"திமுக".. தம்பி அண்ணாமலை அதை பற்றி நீங்க பேசாதீங்க! நீங்க மெயின் ஆர்ட்டிஸ்டே கிடையாது.. சீறிய சீமான்
சென்னை: திமுக - பாஜக கூட்டணி பற்றி பேச பாஜக தலைவர் அண்ணாமலைக்கு என்ன உரிமையும் இல்லை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சமீப காலமாக பாஜக - திமுக இரண்டு கட்சிகளும் கூட்டணி ரீதியாக நெருங்கி வருவதாக பல்வேறு அரசியல் விவாதங்கள் எழுந்தன. இதையடுத்து விசிக தலைவர் எம்பி திருமாவளவனின் மணி விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின்,
திமுக கூட்டணி கொள்கை கூட்டணி. எங்கள் கொள்கை அறிவாலயத்தில் எப்படி இருக்கிறதோ அப்படித்தான் ஆட்சியிலும் இருக்கும். நாங்கள் கொள்கையில் உறுதியாக இருக்கிறோம்.பாஜகவுடன் சிறிய சமரசத்தை கூட நாங்கள் செய்து கொள்ள மாட்டோம், என்று கூறினார்.
இதற்கு பதில் அளித்த அண்ணாமலை, திமுகவுடன் பாஜக கூட்டணி வைக்காது. பாஜகவுடன் கூட்டணி வைக்கும் தகுதி திமுகவிற்கு இல்லை என்று கூறினார். இந்த நிலையில் அண்ணாமலையின் பேச்சை சீமான் விமர்சனம் செய்துள்ளார்.

சீமான்
நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த பேட்டியில், சீனாவின் உளவு கப்பல் இலங்கைக்கு வந்துள்ளது. நாம் அனுமதிக்க கூடாது என்று இலங்கையிடம் சொல்லியும் இலங்கை அந்த சீன கப்பலை அனுமதித்து உள்ளது. நீங்கள் இலங்கை மீது என்ன நடவடிக்கை எடுத்து உள்ளீர்கள்? இலங்கைக்கு உளவு வானூர்தி கொடுத்தது மத்திய அரசு தானே. இது என்ன வேடிக்கையாக இருக்கிறது. இலங்கை மீது நீங்கள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.

பாஜக
இலங்கை சீனாவின் அடிமை. அவர்களுக்கு ஏன் நீங்கள் உதவி செய்கிறீர்கள். அதை எல்லாம் நீங்கள் உணர மாட்டீர்களா. அவர்களை நம்புவதை போல பேராபத்து கிடையாது. இலவசம் வேண்டாம் என்று சொல்வதற்கு மோடிக்கு என்ன தகுதி இருக்கிறது. குஜராத்தில் மோடி இலவசம் கொடுக்கவில்லையா? உங்களுக்கு இலவசம் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது. அரவிந்த் கெஜ்ரிவால் இலவசம் கொடுத்தாலும் நல்ல கல்வி கொடுக்கிறாரே.

டெல்லி
டெல்லியில் அவர் நிரூபித்து காட்டினார். பாஜக என்ன செய்தது. நீங்கள் விவசாயிகளுக்கு பணம் கொடுப்பது மட்டும் இலவசம் கிடையாதா? என்று சீமான் குறிப்பிட்டார். இதையடுத்து செய்தியாளர் ஒருவர் பாஜகவுடன் கூட்டணி வைக்க திமுகவிற்கு தகுதி இல்லை என்று அண்ணாமலை கூறியுள்ளது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்று சீமானிடம் கேட்டார். அதற்கு சீமான், அதை எல்லாம் தம்பி (அண்ணாமலை) சொல்ல கூடாது. அண்ணாமலை மெயின் ஆர்ட்டிஸ்ட் கிடையாது. வசனம், இயக்குனர் எல்லாம் வேறு ஆள்.

அண்ணாமலை
உங்களுக்கு அந்த வசனமே இல்லையே. அண்ணாமலைக்கு இப்படி பேச ஏதாவது உரிமை இருக்கிறதா? தம்பி அண்ணாமலைக்கு இந்த முடிவு எடுக்கும் உரிமை இருக்கிறதா? உங்கள் எஜமான் அமித் ஷா இப்படி சொன்னாரா? உங்களின் பெரிய எஜமான் மோடி சொன்னாரா? இனிமே எதுக்கு கூட்டணி? நீங்க கூட்டணியில் தானே இயங்குகிறீர்கள்? தமிழ்நாட்டில் ஏன் பாஜக ஆட்சி அமைக்க வேண்டும்.

சான்ஸ் இல்லை
அவர்கள் ஆட்சி அமைக்காமலே திமுக வழியாக ஆட்சி செய்து கொண்டு தானே இருக்கிறார்கள். தம்பி அண்ணாமலை இப்படி கூட்டணி இல்லை என்று சொல்வது ஒரு ஆற்றாமையில் பேசுகிறார். ஆனால் இப்படி சொல்லும் உரிமை அவருக்கு இல்லை. இதில் முடிவு எடுக்கும் உரிமை அவரிடம் இல்லை. அதை எல்லாம் மேலிடம்தான் முடிவு எடுக்கும். அவருக்கு இதற்கான் உயரம், உரிமை இல்லை என்று சீமான் விமர்சனம் செய்துள்ளார்.
-
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு












Click it and Unblock the Notifications