Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இன்று வெளியாகும் ஐபோன் 17.. மிரள வைக்கும் வசதிகள்.. அது சரி விலையை கேட்டா தான் நெஞ்சு வலிக்குது!

Subscribe to Oneindia Tamil

சென்னை: எப்போதுமே உலகெங்கிலும் மிகவும் எதிர்பார்க்கப்படும் நிகழ்வாக ஐபோன் வெளியீட்டு நிகழ்வு இருக்கும். அதன்படி இந்தாண்டு ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன் 17 சீரியஸை இன்று வெளியிட உள்ளது. இன்றைய தினம் ஆப்பிள் நிறுவனம் எந்த மாடல்களை வெளியிடும்... அதன் வசதிகள்.. என்ன விலைக்கு விற்பனையாகலாம் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

ஒவ்வொரு ஆண்டும் ஆப்பிள் நிறுவனம் செப்டம்பர் மாதம் தான் தனது புதிய மாடல்களை வெளியிடும். அதன்படி ஐபோன் 17 சீரியஸ் இன்று வெளியாக இருக்கிறது. இந்தாண்டு மொத்தம் 4 ஐபோன் மாடல்களை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. ஐபோன் மட்டுமின்றி ஆப்பிள் வாட்ச், ஆப்பிள் ஏர்பாட்களையும் அந்த நிறுவனம் வெளியிட உள்ளது. இந்திய நேரப்படி இன்றிரவு 10.30 மணிக்கு இந்த நிகழ்ச்சி தொடங்குகிறது.

Apple iPhone 17 Lineup to be Unveiled Today Know the Prices Features and other details of 4 models

பேட்டரி

இந்தாண்டு ஐபோனில் பல முக்கிய அப்டேட்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் மாடலில் பேட்டரில திறன் கணிசமாக அதிகரிக்கும் 5,000mAhஐ விட அதிகமாக பேட்டரி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபோனில் இவ்வளவு அதிக பேட்டரி வருவது இதுவே முதல்முறையாகும். ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் மாடலில் 4,685mAh பேட்டரி இருக்கும் சூழலில் அதை விட அதிக பேட்டரி 17 ப்ரோ மேக்ஸில் இருக்கும் என சொல்லப்படுகிறது. அதேநேரம் பெரிய பேட்டரி காரணமாக ஐபோன் எடை அதிகரிக்கும் எனச் சொல்லப்படுகிறது.

அதேபோல ஐபோன் 17 ப்ரோ மற்றும் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் மாடல்களில் vapour chamber தொழில்நுட்பத்தில் புதிய அப்டேட் வரும் என தெரிகிறது. ஐபோன் 15 மாடல்கள் ஓவராக சூடாவதாகப் புகார்கள் வந்த நிலையில், ஆப்பிள் நிறுவனம் வெப்பத்தைக் கட்டுப்படுத்த கிராஃபீன் அடிப்படையிலான தொழில்நுட்பத்தை ஐபோன் 16ல் அறிமுகப்படுத்தியது. இந்த முறை புதிய vapour chamber தொழில்நுட்பத்தை ஆப்பிள் கொண்டு வர உள்ளது.

ஐபோன் கேமரா

மேலும், கேமராவிலும் புதிய மாற்றங்கள் வரலாம். ஐபோன் 16 ப்ரோவில் 5X சென்சார் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, ஐபோன் 17 ப்ரோ மற்றும் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் மாடல்களில் மேம்படுத்தப்பட்ட டெலிஃபோட்டோ சென்சார் வரக்கூடும் கூறப்படுகிறது. மேலும், வழக்கமான ஐபோன் மாடல்களிலும் கேமரா அப்டேட் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

4வது மாடல்

வழக்கமாக ஆப்பிள் நிறுவனம் ஐபோன், ஐபோன் ப்ரோ, ஐபோன் மேக்ஸ் என 3 மாடல்களை வெளியிடும். இந்தாண்டு அத்தோடு சேர்ந்து புதிதாக ஐபோன் 17 ஏர் மாடலையும் வெளியிடுகிறது. இது வெறுமன 5.5 மிமீ தடிமன் கொண்ட மாடலாக இருக்கும். இவ்வளவு மெல்லியதாக இருந்தாலும் கூட இதில் 6.6 இன்ச் பெரிய டிஸ்ப்ளே இருக்கும். மேலும், இதில் சிம் ட்ரே கூட இருக்காதாம். ஈ-சிம் வசதி மட்டுமே இருக்குமாம். இப்படி வடிவமைப்பையே மொத்தமாக மாற்றுவதால் தான் தான் 17 ஏர் இந்தளவுக்கு மெல்லியதாக இருக்க முடிகிறது.

மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐபோன் மாடல்களில் டைட்டானியம் பயன்படுத்தப்பட்டிருந்தது. இந்த முறை மீண்டும் அவர்கள் டைட்டானியத்தில் இருந்து அலுமினியத்திற்கு மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐபோன் 17 ப்ரோ மாடல்கள் பாதி கிளாஸ், பாதி அலுமினியம் கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விலை என்னவாக இருக்கும்!

ஐபோன் மாடல்களின் விலை குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும், ஐபோன் 17 மாடல்கள் இந்தியாவில் சற்று விலை உயரும் என்று சொல்லப்படுகிறது.. வழக்கமான ஐபோன் 17 மாடல் விலை ₹89,900ஆக இருக்கலாம். புதிய மாடலான ஐபோன் 17 ஏர் ₹95,000ஆகவும், ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் ₹1,64,900ஆகவும் இருக்கலாம் என சொல்லப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+