சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அதிமுகவுடனான கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லை.. குழப்பமே வேண்டாம்.. பாஜக தலைவர் அண்ணாமலை

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவுடனான கூட்டணியில் எந்த வித பிரச்சினையும் இல்லை என தமிழக பாஜக தலைவர் கே அண்ணாமலை தெரிவித்துள்ளார். அதே நிலையில் மாநில துணைத் தலைவர் வி பி துரைசாமியோ வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் தமிழகத்தில் பாஜக ஆட்சி அமையும் என்று தெரிவித்துள்ளார்.

சென்னை தி. நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் சென்னை மாநகராட்சி தேர்தலுக்கான விருப்ப மனு பெறும் நிகழ்ச்சியானது நடைபெற்றது.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் மாநில துணை தலைவர் வி.பி. துரைசாமி ஆகியோரிடம் தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து மனுக்களை பெற்றனர்.+

துபாயில் நடந்த தூய்மைப் பணி முகாம் தமிழக இளைஞர் தலைமையிலான குழுவினருக்கு பாராட்டு துபாயில் நடந்த தூய்மைப் பணி முகாம் தமிழக இளைஞர் தலைமையிலான குழுவினருக்கு பாராட்டு

தேர்தல்

தேர்தல்

இந்த விழாவில் வி.பி. துரை சாமி மேடை பேசுகையில் 2026-ல் தமிழகத்தில் பாஜக ஆட்சி அமையும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. நீங்கள் யாரும் தேர்தலை பற்றி கொஞ்சம் கூட கவலைப்பட வேண்டாம் என வி.பி.துரைசாமி பேசினார். அதனை தொடர்ந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசுகையில் சென்னை மாநகரதிற்குட்பட்ட 3 மாவட்டங்களுக்கு தற்போது விருப்ப மனு பெறப்பட்டுள்ளது. தொடர்ந்து பிற மாவட்டங்களுக்கான விருப்ப மனு பெறப்படும். இன்னும் தேர்தல் நாள் அறிவிக்கவில்லை.

கூட்டணி கட்சி

கூட்டணி கட்சி

தேர்தல் நாள் அறிவித்த பின்னர் கூட்டணி கட்சிகள் நிற்பதை வைத்து நாங்கள் அறிவிப்போம். மேலும் அதிமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை. வேளாண் சட்டம் பொறுத்தவரை டெல்லியில் விவசாயிகள் போராடி வந்தர்கள். 700க்கும் மேற்பட்ட விவசாயிகள் இறந்துள்ளனர். உச்சநீதிமன்ற அமைத்த குழுவில் உள்ள 3 நீதிபதிகளில் ஒரு நீதிபதி வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மாற்றம்

மாற்றம்

விவசாயிகளிடம் மத்திய அரசு சார்பில் என்ன மாற்றம் வேண்டும் என விவசாயிகளிடம் கேட்டதற்கு எழுத்துப்பூர்வமாக பதிலளிக்கவில்லை. விவசாயிகள் மீது தடியடி நடத்தியதற்கு மோடி தான் காரணம் என கூறுவது நியாயமில்லை. இதில் வெற்றி தோல்வி என்பது இல்லை. இது ஒரு தவம், இதற்கான சூழல் மீண்டும் வரலாம். அப்போது விவசாயிகள் ஏற்று கொள்ளலாம். சில மாநிலங்களில் இந்த சட்டத்தை விவசாயிகள் புரிந்து கொள்ளவில்லை.

நிகழ்வு

நிகழ்வு

உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்த நிகழ்வில் விவசாயியை கார் ஏற்றி கொலை செய்த நிகழ்வில் அமைச்சரின் மகன் கூட கைது செய்யப்பட்டுள்ளார். அதனால் யார் தவறு செய்தாலும் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள். விவசாய சட்டம் தவறு என்று நான் இப்போதும் கூறவில்லைஎன அவர் தெரிவித்தார். நீட் என்பது சரி என அனைத்து மாநிலத்திலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. நீட் தேர்வுக்கு முன்னால் தான் இதனை அரசியல் ஆக்கினார்கள்.

நீட் தேர்வு

நீட் தேர்வு

நீட் தேர்வின் முடிவுகள் அறிவித்த பிறகு அதனை பற்றி பேசுவது கூட இல்லை. நீட் பொறுத்தவரை அதனை திரும்ப பெற வேண்டும் என கூக்குரல் போட்டு வருகிறார்கள். நீட் தேர்வு என்பது சாதாரண மாணவர்களுக்கு வரப்பிரசாதமாக உள்ளது. நீட் நிச்சயம் இருக்கும். திரும்ப பெறப்பட்டாது. கரூரில் நடந்த பாலியல் குற்றங்களுக்கு தவறு செய்தால் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என மக்களுக்கு புரிய வந்தால், குற்ற செயலில் ஈடுபடுவர்களுக்கு பயம் ஏற்படும். காவல் துறை குற்றவாளிகள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அண்ணாமலை தெரிவித்தார்.

English summary
TN BJP President Annamalai says that there is no issue with AIADMK alliance.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X