"புள்ளி" வெச்ச ஸ்டாலின்.. கோலம் போட்ட திருமாவளவன்.. இவ்வளவு இருக்கா.. கையை பிசையும் பாஜக.. என்னாச்சு
திருமாவளவன் மீது ஸ்டாலின் கோபமாக இருப்பதாக பாஜக தரப்பில் கிளப்பி விடப்பட்டு வருகிறது
சென்னை: திமுக - விசிகவுக்குள் தேவையில்லாமல் சிண்டுமுடியும் வேலையில் பாஜகவில் சிலர் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.. இது பல்வேறு விவாதங்களையும் எழுப்பி வருகிறது.
நாடு முழுவதும் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் 50 இடங்களில் ஊர்வலம் நடத்த வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் அனுமதி கேட்டது.
ஆர்எஸ்எஸ் என்பது தடை செய்யப்படாத ஒரு இயக்கம் என்பதால், அனுமதி கேட்டால் தருவது அரசின் கடமையும்கூட...

ஃபர்ஸ்ட் நபர்
எனவே, எப்படியும் தமிழக அரசு, பேரணிக்கான அனுமதியை தந்துவிடும் என்றே எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில்தான், திடீரென விசிக என்ட்ரி ஆனது.. ஆர்எஸ்எஸ் பேரணி கேட்ட அதே நாளில் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் மனித சங்கிலியை அறிவித்தார்.. இதற்கு இடதுசாரி கட்சிகள் முதல்நபராக ஆதரவு தெரிவித்தன.. பின்னாடியே வந்த சீமானும், தன்னுடைய முழு ஆதரவை வழங்கினார்.. ஆனால், ஒரே நாளில் இந்த 2 அமைப்புகளுக்கும் அனுமதி வழங்கினால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக சொல்லி ஆர்எஸ்எஸ் பேரணிக்கு முதலில் அனுமதி மறுக்கப்பட்டது.

குட்டை
இதனால் பாஜகவினர் கொந்தளித்துவிட்டனர்.. மொத்த கோபமும், திருமாவளவன் மீது திரும்பியது.. உள்ளே புகுந்து குட்டையை குழப்பிவிட்டாரே என்று ஆவேசப்பட்டனர்.. இப்போது பேரணிக்கு அனுமதியை கோர்ட் தந்துவிட்டாலும், ஆரம்பத்தில் முட்டுக்கட்டை போட்டதில் திருமாவளவன் மீது தனிப்பட்ட அதிருப்தியிலும் பாஜக இன்னமும் உள்ளதாக கூறப்படுகிறது.. காரணம், கடந்த வாரம் வரை, ஆர்எஸ்எஸ் அமைப்பு பேரணிக்கு அனுமதி தருவதற்கு அரசுக்கு விருப்பம் இல்லாத நிலையில் கையை பிசைந்து நின்றதாம்.. பேரணிக்கு அனுமதி மறுக்க முடியாது என்றும் சொல்ல முடியாது, ஒருவேளை அனுமதி தந்துவிட்டால், டெல்லியுடன் தேவையில்லாத உரசல் ஏற்படும் என்றும் யோசித்துள்ளது.

கையை பிசைந்த ஸ்டாலின்
அரசின் இந்த குழப்பத்தை கண்டுதான், விசிகவும், இடதுசாரிகளும் முதல்வர் சந்தித்து பேசினார்களாம்.. ஏற்கனவே கடந்த அதிமுக ஆட்சியை பாஜக பி டீம் என்றும் அடிமை அரசு என்றும் திமுக கூட்டணியில் விமர்சித்துள்ளோம்.. அந்த அளவுக்கு விமர்சிக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமியே, இதுபோன்ற பேரணிகளை அனுமதிக்காத கொண்டிருந்த நிலையில், திராவிட மாடல், சமூக நீதி, மதச்சார்பின்மை அரசு என்றெல்லாம் சொல்லி கொண்டிருக்கும் நாமே அனுமதி தந்தால், இதுவே நமக்கு கரும்புள்ளியாக மாறிவிடும் என்று கூட்டணி கட்சியினர் ஸ்டாலினிடம் எடுத்து சொன்னார்களாம்.

திருமாவளவன்
அதற்கு பிறகுதான், தமிழக அரசே எதிர்பார்க்காத வகையில், திருமாவளவன் கோர்ட் வரை சென்றது ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு செக் வைக்க உதவியுள்ளதாக தகவல்கள் கசிந்து கொண்டிருக்கின்றன.. அதுமட்டுமல்ல, நெருக்கடியில் இருந்த நிலையில், திருமாவளவன் கை கொடுத்து உதவியதுடன், சரியான ஸ்கெட்ச் போட்டு, விவகாரத்தை கட்டுப்படுத்தியிருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

நாராயண்
இதனிடையே, தமிழக பாஜகவின் மூத்த தலைவர் நாராயணன் திருப்பதி, திமுக கூட்டணி கட்சிகளை தன்பக்கம் இழுத்து, அந்த கூட்டணியின் மையமாக மாற வேண்டும் என்று திருமாவளவன் நினைக்கிறார், இதனால், திருமாவளவன் மீது ஸ்டாலின் கோபத்தில் இருப்பதாக, நாராயணன் திருப்பதி போன்றோர் குற்றஞ்சாட்டியிருந்தனர்.. இந்நிலையில்தான், விசிக தரப்பில் இதற்கெல்லாம் தெளிவான விளக்கம் தரப்பட்டுள்ளது..

