தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டத்தில்.. ஞானேஷ் குமார் பெயரை கூட சொல்லாத அமைச்சர் ராஜ்மோகன்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: SIR முறைகேட்டில் ஈடுபட்டதாக, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தி.. இந்திய கூட்டணி சார்பில் நேற்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக வெற்றி கழகத்தின் அமைச்சர் ராஜமோகன் பங்கேற்று இருந்தார்.

இந்தியா கூட்டணி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், முதல்முறையாக தவெக தனது பங்கேற்பை இதன் மூலம் உறுதி செய்திருந்தது. ஆனால், இந்த ஆர்ப்பாட்டத்தில் ராஜ்மோகன், மத்திய அரசை கண்டித்தோ அல்லது தேர்தல் ஆணையரை விமர்சித்தோ எந்த வார்த்தையும் பேசாமல் தவிர்த்தார் என்பது விமர்சனங்களாக எழுந்திருக்கிறது.

Minister Rajmohan

நேற்று ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர், SIR என்கிற நடைமுறை இந்தியாவின் மீது திணிக்கப்பட்டு இருப்பதாக நாங்கள் அப்போதே குற்றம் சாட்டியிருந்தோம். எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு மாதிரியும்.. ஆளுங்கட்சியாக இருக்கும்போது வேறு ஒரு மாதிரியாகவும் பேசும் பழக்கம் எங்களுக்கு இல்லை. எனவே அதே கருத்தை தான் இப்போதும் வலியுறுத்துகிறோம்.

நாங்கள் கடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முன்பிருந்தே இந்த SIR நடவடிக்கையை எதிர்த்து வருகிறோம். தமிழ்நாட்டுக்கு முன்பு பீகாரில் இந்த நடவடிக்கை திணிக்கப்பட்ட போது அதை தமிழக வெற்றி கழகம் எதிர்த்தது. இந்த விவகாரத்தில் வெறுமன எதிர்ப்போடு மற்றும் நின்றுவிடாமல் சட்ட போராட்டங்களையும் நாங்கள் முன்னின்று நடத்தினோம். SIR நடவடிக்கையின் போது 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதும்.. அதன் பின்னர் சில வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதும் ஜனநாயகத்திற்கு விரோதமான நடவடிக்கை என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்லி வருகிறோம்.

இந்த விஷயத்தில் நாங்கள் வேறு, கூட்டணி கட்சிகள் வேறு கிடையாது. நாங்கள் ஒரு கொடியில் பூத்த இரு மலர்கள்! ஒரே உரிமை குரலுக்காக ஓங்கி ஒலிக்க கூடிய இரட்டைக் குழல் துப்பாக்கியாக.. மாணிக்கம் தாகூருடன் நாங்கள் நின்று கொண்டிருக்கிறோம்.

SIR நடவடிக்கையை பொறுத்தவரை, அன்றிலிருந்து இன்று வரை.. இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் விரோதமாக இருக்கக்கூடிய, அண்ணல் அம்பேத்கர் தந்த ஜனநாயகத்திற்கு எதிராக இருக்கக்கூடிய இதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். SIR ஒரு தீமை! உலகத்தின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக இருக்கக்கூடிய இந்தியாவில், தேர்தல் என்பது ஜனநாயக பரிசோதனை. அந்த ஜனநாயக பரிசோதனையின் வெளிப்படை தன்மையை கேள்விக்கு உள்ளாக்கும் வகையில், அதன் உண்மை தன்மையையும் உறுதித் தன்மையையும் கேள்விக்குள்ளாக்கும் வகை இருக்கும் அனைத்து நடவடிக்கையையும் நாங்கள் எதிர்க்கிறோம்" என்று பேசியிருந்தார்.

இன்னும் கூட அவர் பேசிய பாயிணிட்டுகள் இருக்கின்றன. ஆனால், இதில் எதிலும், எங்கும் ஞானேஷ் குமார் என்கிற வார்த்தையும், டெல்லி போலீஸ், மாணவர்கள் போராட்டம், ஜந்தர் மந்தர், மத்திய அரசு, பிரதமர் நரேந்திர மோடி, மாணவர்கள், இளைஞர்கள் கைது, அடக்குமுறை, பாஜக என ஒரு வார்த்தைக்கூட இல்லை என்று பல்வேறு தரப்பினரும் விமர்சித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+