சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டேஞ்சரா போச்சே.. பாஜகவில் ஓபிஎஸ்ஸா?.. அந்த 25 தொகுதிகள்.. திமுகவுக்கு உதவிய டிடிவி தினகரன்: லட்சுமி

தேசிய அளவில் முதல்வர் ஸ்டாலின் வலிமை படைத்த தலைவராக உள்ளதாக லட்சுமி கூறுகிறார்

Google Oneindia Tamil News

சென்னை: ஓபிஎஸ் விரைவில் பாஜகவில் சேர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று மூத்த பத்திரிகையாளர் லட்சுமி கருத்து தெரிவித்துள்ளார்,.

திமுகவை பொறுத்தவரை, கூட்டணி உடையாது என்கிறார்கள்.. முக்கியமாக 2 இடதுசாரிகளும் திமுகவை விட்டு போக வாய்ப்பில்லை, அதேபோல, விசிக, மதிமுக, வேல்முருகன் மாதிரியான கட்சிகளும் நிச்சயம் போகாது என்று வலுவாக நம்பப்பட்டு வருகிறது.. அந்தவகையில் திமுக வலுவாகவே உள்ளது.

மற்றொருபக்கம், காங்கிரஸ் கட்சி அதிமுகவுடன் கூட்டணி வைக்கலாம் என்ற சலசலப்பும் ஓடிக் கொண்டிருக்கிறது.. இதனிடையே, பாஜகவுடன் அதிமுகவுக்கான கூட்டணி எப்படி இருக்கும் என்பது குறித்து, மூத்த பத்திரிகையாளர் லட்சுமி கருத்து தெரிவித்துள்ளார்.

ஓபிஎஸ் டீமா? முடியாது! பிரதமரை வரவேற்க அனுமதி மறுப்பு! குஷியான இபிஎஸ் கோஷ்டி! யார் யார் தெரியுமா? ஓபிஎஸ் டீமா? முடியாது! பிரதமரை வரவேற்க அனுமதி மறுப்பு! குஷியான இபிஎஸ் கோஷ்டி! யார் யார் தெரியுமா?

 சலசலப்பு

சலசலப்பு

நம் ஒன் இந்தியா தமிழுக்காக சிறப்பு பேட்டி ஒன்றையும் அவர் தந்துள்ளார்.. அப்போது, டிடிவி தினகரன், ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமி போன்றோரின் அரசியல் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்று நாம் கேள்வியை எழுப்பினோம்.. அதற்கு லட்சுமி சொன்ன கருத்துக்கள்தான் இவை: பாஜக மற்ற மாநிலங்களை போலவே தமிழகத்திலும் அரசியல் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். கவர்னருக்கும் தமிழக அரசுக்குமான மோதல் போக்கு பெரிய அளவில் வெடித்துவிட்டது.. தமிழக அரசை ஆளுநர் விமர்சிக்க துவங்கி உள்ளார்.. தெலுங்கானா ஆளுநரும் விமர்சிக்க ஆரம்பித்துள்ளார். இந்த அதிருப்தி போக போக அதிகமாகவே வாய்ப்புள்ளது..

 தேனி குடும்பம்

தேனி குடும்பம்

இன்று அதிமுக வாக்கு வங்கி அப்படியேதான் உள்ளது.. பாஜகவுடன் கூட்டணி என்றால், 2021, 2019-ல் இருந்த நிலைமை இப்போதும் உள்ளதா என்று தெரியவில்லை.. டிடிவி தினகரனை பொறுத்தவரை, வேறு அரசியல் அவருக்கு கிடையாது.. பாஜகவை எதிரத்து அரசியல் செய்யக்கூடிய நிலைமையில் அந்த குடும்பமே இல்லை.. பாஜகவுடன் இணைந்து செயல்பட தயார் என்கிறார்.. எடப்பாடியுடன் இணைந்து செயல்பட தயார் என்கிறார்.. ஆனால் எடப்பாடி பழனிசாமியை பொறுத்தவரை, டிடிவியோ, ஓபிஎஸ்ஸையோ மீண்டும் கட்சிக்குள் சேர்த்துக் கொள்ளக்கூடிய வாய்ப்பே இல்லை.. கிடைக்கும் கட்சிகளுடன் கூட்டணி என்பதைதான் அவரது பேட்டி தெரியவைக்கிறது..

டிடிவி

டிடிவி

அதிமுகவில் இருந்து, தென்மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் செய்தால், ஓரளவு அவருக்கு செல்வாக்கு கூடலாம்.. ஆனால், பெரும்பாலும் தினகரனின் செல்வாக்கே உள்ளது.. கடந்த முறை தேர்தலை எடுத்துக் கொண்டால், தென்மாவட்ட சமூக ஓட்டுக்கள் திமுகவுக்குதான் போயுள்ளது.. டிடிவி தினகரன் மட்டும் 25 தொகுதிகளில் வாக்குகளை பிரித்துவிடுகிறார்.. அந்த தொகுதிகளில் எல்லாம் திமுக வெற்றி பெறுகிறது.. இனி அதிமுகவுக்கான வாக்குகள் தென்மண்டலத்தில் மேலும் குறையலாம்.. கடந்த தேர்தலிலேயே இன்னொரு முக்கியமான விஷயத்தை நாம் கவனிக்காமல் விட்டுவிட்டோம்.. கடந்த முறை 2021 தேர்தலில் சீமான் 40 லட்சம் ஓட்டுக்களை வாங்கி உள்ளார்..

 சீமான்

சீமான்

இப்போது பாஜக எதிர்ப்பை, திமுக அவ்வளவாக பேசுவதில்லை.. காரணம், ஆட்சி பொறுப்பில் உள்ளதால் பாஜகவை பெரிதாக விமர்சிக்க முடிவதில்லை.. எனவே, பாஜகவை அதிகம் எதிர்த்து பேசி கொண்டிருப்பது சீமான்தான்.. மோடி எதிர்ப்பு பகுதிகளில், சீமானின் பேச்சு எடுபடும்.. அதிமுகவின் முக்குலத்தோர் வாக்குகள், திமுகவுக்கும், சீமானுக்கும் சிதற போவதாக தெரிகிறது.. ஓபிஎஸ் பாஜகவில் சேர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.. கையில் இருப்பது ஒரே ஒரு எம்பி சீட் மட்டும்.. மறுபடியும் சீட் வேண்டும் என்றால், அதிமுகவில் இருந்து கிடைக்காது.. தனித்து நின்றும் போட்டியிட முடியாது.. அதனால், ஓபிஎஸ் பாஜக பக்கம் சேர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றார்.

English summary
Are OPS and TTV Dinakaran standing with BJP and OPS may join BJP soon, says Sr Journalist Lakshmi
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X