சிந்தனைச்செல்வன்
ஒரு சேனலுக்கு விசிக எம்எல்ஏ சிந்தனைச்செல்வன் அளித்த பேட்டியில், "முதல்வர் ஸ்டாலினுக்கும், திருமாவளவனுக்கும் நல்ல இணக்கமான போக்கு உள்ளது.. இந்த அளவுக்கு நெருக்கமான நண்பர்களுக்கு இடையில் புகுந்து இப்படியான நச்சுக்கருத்தை இவர்களால்தான் சொல்ல முடியும்.. திருமாவளவனின் மணிவிழாவில், பாஜகவுக்கு நெருக்கமாக போய்விடக்கூடாது என்ற அக்கறையினால், முதல்வர் ஸ்டாலினுக்கு திருமாவளவன் ஒரு கருத்தை வலியுறுத்தினார்.. அரசியல் சார்ந்து அப்படியெல்லாம் அறிவுரையை சொல்லலாமா என்பதைவிட, தேச நலனின் தேவையாக இருக்கும்பட்சத்தில் அந்த கருத்தை அவர் முன்வைத்தார்..

காவடி தூக்கவா?
அதற்கு முதல்வர் ஸ்டாலின், இப்படி ஒரு கருத்தை வைக்கிற எல்லா தகுதியும், எல்லா உரிமையும் என்னுடைய சகோதரர் திருமாவளவனுக்கு உண்டு, உங்களை நேசிக்கிறேன். நீங்கள் சொல்லும் கருத்தில்தான் நானும் உடன்பட்டுள்ளேன், நான் என்ன டெல்லிக்கு காவடி தூக்கவா போகிறேன்? தமிழக நலன் சார்ந்த உரிமைகளை கேட்டு பெற போகிறேன்" என்றெல்லாம் சொல்லி, அப்போதைய நிலவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் முதல்வர். எனவே, திமுக - விசிக இரண்டுமே கொள்கை சார்ந்த உறவு கொண்டவை" என்று தெளிவுப்படுத்தி இருந்தார்.

ஸ்கெட்ச்
நேற்றைய தினம், மூத்த பத்திரிகையாளர் ஆர்கே ராதாகிருஷ்ணன், ஒன் இந்தியாவுக்கு ஒரு பேட்டி தந்துள்ளார்.. அந்த பேட்டியிலும், இதை பற்றி தெளிவாக கூறியுள்ளார்.. "விசிக மற்றும் ஆர்எஸ்எஸ் பேரணிக்கும் சேர்த்தே இப்போது அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.. திமுக, விசிக இருவரும் சேர்ந்து ஸ்கெட்ச் போட்டு, ஆர்எஸ்எஸ் பேரணியை தடுத்தது போன்ற ஒரு பிம்பம் கிடைக்கிறதா என்று நீங்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.. நானும் அதையேதான் கேட்கிறேன்.. ஆர்எஸ்எஸ் ஒரு கலாச்சார இயக்கம் என்கிறார்கள்.. அப்படியானால், நாரதகான சபா எத்தனை முறை ஊர்வலம் நடத்தியிருக்கிறார்கள்? மியூசிக் அகாடமி எத்தனைமுறை ஊர்வலங்களை நடத்தியிருக்கிறது? வேற வழியில்லை.. கலாச்சார அமைப்பு என்ற வடிவில், திரைக்கு பின்னால் அரசியல் பணிகளை செய்து கொண்டிருக்கிறீர்கள்.. அதற்கு நீங்கள் பொய்களை சொல்லி கொண்டிருக்கிறீர்கள்..

உசிதம்
அப்படி இருக்கும்போது, திமுக பக்கம் இந்த மாதிரியான ஒரு ஆயுதம்தான் பிரயோகிக்க வேண்டும்.. அதை திமுக நேரடியாக செய்ய முடியாது.. தமிழகத்தை ஆளுகின்ற கட்சியாக உள்ளது.. அதனால் விசிக அதை செய்தது தவறில்லை.. காரணம், ஆர்எஸ்எஸ்ஸின் சித்தாந்தங்களை, சனாதன சித்தாந்தங்களை எதிர்ப்பது விசிகவை பெரிதாக பாய்ந்து எதிர்ப்பது யாரும் கிடையாது.. இப்படி தடை செய்தது உசிதமானது என்றே நினைக்கிறேன்.. காந்தியின் பிறந்தநாளில், நிச்சயம் இப்படி ஒரு அவலம் தமிழகத்தில் அரங்கேற கூடாது, அப்படி அரங்கேறினால், நிச்சயமாக மனித சங்கிலி பேரணிக்கும் அனுமதி தர வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications