பிறகே அரசியல் கட்சியை அறிவிப்பேன் என்று ஏற்கனவே தெரிவித்திருந்தார் அண்ணாமலை. ஆனால் அதில் தான் தற்போது சிக்கல் எழுந்து இருக்கிறது. அண்ணாமலையின் இயக்கத்தில் கிட்டத்தட்ட 2 மாதத்திற்கு மேலாகியும் 19 லட்சத்து 48 ஆயிரத்து 10 பேர் மட்டுமே இணைந்திருக்கிறார்கள். 50 லட்சம் பேர் இணைந்தால் தான் கட்சி ஆரம்பிப்பேன் என அண்ணாமலை கூறிய நிலையில் தற்போது பல நாட்களாகியும் அதில் பாதி கூட தொண்டர்கள் இணையவில்லை.

பெரிய ஏமாற்றம்

இதுதான் அண்ணாமலைக்கு பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதற்கு அந்த அமைப்பில் சேர்வதற்கான நடைமுறையும் ஒரு காரணம் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள். அண்ணாமலையின் இயக்கத்தில் சேர முதலில் செல்போன் எண்ணைக் கொடுத்து ஆன்லைனில் ஓடிபி பெற வேண்டும். பிறகு அந்த ஓடிபி-ஐ பதிவிட்டால் பெயர், வயது, செல்போண் எண், அடையாள அட்டை உள்ளிட்ட பல்வேறு விவரங்களை கேட்கும். படிக்காதவர்கள் இந்த நடைமுறையை செய்ய முடியாது என்பது ஒரு குறை.

உறுப்பினர் சேர்க்கை

இதை அடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அண்ணாமலையின் ஆதரவாளர்கள் உறுப்பினர் சேர்க்கை முகாம்களை நடத்தினர். வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் அண்ணாமலையின் இயக்கத்தில் சேர சிலர் ஆர்வம் காட்டினர். ஆனாலும் தற்போது வரை 20 லட்சம் என்ற எண்ணிக்கையை கூட அண்ணாமலையின் வீ த லீடர் இயக்கம் பெறவில்லை. பாதி டார்கெட்டை கூட தாண்டாத நிலையில் அடுத்து என்ன செய்யலாம் என ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறாராம் அண்ணாமலை.

சுற்றுச்சூழல் மாநாடு

இதற்கிடையே கோவையில் மது ஒழிப்பு மாநாடு, திருச்செந்தூரில் சுற்றுச்சூழல் மாநாடு என அடுத்தடுத்து சில நிகழ்வுகளை நடத்தி வருகிறார் அண்ணாமலை. மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மாரத்தான் போட்டிகள், ஆறு ஏரி குளங்களை சுத்தம் செய்வது போன்ற நடவடிக்கைகளும் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் அமைப்பை ஆரம்பித்த உடனேயே தனக்கு பல லட்சம் ஆதரவாளர்கள் கிடைப்பாளர்கள் என எதிர்பார்த்து நிலையில் வெறும் 20 லட்சம் பேர் மட்டுமே இணைந்ததால் சோகத்தில் இருக்கும் அண்ணாமலை, அடுத்ததாக என்ன செய்யலாம் என யோசித்து வருகிறாராம்.

மிஸ்டுகால்

இதற்கிடையே பாஜக பாணியில் மிஸ்டுகால் மூலம் உறுப்பினர்களை சேர்க்கலாமா என்ற எண்ணத்தில் அண்ணாமலை இருப்பதாக சொல்லப்படுகிறது. மிஸ்டுகால் மூலம் உறுப்பினராக சேரலாம் என அறிவித்தால் படிக்காத மக்கள் கூட எளிதாக மிஸ்டுகால் கொடுத்து கட்சியில் சேர்ந்து விடுவார்கள். இதனால் குறைந்தபட்சம் 30 லட்சம் உறுப்பினர்கள் என்ற எண்ணிக்கையை கூட பெற்றுவிடலாம் என்பதுதான் அண்ணாமலையின் எண்ணம் எனவும், அதற்கான வேலைகளை தொடங்கி இருக்கிறார் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+