துபாய் ஓட்டல் “சீக்ரெட்”.. அண்ணாமலை பதில் சொல்வார்! பாஜகவின் புதிய “லீக்”.. குமுறும் காயத்ரி ரகுராம்
சென்னை: துபாய் ஓட்டலில் தான் யாரை சந்தித்தேன் என்பது பற்றி தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலையே பதிலளிப்பார் என அக்கட்சியிலிருந்து 6 மாதங்கள் நீக்கப்பட்ட காயத்ரி ரகுராம் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு இருக்கும் காயத்ரி ரகுராம், "முதலில் நான் சென்னை சோமர்செட் ஓட்டலில் சந்தித்ததாக தவறான முறையில் சொல்லி எண்ணை குறிவைத்து விமர்சித்தார்கள்.
தற்போது நான் துபாய் ஓட்டலில் யாரை சந்தித்தேன் என்று கேட்கிறார்கள். இதற்கு அண்ணாமலை பதிலளிப்பார். நான் அமைதியாக இருக்கப்போகிறேன்.

அண்ணாமலையின் ஆதரவாளர்கள்
இப்போது எனக்கு ஏராளமான அழைப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. அண்ணாமலையின் ஆதரவாளர்கள் எனக்கு ஆலோசனை வழங்க இருக்கிறார்கள். அதற்கு காரணம், தங்களின் குடும்ப பெண்களை பற்றி அண்ணாமலை அவர்கள் எதுவும் பேசவில்லை. அண்ணாமலை எனது பெயரை எங்கும் பயன்படுத்தவில்லை என்று மக்கள் நினைக்கிறார்கள்.

150 பேர் கூட்டத்தில் பேச்சு
ஆனால், அவர் 150 பேர் குழுமி இருந்த கூட்டத்தில் எனது பெயரை அவர் பயன்படுத்தினார். அண்ணாமலை ஏன் அவ்வாறு பேசினார்? எந்த அடிப்படையில் அப்படி பேசினார்? என்று நான் அவரிடம் கேள்வி எழுப்பப்போவது கிடையாது. எனது வேண்டுகோள் என்னவென்றால், என் சார்பாக மக்களுக்கு எனது மாநில தலைவர் அண்ணாமலை பதிலளிக்க வேண்டும்." என பதிவிட்டு உள்ளார்.

ஆடியோ சர்ச்சை
சூர்யா சிவா டெய்சி இடையிலான ஆடியோ சர்ச்சையை தொடர்ந்து அண்ணாமலையால் நடவடிக்கைக்கு உள்ளானவர் காயத்ரி ரகுராம். 6 மாதம் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அவர், வகித்த பதவியும் பறிக்கப்பட்டு வேறொருவருக்கு வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து அண்ணாமலையை நேரடியாகவும் மறைமுகமாகவும் விமர்சித்து வருகிறார் காயத்ரி ரகுராம்.

சூர்யா சிவா மீது விமர்சனம்
ஆடியோ குறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "சொந்த கட்சிப் பெண்களை ஏன் தாக்க வேண்டும்? இந்த ஹைனாக்களுக்கு அழகு பார்க்க கட்சியில் மாநில பதவி கொடுத்தது மிகப்பெரிய தவறு. ஆனால் சில மற்ற கட்சிகளில் இருந்து புதிதாக இணைந்தவர்களும், சில ஜல்ட்ரா ஆதரவாளர்களும் ஆபத்தானவர்கள் என்பதை உணரவில்லை. களப்பணி இல்லாமல் சிலர் ஜல்ட்ரா மட்டும் செய்தால் இதுதான் நடக்கும்.

டெய்சிக்கு ஆதரவு
திருச்சி சூர்யா & கோ அல்லது செல்வா & கோ மீண்டும் எங்களை ட்ரோல் செய்தால் நான் ஆச்சரியப்பட மாட்டேன். சைக்கோ மூளையால் மட்டுமே முடியும். என் இரத்தம் கொதிக்கிறது. இந்த நபர்களை போலீசார் கைது செய்ய வேண்டும். மற்றும் கட்சி அவரை உடனடியாக நீக்க வேண்டும். குரல் அச்சுறுத்தலைக் கேட்டு இதயம் உடைந்தது. டெய்சிக்கு வலிமை. என் ஆறுதல் மற்றும் ஆதரவு." என்று பதிவிட்டு இருந்தார்.

தலைமையை காக்க..
அவர் வெளியிட்ட மற்றொரு பதிவில், "உங்கள் தலைமையையும் பதவியையும் காப்பாற்ற 100 பொய்களைச் சொல்லலாம். ஆனால் ஒரு உண்மை உங்கள் 100 பொய்களை அழித்துவிடும். தலைவனாக சித்தரிக்கும் முன் மனிதனாக இரு. நான் இதை ஒரு புத்தகத்தில் படித்தேன். ஆனால் இப்போது கருத்துகளைப் படிக்கிறேன். ஏன் இவ்வளவு வெறுப்பு? படித்ததை பிடித்தது, இது எல்லா தலைவர்களுக்கும் பொருந்தும் என்று நினைத்தேன்." என்றார்.

வானதிக்கு பதில்
அதேபோல், பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கருத்துக்கு பதிலளித்த அவர், "இதில் எனக்கு புரியாத விசயம் என்னவென்றால், எனக்கு எந்த நோட்டீசும் வரவில்லை. இது சட்டத்துக்கு எதிரானது. விசாரணையும் நடத்தவில்லை. தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி. அவசரமாக வழங்கப்படும் நீதி புதைக்கப்படும் நீதி. இன்று நான். நாளை யாரோ. இதை வெளியில் சொல்ல முடியாத மற்ற தொண்டர்களை நினைத்துப் பார்க்கிறேன். உங்கள் அனைவருக்கும் என் ஆதரவு." என்று கூறினார்.












Click it and Unblock the Notifications