விஜய் தான் கெத்து.. பாதியை தாண்டாத டார்கெட்! அண்ணாமலை கட்சி அவ்வளவு தானா? அண்ணனின் அடிவருடிகள் ஷாக்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக பாஜகவில் இருந்து விலகிய முன்னாள் தலைவர் அண்ணாமலை 'வீ த லீடர்ஸ்' அமைப்பை ஆரம்பித்திருக்கிறார். தற்போது அந்த இயக்கத்தின் மூலம் பல்வேறு நிகழ்வுகளை நடத்தி வருகிறார். 50 லட்சம் என்ற எண்ணிக்கையை கடந்தால் தான் கட்சி ஆரம்பிப்பேன் என அண்ணாமலை கூறிய நிலையில் கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேலாகியும் 20 லட்சம் பேர் கூட அந்த இயக்கத்தில் இணையவில்லை. இதனால் கடும் அதிருப்தியில் இருக்கிறார் அண்ணாமலை என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.

தமிழகத்தின் கரூரில் பிறந்து, ஐஐஎம்-ல் படித்து கர்நாடகத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றிய அண்ணாமலை, விருப்ப ஓய்வுக்குப் பிறகு பாஜகவில் இணைந்தார். இணைந்த உடனேயே அவருக்கு தமிழக பாஜகவின் துணைத் தலைவர் பொறுப்பு வழங்கபட்டது.

Annamalai

பின்னர் குறுகிய இடைவெளியிலேயே 2021-ஆம் ஆண்டு தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்றார் அண்ணாமலை. சட்டம்-ஒழுங்கு, ஊழல், அரசு நிர்வாகம் போன்ற பல்வேறு விவகாரங்களில் தொடர்ந்து திமுக அரசுக்கு எதிராக குரல் கொடுத்ததன் மூலம் இளைஞர்கள் மத்தியில் பிரபலமானார்.

அண்ணாமலை

இதற்கிடையே அதிமுகவையும் சேர்த்து அவர் விமர்சிக்க, அதிமுக பாஜக கூட்டணி உடைந்தது. 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையில் புதிய கூட்டணியை உருவாக்கினார் அண்ணாமலை. ஆனால் அந்த கூட்டணி படுதோல்வியை சந்தித்தது. 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக மீண்டும் அதிமுகவுடன் கூட்டணியை உருவாக்கிய நிலையில் அண்ணாமலை பதவி விலக நேரிட்டது.

வீ தி லீடர்ஸ்

இதை அடுத்து கட்சி தலைமையுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் புதிய அரசியல் கட்சியை ஆரம்பிக்கப் போகிறார் அண்ணாமலை என்ற பேச்சுகள் எழுந்தன. இதற்கிடையே டெல்லி சென்ற அண்ணாமலை கடந்த ஜூன் 5-ம் தேதி பாஜகவிலிருந்து விலகினார். அதே நாளில் "வீ தி லீடர்ஸ்" (இது நம்ம இயக்கம்) அமைப்பை தொடங்கிய அவர் உறுப்பினர் சேர்க்கையையும் ஆரம்பித்தார்.

50 லட்சம் உறுப்பினர்கள்

அந்த அமைப்பு தொடங்கிய முதல் 24 மணி நேரத்திலேயே 13 லட்சத்துக்கும் அதிகமானோர் இணைந்தனர். அதுமட்டுமல்லாமல் கரு.நாகராஜன் உள்ளிட்ட பாஜகவின் முன்னாள் நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பல அடிநிலைத் தொண்டர்களும் அண்ணாமலையுடன் இணைந்தனர். 50 லட்சம் உறுப்பினர்கள் இணைந்த பிறகே அரசியல் கட்சியை அறிவிப்பேன் என்று ஏற்கனவே தெரிவித்திருந்தார் அண்ணாமலை. ஆனால் அதில் தான் தற்போது சிக்கல் எழுந்து இருக்கிறது.

உறுப்பினர் சேர்க்கை

அண்ணாமலையின் இயக்கத்தில் கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேலாகியும் 19 லட்சத்து 34 ஆயிரத்து 777 பேர் மட்டுமே இணைந்திருக்கிறார்கள். 50 லட்சம் பேர் இணைந்தால் தான் கட்சி ஆரம்பிப்பேன் என அண்ணாமலை கூறிய நிலையில் தற்போது பல நாட்களாகியும் அதில் பாதி கூட தொண்டர்கள் இணையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அண்ணாமலை ஆதரவாளர்கள்

அண்ணாமலை அமைப்பை ஆரம்பித்த புதிதில் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் அவரது ஆதரவாளர்கள் நேரடியாகவே உறுப்பினர் சேர்க்கை முகாம்களை நடத்தினர். பலர் வெளிநாடுகளில் இருந்தும் அண்ணாமலையின் இயக்கத்தில் இணைந்தனர். தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களை பதிவிட்டால் மட்டுமே அந்த இயக்கத்தில் உறுப்பினராக முடியும் என்ற நிலையில் அண்ணாமலை தற்போது வரை உறுப்பினர் சேர்க்கையில் வெளிப்படை தன்மையை கடைப்பிடித்து வருகிறார்.

விஜய் கட்சி

ஆனால் 50 லட்சம் என்ற டார்கெட் வைக்கப்பட்டிருக்கும் நிலையில் அதில் பாதி பேர் கூட உறுப்பினராக இணையவில்லை கோவையில் பிரம்மாண்ட மாநாடு நடத்திய நிலையில் அடுத்ததாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளின் நிகழ்ச்சிகளை நடத்த அண்ணாமலை திட்டமிட்டு இருக்கிறார். ஆனால் அது கட்சியாக மாறுமா என தெரியவில்லை. விஜய் கட்சி ஆரம்பிப்பதாக அறிவித்த சில நாட்களிலேயே உறுப்பினர் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டியது. தற்போது வரை சுமார் 2 கோடி பேர் அந்த கட்சியில் இணைந்து இருக்கலாம் என சொல்லப்படும் நிலையில், இளைஞர் மத்தியில் பெரிய ஆதரவு இருப்பதாக சொல்லப்பட்ட அண்ணாமலை கட்சியில் இதுவரை 20 லட்சம் பேர் கூட சேரவில்லை என்பதால் அவர் அதிருப்தியில் இருக்கிறார் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+