கரப்பான் பூச்சி ஜனதா கட்சிக்கு ஆதரவா? எஸ்ஐஆர் நடந்த போது எங்கே போனீங்க? அண்ணாமலை பரபர பேச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை: எல்லா மாநிலமும் வளரும் போது, தமிழகம் வளரவில்லை என்றும் ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி குறைந்துள்ளதாகவும் வி த லீடஸ் அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை கூறியுள்ளார். மேலும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியுடன் நாங்கள் எப்போதும் கூட்டணி வைக்கப் போவது இல்லை என்று பேசிய அண்ணாமலை, வாக்காளர் பட்டியல் திருத்தம் நடைபெற்ற போது எல்லோரும் வீட்டில் படுத்து தூங்கி கொண்டு இருந்தீர்களா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதே நேரம் நம் நாட்டில் போராட்டம் நடத்த எல்லோருக்கும் உரிமை உண்டு. அவர்கள் கைது நடவடிக்கை முறையாக இருந்திருக்க வேண்டும் என்று அண்ணாமலை கூறினார்.

Annamalai

அண்ணாமலை பேச்சு

வி த லீடர்ஸ் அமைப்பின் சார்பில் பெண்கள் வளர்ச்சி மாநாடு இன்று கிருஷ்ணகிரியில் நடைபெற்றது. 6 ஏக்கர் பரப்பளவில் 10 ஆயிரம் பேர் அமரும் வசதியுடன் இந்த மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் வி த லீடர்ஸ் அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தேசியம் குறித்து யாரும் எனக்கு பாடம் எடுக்க வேண்டாம். தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு உள்ளாட்சி தேர்தல் வர உள்ளது. பெண்கள் ஆட்சி அதிகாரத்தில் 10 சதவீதம் மட்டுமே உள்ளனர். இம்மாநட்டின் மூலம் பெரிய சமுதாய மாற்றத்தை ஏற்படுத்த உள்ளது. வி த லீடர்ஸ் அமைப்பு அரசியல் அமைப்பாக மாற்றப்படும்.

சிஜேபிக்கு ஆதரவு கிடையாது

அனைத்து மாநிலங்களும் வளர வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளோம். திமுக, அதிமுக ஆட்சியில் உள்ளூர் பொருளாதாரம் வளரவில்லை. யாரிடமும் கை கட்டி நிற்காத மாநிலமாக தமிழ்நாடு உருவாக்கப்பட வேண்டும். எல்லோரையும் தலைவர் ஆக்குவதற்கு வி த லீடர்ஸ் பயிற்சி அளிக்கும். நாட்டில் யார் நல்லது செய்தாலும் வரவேற்கிறோம். ஒவ்வொரு கட்சியும் சட்டமன்ற தேர்தலின் தான் முதலில் போட்டியிடும்.

வி த லீடர்ஸ் அமைப்பு முதன் முதலாக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும். சிஜேபி அமைப்பினர் மீதான கைது நடவடிக்கையை முறையாக மேற்கொள்ள வேண்டும். எஸ்.ஐ.ஆர் பணிகள் நடைபெற்ற போது காங்கிரஸ் கட்சியினர் தூங்கி கொண்டு இருந்தீர்களா? கரப்பான் பூச்சி ஜனதா கட்சிக்கு ஒருபோதும் ஆதரவு கொடுக்க மாட்டோம்.

தூங்கிக் கொண்டு இருந்தீர்களா?

நம்முடைய இலக்கு வேறு.. அவர்களுடைய இலக்கு வேறு.. கரப்பான் பூச்சி ஜனதா கட்சி இந்தியாவில் போராடுவதற்கு உரிமை உள்ளதா? என்று கேட்டால் இருக்கிறது. அதேபோல திமுகவிற்கு உரிமை உள்ளதா என்றால் உள்ளது. எப்பவுமே ஒரு ஸ்பிரிங்கை அழுத்தினால் அது ரொம்ப வேகமாக மேலே எழும். எனவே ஆட்சியில் இருப்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

கரப்பான் பூச்சி ஜனதா கட்சியில் இருக்க கூடிய ஒரு தரப்பினர் ஏதோ ஒரு காரணத்திற்காக ஏதோ ஒரு பிரச்சினையை தூக்கிக்கொண்டு வருகிறார்கள். வாக்காளர் பட்டியல் திருத்தம் நடைபெற்ற போது எல்லோரும் வீட்டில் படுத்து தூங்கி கொண்டு இருந்தீர்களா?. எல்லா மாநிலமும் வளரும் போது, தமிழகம் வளரவில்லை. ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி குறைந்துள்ளது.. என்று பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+