Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை பாஜக அலுவலகத்தில் வெடிகுண்டு வீசப்பட்டதன் பின்னணியில் யார்- என்ஐஏ விசாரணை கேட்கும் அண்ணாமலை

தமிழக பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு பற்றி என்.ஐ.ஏ.விசாரிக்க வேண்டும் என்று கட்சித்தலைவர் அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: கமலாலயம் அலுவலகம் மீதான பெட்ரோல் குண்டுவீச்சின் பின்னணியில் மிகப் பெரிய சதி உள்ளதாகவும் என்.ஐ.ஏ.விசாரிக்க வேண்டும் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார். நீட் தேர்வை பாஜக ஆதரிப்பதால் வெடிகுண்டு வீசப்பட்டதாக கூறுவது மிகப்பெரிய நகைச்சுவை என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜகவின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நள்ளிரவு சுமார் ஒரு மணி அளவில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் அலுவலகத்தின் உள்ளே பெட்ரோல் குண்டை வீசி சென்றனர். இந்த சம்பவம் பாஜக அலுவலகத்திலும், அப்பகுதியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நள்ளிரவு நேரம் என்பதால் பாஜ.க.தலைமை அலுவலகத்தில் கதவுகள் மூடப்பட்டிருந்ததால் நல்லவேளையாக யாருக்கும் எவ்வித சேதமும் ஏற்படவில்லை. பெட்ரோல் குண்டு வீச்சை அடுத்து உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்கள். சிசிடிவி காட்சியை ஆய்வு செய்தனர். பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பா சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த வினோத் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன.

போலீஸ் விசாரணை

போலீஸ் விசாரணை

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நீட் தேர்வுக்கு எதிராக பேசியதால் பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக வினோத் கூறியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. கருக்கா வினோத் காசுக்காக பெட்ரோல் குண்டு வீசுவதை வழக்கமாக வைத்துள்ளதாக தெரிவித்துள்ள போலீசார், பணம் கொடுத்து யாரேனும் குண்டு வீசச் சொல்லியுள்ளனரா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மிகப்பெரிய சதி

மிகப்பெரிய சதி

இந்த நிலையில் பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் மிகப்பெரிய சதி இருப்பதாக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். நீட் தேர்வை ஆதரிப்பதால் பாஜக அலுவலகத்தில் குண்டு வீசியதாக கூறியது நகைச்சுவை என்றும் கூறினார். கைது செய்யப்பட்ட நபருக்கு நீட் என்பதன் அர்த்தம் தெரியுமா எனவும் அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.

என்ஐஏ விசாரணை

என்ஐஏ விசாரணை

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த வினோத் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நீட் தேர்வுக்கு எதிராக பேசியதால் பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக வினோத் கூறியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது

வன்முறை அதிகரிப்பு

வன்முறை அதிகரிப்பு

ஆளும் கட்சி ஆட்சிக்கு வந்து 8 மாதம் காலத்தில் வன்முறை அதிகரித்துவிட்டது. இதற்கு எடுத்துகாட்டாகத்தான் பாரதிய ஜனதா அலுவலகத்தில் 3 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதாக பார்க்கிறோம். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக பாஜக தீவிரமாக பிரச்சராம் செய்து வருகிறது. பாஜக கட்சி மிக பெரிய மாற்றத்தை தமிழகத்தில் கொண்டு வரும் என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+